ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை

This entry is part 5 of 9 in the series 31 மே 2020

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்று
என ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்
ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும்மொழியாகி , கொஞ்சம்கொஞ்சமாக வெறும்பேச்சு மொழியாக மாறி வருகிறது.  தமிழ் பத்திரிக்கைகள் அழிந்து வருகின்றன.  தமிழ் வாசிக்கத் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது
  பன்மொழிப்புலவர் மு.ஜகந்நாதராஜா மொழி பெயர்த்த நாகானந்தம் நூலை படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது
   தமிழை தாய்மொழியாக கொள்ளாத ஜகந்நாதராஜா போன்றவர்கள் , தமிழை ஆர்வத்துடன் கற்று நிபுணத்துவம் பெற்று பல்வேறு தமிழ் நூல்களை எழுதிய காலம் இருந்தது;
அவரெல்லாம் தெலுங்கு இலக்கிய உலகிலும் பிரபலமானவர். தெலுங்கு மேடைகளில் பேசுகையில் தமிழை உயர்வாக பேசுவார்.  தமிழ் நூல்களை நேரடியாகவோ மொழிபெயர்ப்புகளையோ படிக்க வேண்டும் என்பார்
இவரைப் போன்றவர்கள் அல்லவா நாயகர்களாக கொண்டாடப்பட வேண்டும்
நமக்குள்ளேயே தமிழின் உயர்வைப்பற்றி பேசி பயனில்லை. பிற மொழி ஆளுமை பெற்று பிறரிடம் நம்மை உயர்வாக பேச வேண்டும்
நம்முடைய தலைவர்களோ தமிழை உயர்வாக மேடைகளில் பேசி விட்டு , ஆங்கிலக்கல்வியை தம் வாரிசுகளுக்கு அளிக்கிறார்கள். ஆங்கில வழி பள்ளிகள் நடத்துகிறார்கள். இவர்களைத்தான் நாம் கொண்டாடுகிறோம்
தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய, “பாரதி காலமும் கருத்தும்’ என்ற நூலை சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்த இவரை எப்படி எல்லாம் கொண்டாடி இருக்க வேண்டும்

இவரைப்போன்ற ஒரு பன்மொழி வித்தகர் . பல அரிய,பிறமொழி நூல்களை தமிழுக்கு கொணர்ந்த இவர் தமிழையும் பிற மொழிக்கு கொண்டு சேர்த்தார்
இவர் மொழி பெயர்த்த திருக்குறள் மற்றும் புறநானாறு தெலுங்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது
முத்தொள்ளாயிரம் நூலை அனைத்து திராவிட மொழிகளிலும் இவரே மொழி பெயர்த்து வெளியிட்டார்
இவரது மொழி பெயர்ப்பு நூலககளில் சில பின்வருமாறு
1 கன்யா சுல்கம், 1963, பாரி நிலையம், சென்னை.2.    சேரி , 1984, சாஹித்ய அகாடமி, டெல்லி3.    ஆமுக்த மால்யத, தெலுங்குப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்4.    வேமனா, 1992, பாரி நிலையம், சென்னை5.    களாபூரணோதயம் (தெலுங்கு காவியம்), தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு6.    சுமதி சதகம்7.    தேய்பிறை8.    கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்9.    காதா சப்த சதி , 1981, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்10. வஜ்ஜாலக்கம் (பிராகிருத மொழி அறநூல்)2005, தமிழினி, சென்னை 1411. கர்பூர மஞ்சரி (பிராகிருத மொழி நாடகம்)12. சன்மதி சூத்திரம் (சமண தத்துவம்)13. தீகநிகாயம் (பௌத்த தத்துவம்), சுந்தர நிலையம், சென்னை14. உதானம் (பௌத்த தத்துவம்)15. மிலிந்தா பண்ஹா (பௌத்த தத்துவம்) (மினாந்தரின் கேள்வி)16. விக்ஞப்தி மாத்ரதா சித்தி (பௌத்த தத்துவம்)17. ஔசித்ய விசாரசர்ச்சா வடமொழித் திறனாய்வு நூல், 1989, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்18. நாகானந்தம் – வடமொழி நாடகம் (1992, பீக்காக் பதிப்பகம், சென்னை19. குந்தமாலா – வடமொழி நாடகம்20. சாணக்ய நீதி வடமொழி நீதிநூல் 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்21.  சாருசர்யா வடமொழி நீதிநூல்22. சாதன ரகசியம் – வேதாந்த நூல்அனுபவானந்த கிரந்தமாலா, பாபட்லா (ஆந்திரா)23. சிவசரணர் வசனங்கள்24. பம்ப்ப பாரதம் (கன்னட காவியம்)25. பிரேம கீதம் – மலையாளக் கவிதை26. மகாயான மஞ்சரி, 2007, பவுத்தக் கல்வி மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
இவற்றைத்தவிர தமிழில் இருந்து பிறமொழி பெயர்ப்பு , நேரடி படைப்புகள் எனவும் ஏராளம்
சான்றுக்கு சில..

