கூடு

Spread the love
ஆரத் தழுவி

அநேக நாட்களிருக்கும்

தினம் நூறு முட்டையிட்ட கூடு

சிதிலமடைந்திருக்கிறது

சுள்ளிகள் தெறிக்கப் பறந்துவிட்டன

முத்தப் பறவைகள்.

குஞ்சுகளின் கீச்சொலியும்
வாய் வாசமும் பதுங்கிக்கிடக்கின்றன
சலசலக்கும் இலைகளில்.

உதிரும் ஒவ்வொரு வைக்கோலிலும்
ஊட்டப்பட்ட துணுக்கைப் போல
அன்பும் சிதறுகிறது.
குஞ்சுகளுக்குக் கால் முளைத்ததும்
எங்கே காணாமல் போயின
தந்தைதாய்ப் பறவைகளுமென
யோசித்துக் கொண்டிருக்கிறது மரம்.

Series Navigationதிருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.அழகிய புதிர்