செதில்களின் பெருமூச்சு..

*
பிடித்து உலுக்கும் கனவின் திரையில்
அசைகிறது உன் நிழல்

நீயுன் தூண்டில் வீசிக் காத்திருக்கிறாய்
என் உரையாடலின் உள்ளர்த்தம்
சிக்குவதற்கு

மரப்பலகைகள் வேய்ந்த பாதையில்
ஈரம் மின்னும் அந்தியின் இளமஞ்சள் நிறம்
இந்த அறையெங்கும் பரவிய
ரகசியத்தின் சங்கேதக் குறிப்புகளை
தேடிச் சலிக்கிறேன்

மூழ்குகிறது அகாலம்..

சின்னஞ்சிறிய நோக்கும் கூர்மையில்
கசியும் கானல் குட்டையில்
நீந்துகிறது நமது கண்கள்

யாவுமே செதில்களின் பெருமூச்சென
எழுதித் தருகிறாய்
இந்த மௌன இரவில்..

*****
–இளங்கோ

Series Navigationமலைகூட மண்சுவர் ஆகும்பிணம் தற்கொலை செய்ததுவாசல்