சித்தி – புத்தி

முச்சந்தி கோபுரத்தின் முகப்பில்
சித்தியும் புத்தியும்,பிள்ளையாரின்
தோள்களில் சாய்ந்திருப்பது போல்,
ஆறுதலான தோள்கள் எங்கே ?

காலங்கள் மாறியது
காட்சிகள் மாறியது
தோள்கள் தென்படாமலேயே ..
துவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது –
பிள்ளையாராக மாறிவிட்டால் என்ன ?

தன்நிறைவான இருப்பில்,
சித்தியென்ன புத்தியென்ன
எவருக்கெனும் ஆறுதலாக இருக்க முடிகிற
பிள்ளையாராகி விட்டால் தேடுதல் நிற்குமே!

பிள்ளையாராக இருக்கவே
பிறக்கிறார்கள் சிலர்
புரிகிற கணத்தில்
பிறக்கிறது வாழ்க்கை

 

Series Navigationசெல்லம்மாவின் கதைவிடாமுயற்சியும் ரம்மியும்!