சில்ல‌ரை

Spread the love

சில்ல‌ரை நாண‌ய‌மே நீங்க‌ளும் பெண்க‌ளோ
ஒன்றாய் இருந்தால் க‌லக‌லப்புச் ச‌த்தந்தான்
பெண்க‌ள்போல் வ‌ட்ட‌மான‌ அழ‌கிய‌ முக‌முட‌ய‌ உங்க‌ள்
த‌லைக்குப் பின் தானே பூ இருக்கிற‌து
ம‌ங்க‌ய‌ர்போல் ம‌க‌த்தான‌ ப‌க்திகொண்ட‌ உங்க‌ள்
காணிக்கையால் கோவில் உண்டிய‌ல் நிரைகிறது
மாதர்க‌ள்போல் இர‌க்க‌ குண‌முட‌ய‌ உங்க‌ளால்தான்
பிச்சைக்காரர்க‌ள் வாழ்க்கையும் உருள்கிற‌து
ஆனால்
சிறுவிச‌ய‌த்துக்காக‌ பெரிதாக‌ ச‌ண்டையிட்டால்
சில்ல‌ரைத்த‌ன‌ம் என்று சொல்லுவதேன்?
இதுவும் பேதைய‌வ‌ர் குண‌ம்தானோ!

பா. திருசெந்தில் நாதன்

Series Navigationமன்னிப்பதற்கான கனவுநிலா மற்றும்..