1 கற்பனைப் பொய்கை – கவிதைத்தொகுப்பு (1972)
2. தரிசனம் – வசன கவிதை (1972)
3. காவிய மஞ்சரி – குறுங் காவியங்கள் (1986)

4. சிலம்பில் சிறுபிழை – இலக்கியத்திறனாய்வு (1968)

5. வான் கலந்த வாசகங்கள் – வானொலி உரை (1980)

6.தமிழும் பிராகிருதமும் (1992)

7. மணிமேகலை

8. இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994)

9. வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு

10. தமிழக – ஆந்திர வைணவத் தொடர்புகள்
11. ஆபுத்திர காவியம்
12. தெரு – புதுக் காவியம்
13. பிஞ்சுக் கரங்கள்
14. ராஜுக்கள் சரித்திரம்
15. திராவிட மொழிகளில் யாப்பியல்
16. கவித்தொகை
17. அறிவுக் கதம்பம் – வானொலி உரை (1993)
சாகித்ய அகாதமி விருது பெற்றவர் இவர்
இவர்களைப் போன்றோரைப்பற்றி பேசிக் கொண்டே இருந்தால்தான் ,தமிழ் தன் மண்ணில் அழியாமல் பாதுகாக்கப்படும். தன் எல்லைகளை கடந்து எங்கும் பரவும்
நமக்கு இன்று தமிழ் பிழைப்புவாதிகள் அல்லர். ஜகந்நாதராஜாக்கள் தேவை

Series Navigationநம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லைநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.
author

பிச்சைக்காரன்

Similar Posts

7 Comments

  1. Avatar
    BSV says:

    இக்கட்டுரையைக் கண்டவுடன் ”என்ன ஜகன்னாத ராஜாவுக்கு என்ன ஆச்சு?” என்ற பயம்தான் வந்தது. திடீரென ஒருவரைப்பற்றி எழுத ஏதாவது காரணம் வேண்டும். போனவாரம் நாவலாசிரியர் வெங்கடராம் பற்றிய கட்டுரை இங்கு வந்தது. அவரின் நூற்றாண்டு நினைவு காரணம். அவருக்கும் தாய்மொழி தமிழில்லை.

    ஜகன்னாத ராஜா யார்? எங்கு பிறந்தார்? வளர்ந்தார்? அவருக்குத் தாய்மொழி தெலுங்கு என்று சொல்லிவிட்டால் போதுமா?

    ஒருவரைப் புகழ இன்னொருவரை இகழ வேண்டிய தேவையில்லை. பலவிடங்களில் தமிழ் ஆர்வலர்களை இகழ்கிறார் கட்டுரையில்.தமிழ் பிழைப்புவாதிகள் ஒருபக்கம் இருந்தாலும் தமிழை விரும்பி அதைப் பரப்ப ஆசைப்பட் உண்டு. ஆசைப்பட்ட தமிழ் ஆர்வலர்களும் தமிழ்க்காதலர்களும் எப்போதும் உண்டு. அவர்களுள் ஒருவர்தான் பாரதியார். தமிழ் பிழைப்புவாதியா அவர்?

    தமிழ் என் மூச்சு அதை பிறரிடமும் விடவேண்டுமென்றார் பாரதியார். எப்படி? இப்படி…

    ”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்,

    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும் வகை செய்தல் வேண்டும்.

    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

    திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.” என்று ஓங்கியுரைத்தார் பாரதியார்.

    தமிழைப் பிறரிடம் கொண்டு செல்ல மாட்டேன் என்றால் (தமிழ் என் மூச்சு; அதைப் பிறர் மேல் விட மாட்டேன்!” என்றாலதுதான் பொருள்) தெருவெல்லாம் தமிழ் முழக்கம் எப்படி செய்ய முடியும்? தேமதுரத் தமிழோசை உலமெல்லாம் எப்படி கேட்க முடியும்? வெளினாட்டார் தமிழே தெரியாமல் எப்படி வணக்கம் செய்வார்கள்?

