சாதிகள் வேணுமடி பாப்பா

“எல ஒரு சாமிய கும்பிட்டா
கும்பிட்ட மாரியா இருக்கும்?….இப்டி
பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்.”

“யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ
பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ பாக்காம‌
என‌த்தான் ச‌ன‌த்தான்னு குறி பாத்து
த‌ஸ்தாவேஜி போடுதாம்லா
அதப்பாருலெ”

“அதுக்கு நாம‌ என்னெழ‌வ்லே செய்ய‌து.
க‌வ‌ர்மெண்டே குத்ர‌ ப‌ச்ச‌டே இது.
எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ அப்டி
எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ இப்டி
எலே நாளக்கி ஓட்டு வேணும்லாலே
துட்டு எடுக்க‌ணும்னா ஓட்டு வேணும்லே
ஓட்டு வேணும்னா சாதி வேணும்லே.”

“அவ்வொ வ‌ந்தாவ‌ இவ்வோ வ‌ந்தாவ‌
எல‌ எவ்வொ வ‌ந்தாலும்
சாதியும் வ‌ரும்லெ.”

“சாதி இரண்டொழிய வேறில்லைன்னு
சொல்லியிருக்காவ்ளே…”

“அந்தாக்லெ பொடதிலெ ரெண்டு வச்சேண்ணா
எல உனக்கும் எனக்குமாலெ அது.
ஆங்க்…
அங்ஙன வச்சு ஒரு மீட்டிங்லெ
ஒருத்தன் சொன்னாம்லே அர்த்த‌ம்
ஒண்ணு வாங்க்ர‌ சாதி
ஒண்ணு குடுக்குர‌ சாதி.
அவ்வ‌யா சொன்ன‌த‌
அவ‌னுவ‌ளும் இப்டிதாம்ல‌ சொன்னாங்க‌.
ஆபீசுக‌ள்ள‌ போயி பாருன்னாங்க‌.”

“அப்றம்”.

“அப்ற‌ம் என்னால‌ அப்ற‌ம்.
அப்ற‌ம் வீட்டுக்கு வ‌ரும் போங்க்லென்டாங்க‌..”

………….
………….

“எல‌ மூதி மூதி.
இங்க‌ என்ன‌லெ ப‌ண்ணுதெ
அங்கெ க‌ள‌னி நாறிட்டு ருக்கு.
சாணிய‌ போட்டுட்டு
க‌ளினிய்ய‌ தூக்கிட்டுப்போல‌
கூறுகெட்ட‌ மூதி.”

ஒண்ணு நாறுதுண்ணு
இன்னொரு நாத்த‌த்த‌
ப‌ரிமாத்த‌ம் ப‌ண்ணிக்கிருது தான்
ந‌ம்ம‌ தேச‌த்து ப‌ழ‌க்க‌ம்

சாதியும் சாமியும் அப்ப‌டித்தாம்லெ

த்ருனெலிக்கார‌ங்க‌ ரெண்டுபேரு
பேசிகிட்ட‌
ந‌ம்ம‌ அர‌சிய‌ சாச‌ன‌ம் இதான்.

Series Navigationபாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்முன்னணியின் பின்னணிகள் – 32