கை மாறும் கணங்கள்

Spread the love

முகராத பூ காற்றின்
வாசத்தோடு பேசிவிடுகிறது

இழுபறி நிலை
இறுதி முடிவிற்குவருகிறது

ரகசியமொன்று நெகிழ்ந்துபோய்
எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது

உதற இயலாதவொன்று
நிழலின் சாயாலாகி அச்சமூட்டுகிறது

யாரும் காணதகணமொன்று
சட்டென கைமாறிவிடுகிறது

பிறகு
சேவல் சிறகை
பூனையின் காலடியில்
காண நேர்ந்து விடுகிறது

Series Navigationகூடிக்களிக்கும் தனிமைவாசிப்பும் வாசகனும்