  2. Avatar
    BSV says:

    ஜகன்னாத ராஜா என்பவர் ஒருவரே. ஆனால் ஜகன்னாத ராஜாக்கள் என்ற பன்மையில் தலைப்பு. ராஜாக்கள் என்பவர்கள் தெலுங்கு இன மக்கள். கரிசல் காட்டு பகுதியில் வந்து குடியேறியவர்கள். இவரைத் தவிர நான் வேறு எந்த தமிழறிஞர்களும் ராஜாக்களிடமிருந்து வந்ததாகத் தெரியவில்லை. எப்படி பன்மை வரும்? அதே சமயம், தமிழ்னாட்டு முதலமைச்சாரகவே அந்த இனத்திலிருந்து வந்தவர்தான் குமாரசாமி ராஜா. அவர் தமிழறிஞர் இல்லை.

    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழறிஞர்கள் ஏராளம். மாபெரும் தமிழறிஞரான பரிதிமாற்கலைஞரே ஒரு தெலுங்கு பிராமணர். தமிழ்னாட்டில் பல தலைமுறைகளாக வசிப்போர் தமிழில் ஆர்வலராகவும் அறிஞர்களாகவும் இருப்பதில் வியப்பில்லை.

    இக்கட்டுரையில் பிற்பகுதியில் பட்டியலிடப்பட்ட நூல்களில் எண்ணம் 10 – தமிழக – ஆந்திர வைணவத் தொடர்புகள்- என்ற நூல் என்னிடம் உள்ளது. எத்தனை முறை வாசித்தேன் என்ற கணக்கே இல்லை. ராஜா என்ற பெயரைப்பார்த்துதான் நான் வாங்கினேன். காரணம்; தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு அம்மொழியில் புலமை பெற்ற ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட நூலை எழுத முடியும். தெலுங்கு-தமிழ் வைணவத்தொடர்பை, சங்ககாலத்தில் தொடங்கி ஆழ்வார் பாசுரங்கள் வழியாக பெரும்புலமையோடு விளக்குகிறார். ஜகன்னாத ராஜா தஞ்சைத் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்.

  3. Avatar
    பிச்சைக்காரன் says:

    ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுப்பதற்கு மகிழ்ச்சி.
    ஒரு வார இதழின் அட்டையில் ஒரு அரசியல் தலைவர் , நடிகர் , கவர்ச்சி நடிகை இடம்பெற்றால் இயல்பாக எடுத்துக் கொள்வோம். ஓர் இலக்கியவாதி படத்தை பார்த்தால் அய்யய்யோ என்ன ஆச்சு இவருக்கு பதறுவோம். அல்லது”விருது ஏதேனும் வாங்கி இருக்கிறாரோ என நினைப்போம். ஒரு நடிகனை , கட்சிக்காரனை தினம்தோறும் பேசலாம். ஆனால் இலக்கியவாதியை பேச, அவன் சாக”வேண்டும் அவ்லது நூற்றாண்டு விழா, விருது என்பது போல ஏதேனும்் நிகழ வேண்டும். இதுதான் நம் இயல்பு. உவேசா வையே பிறந்த நாளிலோ , நினைவு தினத்திலோதானே பேசுகிறோம். அரசியலையும் சினிமாவையும்தானே கொண்டாடுகிறோம். சான்றோர்களையும் அப்படி நேரம்காலம் பாரக்காது கொண்டாட வேண்டும் என்பதை நீண்ட காலமாக கடைபிடிக்கும் திண்ணை இதழ் பிரத்யேக காரணங்கள் ஏதுமின்றியே ஜகந்நாதராஜா கட்டுரையை பிரதான கட்டுரையாக வெளியிட்டிருப்பது ஆச்சர்யம் இல்லை. பல இலக்கிய இதழ்களிலேயே தற்போது அரசியல்தலைவர்கள்தான் வியந்தோதப்படுகின்றனர். பாரதியாரும் பன்மொழி வித்தகர்தான். பிறநாட்டு கலைச்செல்வங்களை கொண்டு வந்து சேருங்கள். திறமை எங்கிருந்தாலும் மதியுங்கள் என்றார். தமிழை உலகமெங்கும் பரப்புவதற்கு தேவையான பிறமொழி ஞானம் அவரிடம் இருந்தது. மொழி காழப்பு அவரிடம் இல்லை. ராஜாக்கள் சமூகத்தின் பங்களிப்பு,என்று விவரித்து இதை சாதீய விவாதமாக மாற்றலாகாது. அதை தனியாக பேச வேண்டும். நமக்கு தேவை காந்திகள் கிடைப்பதோ கோட்சேக்கள் என பெயர்ச்சொல்லில் பன்மையை பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளதுதான்

