குயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘

சிறகு இரவிச்சந்திரன்

கணினி சம்பந்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்தி, அதுவல்லாத ஒரு டேட்டிங், மீட்டிங், காதலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர், காமெடியுடன்..

கதை கொஞ்சம் பாண்டசி ரகம். பெரிய டிபார்ட்மெண்ட் கடையில், ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும். சைட் அடிக்கும் சராசரி வயது, இருவருக்கும். பெண் ஒரு டெடி பேர் எடுக்கிறாள். பையன் ஒரு ஜட்டி பெட்டியை.. ‘பிளாஸ்டிக் பைகள் இந்தக் கடையில் பயன்படுத்தவில்லை’ என்று ஒரு அறிவிப்பு பலகை. சிகப்புக் கலர் அட்டைப் பைகளில், பொருட்கள் தரப்படுகின்றன. வீட்டில், பெண் பையில் பையனின் ஜட்டி! பையன் பையில் பெண்ணின் டெடி பேர். காமெடி இங்கேதான் ஆரம்பம். முழுவதும் உடை கழற்றி விட்டு, பையைத் துழாவி, எதுவென்று பார்க்காமல், போட்டுக் கொள்ள விழையும் பையன், திடுக்கிட்டு குனிய, கையில் டெடி பேர். பெண் ஆசையாக அணைத்துக் கொள்ள, உரசும் ஜட்டி பேக்கிங். பின்நோக்கில், கடையில், பக்கத்தில் இருக்கும் பைகளும், (காதலால்!) ஒட்டிக் கொண்ட அவைகளைப், பிரயாசைப்பட்டு பிரித்து, இருவருக்கும் தரும் கடைக்காரரும்! நிகழ்காலத்தில், வெறுப்பில் பில்லை விட்டெறியும் பெண்ணும், அது சட்டென்று பைக்குள்ளே மறைந்து போவதும், பையன் பையில் அது தோன்றுவதும், பேண்டசி ரகம். பையனும் பெண்ணும் அதைத் தொடர்ந்து துண்டு சீட்டில் செய்திகளைப் பறிமாறிக் கொள்வதும், ‘சந்திப்போமா’ வரையில் வருவதும் கவிதை.

இங்கேதான் இருக்கிறது டிவிஸ்ட். அழகான பெண் தோழி கிடைத்து விட்ட சந்தோஷத்தில், பையை அவளாக பாவித்து, அதன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு, நடனம் ஆடுகிறான் பையன். ஆட்ட வேகத்தில், பை சிக்கி கிழிந்து விடுகிறது. அதற்கப்புறம் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. சோகத்தில், பையடுடன், வாங்கிய கடைக்கு வருகிறான். கடை பூட்டிக் கிடக்கிறது. கிடைத்த தோழியை தவற விட்ட சோகத்தில், எதிரில் இருக்கும் பார்க் பென்ச்சில் அமரும் வாலிபனும், லாங் ஷாட்டில், அதே மாதிரி பையுடன் அமர்ந்திருக்கும் பெண்ணும், முதன்முறையாக முகம் பார்த்துக் கொள்வதும், நெருங்கி கைகளைப் பிடித்துக் கொள்வதுமான, ரம்யமான முடிவு.

குறும்பட இயக்குனர்கள், வெகுஜன படங்களை ஆக்கிரமிக்கும், சமீப காலங்களில், அஸ்வினுக்கும் நல்ல எதிர்காலம் இருப்பதை இப்படம் உணர்த்துகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தைச், சுவாரஸ்யமாக, ‘சொதப்பாமல்’ சொல்ல வேண்டும் அவர். அப்படியான திறமை அவருக்கு இருந்தால், அவரது ‘இன்பாக்ஸில்’ வந்து விழும் தயாரிப்பாளர்களின் ‘ அக்ஸெப்டன்ஸ் ‘

0

Series Navigationகணித மேதை ராமானுஜன் (1887-1920)அறுவடை