டோண்டு ராகவன் – அஞ்சலி

சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நான் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனாலும் அவரை அறியும்
வாய்ப்பினைப் பெற்றேன். மிகவும் துணிவுடன் களத்தில் நின்று சளைக்காமல் தமது கருத்தை நிறுவப்
போராடியவர். அது இணைய தளமாகத்தான் இருக்கட்டுமே! அதற்கும் துணிச்சல் வேண்டித்தானே
இருக்கிறது! எத்தனை கேலி கிண்டல் இழிவுகளையும் துடைத்துப் போட்டு நிற்பவர் என்று அறிவேன்.
மகர நெடுங்குழைக் காதர் அவரைப் பார்த்துக்கொள்வார்.
நான் ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தபோதே என்னுடைய தீவிர வாசகர்களீல்
ஒருவராக இருந்தவரை இழந்துவிட்டேன்.
பிறந்துவிட்ட எவரும் ஒரு சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தே தீர வேண்டும். அது சாசுவதமானது. தமது
பணியைச் சரியாகச் செய்து முடித்த பிறகே நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார். நாமும் அவருக்கு
நல்லமுறையில் விடைகொடுப்போம்.
ஸ்ரீ கோவிந்த கருப், திருமலை ராஜன் இருவரையுமே நேரில் பழகாவிடினும் அறிந்துள்ளேன். அவர்கள்
வாயிலாகவே இத்தகவல் தெரிய வந்தது.
அன்புடன்,
மலர்மன்னன்

Series Navigationஅக்னிப்பிரவேசம்-22தலிபான்களின் தீவிரவாதம் சரியா