க‌ரிகால‌ம்

Spread the love

இனி வரப்போகும்
பெயரறியா மின்னிக்கென‌
காத்திருக்கின்றன சில கோட்பாடுகளும்,
தத்துவங்களும்…

பழையன தொலைத்துவிட்டு
புதியன புகும் நாழிகைகள் காலத்தை
மொழிபெயர்க்கத்துவங்கிவிட்டன…

கவனங்களின்றி சில‌
பிழைகளின் முகங்கள்
பூசிக்கொண்ட அரிதார‌ங்க‌ள்
உரிந்துவிட்ட‌து…

இய‌ற்கை எக்காள‌மிட்டு
சிரிக்கிற‌து உரிந்த‌ அரிதார‌ங்க‌ளின் மீது…

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationசூர்ப்பனையும் மாதவியும்சில நேரங்களில் சில நியாபகங்கள்.