சலனக் குறிப்புகள்

நீச்சல்காரன்

எரிகிற கொள்ளியில்
சுள்ளிகள் எடுத்து
எரிக்க முனைந்தால்
பொசுங்கியது ஆசை

இது தான் வெற்றியென்று
முடித்துக் கொள்ள
முடியாமல் வெற்றிகரமாக
தோல்வி கொள்கிறேன்

கொதிக்கும் நீரில்
குதித்தாடும் குமிழ்கள்
வாய்பிளந்து மரணத்தை
குடிக்கும்

கற்பூரத்தை சர்க்கரை
என நிருபிக்க
சொன்ன பொய்கள்தான்
அதை காற்றிலே கரைத்துவிட்டது

புதிராக இருந்தாலும்
ஒரு திசை போதும்
மற்றவற்றை காட்டிக்கொடுக்க

திறந்திருந்த ஒன்றை
திறந்து வைத்தவர்
யாரென்கிறது
ஆற்றுப் பாலத்து கல்வெட்டு

ஊரெல்லாம் தூங்கிக்
கொண்டிருக்க மனித இனத்தையே
உலுப்பியது அலார ஒலி

Series Navigationஜுமானா ஜுனைட் கவிதைகள்பஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்