  4. Avatar
    பிச்சைக்காரன் says:

    “ஜகன்னாத ராஜா யார்? எங்கு பிறந்தார்? வளர்ந்தார்? அவருக்குத் தாய்மொழி தெலுங்கு என்று சொல்லிவிட்டால் போதுமா?”
    கண்டிப்பாக போதாது.. இது ஒரு அறிமுக கட்டுரை மட்டுமே.. அவர் அமைத்த நூலகம் , இலக்கிய மன்றம் , அவரது இலக்கிய குரு , பிறப்பும் வாழ்வும் என ஏராளம் பேசலாம். பேசவேண்டும் . பேசுவோம்.
    அதுமட்டுமின்றி , மேலும் பல அறிஞர்களை சான்றோர்களை , அவர்கள் சாவதற்காக காத்திராமல் , நூற்றாண்டு விழா , பிறந்த நாள் என காத்திராமல் , அவ்வப்போது கொண்டாடுவோம். வணிக சினிமாக்களையும், கட்சிக்காரர்களையும் கொண்டாட பலர் உள்ளனர். நாமாவது மேதைகளை , நல்லோர்களை , கலையை , தமிழை கொண்டாடுவோம்

  5. Avatar
    BSV says:

    இலக்கியவாதிகள் செலப்ரட்டிகள் கிடையா. அப்படி ஆகவேண்டுமென்ற ஆசையிருப்போர் இலக்கியம் தாண்டி சில செயல்கள் செய்வார்கள், எடக்குமடக்காக எதையாவது சமூகக் கருத்தை உளறி லைம் லைட்டில் வரத்துடிப்பார்கள். மக்கள் போற்றும் ஒரு பெரிய ஆளுமையை அசிங்கமாகத் திட்டுவார்கள். பெண்கள் எழதுவது குப்பை என்பார்கள் அல்லது சினிமாவில் காலடி வைப்பார்கள். மற்றபடி, அவர்கள் பாமர மக்களைப் போலத்தான். விருதுகள் கிடைக்கும்போது பத்திரிக்கைகளில் ஒரு கொசுறு செய்தியாகும்; சிலர் பாராட்டுக்கூட்டங்கள் நடாத்துவார்கள். அந்த கூட்டத்திலும் பத்து பேர்தான் உட்கார்ந்திருப்பார்கள். நடிகர்கள்; நடிகைகளைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது.

    உலகமெங்கும் உள்ள பொதுவான வாடிக்கை இது. நடிகர்கள்; நடிகைகள்; விளையாட்டு வீரர்கள் – இவர்கள்தான் மக்களின் ஹீரோக்கள். யாரை நாம் குறை சொல்ல முடியும்? சாமி படங்களையும் இலக்கியவாதிகள் படங்களையும் போட்டால் பத்திரிக்கை விற்குமா? நூறு குடும்பங்களுக்குச் சோறுபோடும் பத்திரிக்கையை எப்படி நடாத்துவது சார் ? பசிக்குமே!

    ஜகன்னாத ராஜா யாரென்று எனக்குத் தெரியும்; பிச்சைக்காரனுக்குத் தெரியும். திண்ணை வாசகர்களுக்குத் தெரியுமா? அதற்காக அவர்களைக் கடிய முடியுமா? இலக்கியம் சமூகத்தில் எதுவரை பாயும் என்பதைத் தெளிந்துகொண்டால் இப்படிப்பட்ட மதிமயக்கம் (அய்யோ ஒருவருக்கும் இவரைத் தெரியவில்லையே! என்பது) வராது.

    செல்வராஜ் என்றால் யாரென்று எவருக்குமே தெரியாது. சாகித்ய அகாடமி ‘தோல்’ என்ற நாவலுக்குப் பெற்ற பின்புதான் தெரிந்தது. அது கூட கொஞ்ச நாளைக்குத்தான்.

    இலக்கியம் என்ப‌து சீரியஸ் மேட்டர். பாமர மக்கள் சீரியசான வாழ்க்கை வாழ விரும்பவில்லை. ஜகன்னாத ராஜா எழுதியவை அனைத்துமே சீரியஸ் மேட்டர்ஸ். தமிழறிஞர்கள்; ஆர்வலர்கள்; புலவர்களுக்கானவை. எனக்கு கொஞ்சம் செந்த‌மிழ் இரசனை உண்டென்றபடியால் இந்த மாதிரி ராஜாக்களை அவ்வப்போது தேட வேண்டியதாகிறது. மற்றபடி நான் தமன்னா பாட்டியாவின் இரசிகன்தான்.

