சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது

Spread the love
அன்பின் ஆசிரியருக்கு,

இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா நேற்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில், கடந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும், சான்றிதழும், பணப்பரிசும்’ கிடைக்கப்பெற்றது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் !நடுங்கும் ஒற்றைப்பூமி