கோ. கண்ணன் கவிதைகள்.


கோ. கண்ணன்

இருள் சுவை

ஒளி ஊடகத்தின் ஊடாய்
உலாவிடும் நேசத்துக்கு ுரியோரே!
இருள் உபாசகன் ும்மை முன் நிருத்தி
எழுப்பிடும்
ஒற்றைக் கேள்வி இதோ!
நல்லிருளைச் சுவைத்ததுண்டா நீவீர்?
நகைப்புக்கு
உரியதல்ல இருள்.
நாச் சுவை ஆறினும் நனி இனியது;
நவரசம் ஒன்பதினும் நளினம் பொலிவது.

அச்சத்தின் குரியீடல்ல இருள்;
ஆன் பெண் அந்தரங்க மோகன ாலாபனையின்
அரங்கிசை வேளை அது.
வெறுக்கத் தக்கதல்ல இருள்;
இறை காட்சிப் பாதையாம் ….
மோனவெளியின்
முடிவுரா
எல்லையது இருள்.
இருள்?
அது தியான மாளிகையின் திறவுகோள்!
தொட்டனைத்து ஊரும்ஞான கேணியின் உயிர்ப்புடைய மூல ஊற்றது!
ஒளி ொப்பவே அர்ச்சனைக்கும் ஆராதனைக்கும்
கொண்டாட்டத்துக்கும் கோலாகலத்துக்கும் உரித்தானது இருள்.
ஒலி உபாசகரே! ஒளி உபாசகரே!
இறுளை சுவைத்தலும் ோர் கனியே!

இருளை படைத்தலும் பெரும் கலையே.
***

அன்னியமா க்கப்பட்டவனின் ஒற்றைக் குரல்.
ஓஞ்கி ஒலிக்கிரது அந்த ஒற்றைக்குரல்—
பிறர் செவிகளில் விழவேண்டும் என்பதற்க்காகவோ
காற்றில் தன் இருப்பை கலக்க வேண்டும் என்பதற்க்காகவோ
ககனவெளியில் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிடவேண்டும் என்றோ
ஒலிக்கவில்லை அந்த அன்னியமாக்கப்பட்டவனின்
ஒற்றைக்குரல்—
பிறகு ஏன் ஒலிக்கிறது அந்த ஒற்றைக்குரல்?
அவன் அன்னியமாக்கப்பட்டதை—-
அவன் வலியை—
அதன் காரணஞ்களை—-
வெளியரஞ்கம் ஆக்காவிட்டால்—
தானும் அவனது உடலிலிருந்து
அன்னியமாக்கப்பட்டுவிடுவோம் என்பதால் விபரனையாய் விவேகமாய் ஒலிக்கிறது
அந்த ஒற்றைக்குரல்.
***

கிளி மொழி வெளி.
தலை மழிக்கப்பட்ட நண்பரின்
பசும் புல் நிறத் தொப்பியை
மேய்ந்தன நான்கு மான்விழிகள்
தொப்பியை மேய்ந்த குழந்தைகளின் கண்களில்
பச்சைக் கிளிகள் சிறகடித்துப் பறந்திட,
தொப்பிக் கிளிகளை
மீனாட்சியாகி ஏந்திக்
கொள்ளுவது யார்?
என்ற கடும் போட்டி குழந்தைகளிடையே!
கிளிகள் பாவம்.
சிறுவனின் கைகளிலும்
சிறுமியின் கைகளிலுமாய்
ஒற்றைப் பந்தென தாவிக் கொண்டிருந்தன.
நண்பர் தம் தலையைத் தடவியபடி
“தொப்பியிலிருந்த கிளிகள்
தம் தோழரைத் தேடி
வானத்துக் கிளிகளுடன் கலந்துள்ளன,
குழந்தைகளே
என் கிளிகளைத் தேடிக் காணுங்களேன்””
“கண்டரிவாருக்கு பரிசு நிச்சியம்”
என மொழிந்து சாமர்த்தியமாய் தொப்பியை தலையில் அணிந்துகொண்டார்.

குழந்தைகளும் குதுகுலமாய்,
கிளிகளைத் தேடி
கிளிகளாய் மாறி
சிறகு விறித்து
கிளிகளோடு கிளிகளாய்
கிளிகளின் பாடல்களைப் பாடிப் பறந்தன.
அவை இப்போது கவிதைக் கூட்டில்அமர்ந்தபடி
கிளி மொழியில் பேசிக் கொண்டிருக்கின்றன உம்மோடு.

.

Series Navigationஜென் ஒரு புரிதல் பகுதி – 15ஏன் பிரிந்தாள்?