    1. Avatar
      பிச்சைக்காரன் says:

      நானெல்லாம் தமன்னா நடிக்க வருவதற்குமுன் பு மாடல் ஆக இருந்த காலத்தில் இருந்தே ரசிகன். இப்போதும் ரசிகன். கனவில் அவர் வந்தால் அடுத்த நாள் அவரைப் பற்றி ஏதேனும் எழுதுவேன். நண்பர்கள் ரசிப்பார்கள். ஆனால் யாரேனும் அறிஞர்கள் பற்றி இலக்கியவாதிகள் பற்றி எழுதினால் , இப்போது ஏன் அவரைப் பற்றி எழுதுகிறாய்? அவருக்கு ஏதேனும் ஆகி விட்டதா என பதறுகிறார்கள். அடடா. தப்பாக பேசி விட்டோம் போலயே என குழம்பிப்போய் மீண்டும் தமன்னா , காஜல் , இலியானா என எழுத ஆரம்பிக்கிறோம். மற்றவர்கள் அப்படி எதிர்வினை ஆற்றுவது இயல்புதான். விஷயம் தெரிந்த , வாசிப்பு சுவை அறிந்த,இலக்கிய ஞானம் மிக்க திண்ணை வாசகர்கள் பிறரைப் போல இருக்கலாகாது.

  6. Avatar
    BSV says:

    //நான் தமன்னா பாட்டியாவின் இரசிகன்// என்ற வாக்கியத்தின் பொருள் மக்கள் அறிவு ஜீவித்தனமான வாழ்க்கை வாழ மாட்டார்கள்; விரும்புவதுமில்லை. எக்காலத்திலும் எந்த தேசத்திலும் இதுதான் உண்மை. பிச்சைக்காரனாலும் பணக்காரனாலும் இம்மனித வாழ்க்கை உண்மையை மாற்றவே முடியாது.

    சாக்ரடீஸ் வாழ்ந்த, அதற்கு முன்பும் கூட – கிரேக்கத்தில் பலபல தத்துவஞானிகள் தோன்றிக் கொண்டே இருந்தார்கள்;, மக்களோ அவர்களைச் சட்டை பண்ணவில்லை. கிரேக்க நாகரிகம் அழிந்த பிறகு ”மறுமலர்ச்சி” (Renaissance) காலத்தில்தான் கிரேக்க தத்துவஞானிகள் படிக்கப்பட்டார்கள்.

    கிரேக்கர்கள் அப்போது தங்கள் குழந்தைகள் கெட்டுப் போய்விடக்கூடாதென்று அறிஞ்ரக்ளிடம் இருந்து விலக்கினார்கள். சாகரடீஸ் கொல்லப்பட்டதன் காரணமே பெற்றொர்களின் புகாரினால்தான். இளைஞர்களைக் கெடுக்கிறான்.

    தத்துவஞானிகளை ‘பைத்தியக்காரர்கள்’ என்பவர்கள் மக்கள். இப்படிப்பட்ட மக்களிடையே, ”என்னைப் புரியும் மனிதனை’த் தேடுகிறேன் என்று கையில் விளக்குடன் பகலில் அலைந்தார் டயோஜீன்ஸ். அவரைக் கண்டு மிரண்டு ஓடினார்கள்.

    ஸோஃபிஸ்ட்கள் நடாத்திய கல்லூரிக்குப் போனால், வாழ்கை என்னவென்று தெரியாது; கனவுதான் வாழ்க்கையாகும் என்று ஊரே சொல்லியது. இன்று கூட சோஃபிஸ்ட்ரி என்றால் ஏமாற்று என்று பொருள்.

    தமிழ்னாட்டில் வள்ளலார் ஒரு பைத்தியக்காரன் என்று பார்க்கப்பட்டார். எனவே அவர் அழுதார்: ‘கடைவிரித்தேன்; கொள்வாரில்லை” குஜராத்தில் அமெரிக்க புகழ்பெற்ற கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்கை போலீஸ் அடித்து துவைத்து ஜெயிலில் போட அதை அறிந்த குஷவந்த் சிங் முதலமைச்சருக்கு போன் போட்டு காப்பாற்றினார்.

    நான் கற்றவரையில், எந்த சமூகத்திலும் பாமர‌ மக்கள் அறிவுஜீவிகள் அல்லவே அல்ல‌. அதெல்லாம் வெட்டிவேலை என நினைப்பவர்கள்.

    உழைத்தால்தான் சாப்பாடு. இலக்கியம்படித்தால் பானையில் உலை வைக்க அரிசி இருக்காது. யார் அறிவாளிகள்? மக்களா? நீங்களா? It is practical wisdom to know your limits. Be humble and accept your limitations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *