திமுக அவலத்தின் உச்சம்

திமுக அவலத்தின் உச்சம்
This entry is part 32 of 32 in the series 24 ஜூலை 2011

திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

முதலமைச்சராக இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஒரு கும்பல் கைதட்டும் என்பதற்கு இந்த வரிகளே உதாரணம். சங்கரமடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மகன் அல்ல ஜெயேந்திரர். ஜெயேந்திரரின் மகன் அல்ல விஜயேந்திரர். எந்த சங்கரமடத்திலும் மகன் பதவி ஏற்பதில்லை. திருமணம் செய்த பின்பு வாழ்க்கை வாழ்ந்த பின்பு சன்னியாசம் வாங்கிகொண்டு ஜீயர்களாக ஆகும் ஜீயர் மடங்களிலும் மகன்கள் பதவிக்கு வருவதில்லை. ஆனால் சங்கரமடமா என்று கேட்ட திமுகவின் நிலை கேவலத்திலும் கேவலமாக அசிங்கத்திலும் அசிங்கமாக பொதுக்குழுவா பொதுகக்கூசா என்று கேட்கும் வண்ணம் அசிங்கப்பட்டு கிடக்கிறது.

இது கடுமையான வார்த்தைகள் அல்ல. ஒரு காலத்தில் திமுகவின் ஆதரவாளர்களாக இருந்தவர்களின் குமுறல் இது. காலம் காலமாக கருணாநிதியே தலைவராக இருந்ததை கூட ஒருவிதத்தில் அங்கீகரித்துகொண்டு சென்ற திமுகவினர் இன்று கருணாநிதியின் இரு மகன்களே பட்டத்து இளவரசர்களாக சண்டை போடும் காட்சியை பார்த்துகொண்டிருக்கிறார்கள். சிந்திக்கட்டும். திமுகவினரே, இன்று அண்ணா உயிரோடு இருந்தால் கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் கருணாநிதியின் மகன் அழகிரியும் கட்சியின் தலைமைப்பதவிக்கு சண்டை போடுவதையும் அவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் கருணாநிதியின் மகன்கள் என்பது மட்டுமே என்பதையும் பார்த்து என்ன சொல்வார் என்று சிந்தித்து பார்க்கட்டும்.

ஸ்டாலின் மிசாவில் அடிவாங்கினார் என்று ஆரம்பிக்கும் ரொம்ப அறிவுஜீவி பத்திரிக்கையாளர்களுக்கும் ஒரு வார்த்தை. மிசாவில் வேறு யாருமே அடிவாங்கவே இல்லையா? அதில் இறந்த்வர்களும் உண்டே. ஏன் ஸ்டாலினுக்கு மட்டும் தனி மரியாதை? அவர் கருணாநிதியின் புத்திரன் என்பது தவிர அவருக்கு என்ன அருகதை? ஸ்டாலினா அழகிரியா என்று திமுக தொண்டர்கள் சண்டை போடும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிட்டு வெற்றி எக்களிப்பு செய்வது கருணாநிதிதான். இதுதான் ஜனநாயகமா? வெட்கம் கெட்டவர்கள்.

அழகிரிக்கும் மாறனின் புத்திரர்களுக்கும் சண்டை வந்தால் மதுரை பற்றி எரிகிறது. இதுதான் ஜனநாயக கட்சியா? யாரிடம் பேசுகிறார்கள்? தாகிருஷ்ணன் கொலைவழக்கும் நம் நாட்டின் அவல வரலாற்றின் ஒரு அங்கமாக நின்றுகொண்டிருக்கிறது.

திமுக பல தோல்விகளை சந்தித்த ஒரு கட்சி, இந்த தோல்வியும் போய் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கருணாநிதி கூறுகிறார். அது உண்மையாகவும் ஆகலாம். ஆனால், திமுக ஒரு ஜனநாயக கட்சியாக ஏற்கெனவே தோற்றுவிட்டது. திராவிட கழகமும் வீரமணியின் மகனின் சொத்தாகிவிட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை மூச்சுக்கு முன்னூறுதடவை பேசுபவர்கள் தனது மகன்களுக்கு அந்த ரூல் பொருந்தாது என்கிறார்கள். எந்த கொள்கைக்கு எதிராக தன்னை நிறுத்திகொண்டனவோ அந்த திராவிட கட்சிகள் இன்று பிறப்பு வழி உரிமைக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. பார்ப்பனனின் மகன் பார்ப்பனன் என்ற ஒரே காரணத்துக்காக பூசாரியாக ஆகக்கூடாது என்று பேசியவர்கள், அதனையே முக்கிய கொள்கையாக முன்னே வைத்து ஆட்சியதிகாரம் அமைத்தவர்கள், இன்று மந்திரியின் மகன் மந்திரி, முதலமைச்சரின் மகன் முதலமைச்சர் என்பதை கொள்கையாக கொண்டு கோஷம் போடுகிறார்கள். கேவலம். கவனியுங்கள். நான் திராவிட முன்னேற்ற கழக தலைவரின் குடும்பத்தினர், அவரது மகன்கள் ஆகியோர் சனீஸ்வர பகவானின் கோவில்களுக்கு சென்று பிராயச்சித்தம் செய்வதை நான் விமர்சிக்கவில்லை. அது அவர்களது சொந்த விஷயம்.

மாறிவரும் நகரமயமாதலில் சாதியம் கழன்று விழுந்துகொண்டிருக்கிறது. பார்ப்பனர்களின் பிள்ளைகள் சமையல் செய்கிறார்கள், சவ அடக்கம் செய்கிறார்கள், பன்னாட்டு நிறுவனங்களில் கணினி விற்பன்னர்களாகவும் பல்கலைக்கழகங்களில் ஆய்வாளர்களாகவும் இருக்கிறார்கள். முதலியார்கள் சவர கடை நடத்துகிறார்கள். சவரத்தொழில் செய்துகொண்டிருந்தவர்களின் பிள்ளைகள் பிட்சா கடை நடத்துகிறார்கள். நாடார்கள் சாப்பாட்டுக்கடையும், பாத்திரக்கடையும் நடத்துகிறார்கள். தலித்துகளின் மகன்கள் இன்று தொழிலதிபர்களாகவும், ஐ.ஏ.எஸ் ஆபீசர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களில் கணினி விற்பற்றனர்களாகவும் இருக்கிறார்கள். உதாரணத்துக்குத்தான் இவை சொல்கிறேன். ஒரு சாதி ஒரு காலத்தில் எந்த தொழிலை கேவலமாக கருதியதோ அதே தொழிலை நவீன பின்னணியில் அதே சாதியை சேர்ந்தவர் செய்வதை இன்று பார்க்கலாம். வேள்ளமென பெருகிவரும் நகரமயமாதலின் விளைவுகள் இன்று அனைவரும் அடித்துச் செல்கின்றன. ஆனால், சுமார் 60 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனைகள் மூளையில் இறுகிப்போனவர்கள், மாறிவரும் உலகத்தை கண்டுகொள்ளாமல், போலி இனவாதம் பேசி ஏமாற்றி தனது மகன்களில் ஒருவருக்கு பட்டம் கட்டிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். இது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு அமைச்சராக தனது மகனை அடுத்த மாவட்டத்தலைவராக ஆக்குவதற்கு தூண்டிவருகிறது. அவர்கள் மக்கள் அளித்த வாக்குக்களில் தூசிகளாக தூக்கி எறியப்பட்டார்கள்.

இது புரிந்துகொள்ள கடினமானது அல்ல. கருணாநிதியை தாண்டி திமுக நிற்கும் என்று நம்பிக்கை கொள்ள ஒரு முகாந்திரமும் இல்லை. அவரது கேரிஸ்மா அவரது மகன்களுக்கு இல்லை. தெரிந்தோ தெரியாமலோ கருணாநிதி பின்னால் ஒரு கூட்டம் நிற்கிறது. மாபெரும் மக்கள் திரளை அவரது மகன்களால் நிச்சயம் காப்பாற்றவோ அல்லது தக்கவைக்கவோ முடியாது.

இந்தியாவின் அறிவுஜீவிகள் கூலிக்கு மாரடிப்பவர்கள். இந்தியாவின் பட்டத்து இளவரசர் ராகுல்காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர் மற்ற “அறிவுஜீவியினரை” சந்திக்க செட்டப் செய்து தருபவர்கள். அந்த பட்டத்து இளவரசர் எவ்வளவு அறிவுஜீவிகளிடம் பேசினாலும் உளறலை நிறுத்துவதாக தெரியவில்லை. ஆலோசனை கொடுக்கும் அறிவுஜீவிகளின் லெவலே அப்படியா என்றும் தெரியவில்லை. இப்படிப்பட்ட வம்சங்களுக்கு சொம்படிக்கும் அறிவுஜீவிகள்தான் இது போன்ற “பிறப்பொக்கா எல்லா உயிர்க்கும்” என்ற நவீன திமுக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்ன?

திமுகவினர் இரண்டு கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுக்க முயற்சி செய்யலாம். ஆனால், தமிழக வாக்களர்கள் மடையர்கள் அல்ல என்று பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். அவர்களது முடிவு இந்த பட்டம் கட்டும் முயற்சிகள் எல்லாம் வீண் என்று திமுகவினருக்கு நிரூபித்து தரும் என்று கருதுகிறேன்.

Series Navigationபுறக்கோள் அறிமுகம்: திரவ நிலையில் தண்ணீருடன் இருக்கக்கூடிய புறக்கோள் (exoplanet) கண்டுபிடிப்பு

21 Comments

  1. Avatar knvijayan

    கட்டுரையாளர் அண்ணா உயிரோடு இருந்த்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று வினவுகிறார்,என்ன செய்திருப்பார் அழகிரியையும் ஸ்டாலினையும் தனித்தனியாக சந்தித்து முதலைகண்ணீர் வடித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பார்.

    • Avatar paandiyan

      வார்த்தை ஜாலத்தின் மூலவர் அவர்தான . அப்படிதான் செய்து இருப்பார் . திரு மலர்மன்னன் போன்றவர்கள் வேண்டுமானால் இதை வேறு மாதரி பாஷையில் சொல்லலாம் ஆனால் உண்மை இதுதான் ….

  2. Avatar மலர்மன்னன்

    ஸ்ரீ பாண்டியன் என்னை இழுத்திருப்பதால் அவ்ர் ஆசையைக் கெடுப்பானேன் என்று வந்துள்ளேன்.
    என்னிடம் தற்சமயம் ஆவணத்தைத் தேடி எடுக்க அவகாசம் இல்லாததால் நினைவிலிருந்து சொல்கிறேன்:
    ஒரு தேர்தல் பிரசார காலத்தில் அண்ணா முதலில் வந்துவிட, அவர் தொடர்ந்து வேறு தொகுதிகளுக்குச் செல்ல வேண்டியும் இருந்ததால் முதலில் பேசினார்கள். பேசி முடிக்கையில் கருணாநிதி வந்துவிட்டார். நான் ஆரம்பித்து வைத்தேன் கருணாநிதி முடித்து வைப்பார் என்று சொல்லிவிட்டு அண்ணா புறப்பட்டார்கள். அதையே வேத வாக்காகக் கொண்டு கருணாநிதி இன்று தி மு க வை முடித்து வைத்து விட்டார்.
    அண்ணா தன் சுவீகார மகன்களையே அரசியலில் ஈடுபட அனுமதிக்க வில்லை. இளங்கோவனுக்கு அப்படியொரு விருப்பம் இருந்தது. அனுமதி இல்லை. மனைவி ராணி அம்மையார் அரசியலில் தலையிடவும் அனுமதி தந்ததில்லை. அமைச்சர் பதவிக்காக அவரது சிபாரிசை வேண்டியவர்கள் சிலர். உன்னிடமே வந்துவிட்டார்களா என்று கண்டித்தார், அண்ணா. “Don’t take advantage of your access to me ”
    என்று ஒரு பிரமுகரிடம் கண்டிப்பாகச் சொன்னதும் உண்டு. அவரது பெயரைக் குறிப்பிட்டால் அவர் மகன் வருந்துவார். அந்தப் பிரமுகர் இப்போது உயிருடன் இல்லை (அண்ணா அருமையான ஆங்கிலத்தில் அடிக்கடி பேசுவார்கள். கேட்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். நான் இளமையிலிருந்தே வெளி மாநிலங்களில் இருந்தவன் என்பது அவர் மனதில் பதிந்து விட்டிருந்ததால் என்னிடம் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். அவரது ஆங்கிலம் விக்டோரியன் ஆங்கில உச்சரிப்பாகவும் சொற்பிரயோகங்களுடனும் இருக்கும்).
    கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டிய சமயங்களில் கண்டிப்பாக நடந்துகொண்டவர்தான் அண்ணா. ஆனால் அதிலும் ஒரு மென்மை இருக்கும். தி.மு.க. இன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கியர்கள் முன்னிலை பெற்று விளங்கும் அமைப்பாக இருப்பதை அவர் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார். கட்சியில் இருந்துகொண்டே எதிர்த்து நில் என்று அண்ணா சம்பத்திற்கு அறிவுரை சொன்னார். சம்பத்துதான் பொறுமை யிழந்து வெளியேறினார். கருணாநிதி புத்திசாலி. தன் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பே தந்ததில்லை. 1991-96ல் ஜயலலிதா ஒழுங்காக நடந்துகொண்டிருந்தால் ஸ்டாலின், அழகிரி தலையெடுத்தே இருக்க மாட்டார்கள். இன்று அவர்களும் தி.மு.க. விஷமிகளூம் இநத அளவுக்கு வளர்வதற்கு வாய்ப்பளித்தவரே ஜயலலிதாதான். இன்று அது விஷ விருட்சமாக வளர்ந்துவிட்டது. நியாயமாக கருணாநிதி ஜயலலிதாவுக்கு நன்றிக் கடன் பட்டவராவார்.
    -மலர்மன்னன்

    • Avatar paandiyan

      திரு மலர்மன்னன் அவர்களுக்கு நன்றி . நான் சொல்ல வந்த விசயம் என்னவென்றால் திரு அண்ணாதுரை அவர்கள் ஒரு தெளிவில்லாத கொள்கையுடன் வார்த்தை ஜாலத்தை வைத்து அரசியல் கட்சி ஆரம்பித்தவர் . இதனால் என்ன என்று கேள்வி வரலாம் . இன்று வரை கழக தலைவர்கள் காலையில் ஒன்று சொல்வது , மாலையில் ஒன்று சொல்வது , பினால் கேள்வி வரும்போது காலையில் சொன்னன இதை இல்லை மாலையில் சொன்னன இதை என்று வாரத்தை வைத்து விளையாடுவது எல்லாம் பின்னல் நாம் பார்த்த காட்சிகள். ஜெயலித விசயம் வருவோம் . அவர் அன்று அறிவாலயம் மூடி வை கோ விடம் சாவி கொடுத்து இறுக்க வேண்டும் என்று ஒரு குற்றச்சாட்டு இருகின்றது . அன்று அவர் அப்படி செய்து இருந்தால் என்னவாகி இருக்கும் பாருங்கள் . ஒரு சிறிய கட்சியை கட்டுகோபுடன் நடத்த முடியாமல் கஷ்டப்படும் வை கோ விற்கு அப்படி பண்ணாதது நல்லதுதான் . என்னை பொருதவரை தி மு க வை அழிக்க நினைக்காமல் அதனுடன் போராடுவதுதான் ஆ தி மு க விற்கு நல்லது அதை ஜெயலிதா மிக திறமையாக கையாளுகிறார் என்பது என் கருத்து.. யோசித்து பாருங்கள் ஆ தி மு க ஆட்சில் விடுதலை புலிகள் க்கு இந்த நிலைமை வந்து இருந்தால் , பத்திரிகை விமர்சனம் எதிர் கொள்ள முடியாமல் ஆ தி மு க நிலை குலைந்து போயி இருக்கும். ஒரு வகையில் தி மு க ஆட்சி இருந்தது நல்லதுதான் . கருணாநிதியின் கோர முகம் இன்று உலக அளவில் வெட்ட வெளிச்சம் ஆனது ரொம்ப நல்லதுதான் . இன்று உள்ள இணய தளங்களில் கருணாநிதி அளவுக்கு அசிங்க பட்டு இறுக்கும் வேறு எந்த அரசயில்வாதி இருகின்றகலா என்ன ? உலக அளவில் என்று கூட சொல்லலாம்!!. இது ஜெயலித ராஜதந்திரம் என்று கூட சொல்லலாம். நம் பத்திரிகை அப்படி சொல்ல மாட்டார்கள் . அவர்களுக்கு MGR , ஆ தி மு க என்றால் அந்த அளவு ஒரு இளக்காரம்.

  3. சாட்டையடியான கட்டுரை.

    இன்னும் தொடர்ந்து வரும் திராவிட இயக்க போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். நன்றி..

  4. Avatar Sathya

    கட்டுரையாளர் அண்ணா உயிரோடு இருந்த்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று வினவுகிறார், கருணாநிதிக்கே முதலமைச்சர் பதவி கிடைத்திருக்காதே.

  5. The author”s opinion about Stalin is not correct.Stalin has all attributes to take the party along.He is going to be the future CM.It has become a fashion to criticise DMK that too in a very harsh manner.TN people know which party is VIZHA VIRUTCHAM.DMK will not vanguish just by a defeat in this election.I never believe the author who says he was a past admirer of DMK could write like this.

  6. Avatar knvijayan

    பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்கு என்ன விலை என்கிறார் மலர்மன்னன்.

  7. pandiyan solvathupola kalaignar inaiyathalangalil asingapattu nirpadhupola therivadharku kaaranam sila pathrikaiyaalargale niraiya karpanaiyaaga thaangale ezhudhipottu thangal arippai theerthukolvadhaalthaan adhu unmaiyillai 2006-11 pondra atchiyai kalaignare ninaitthaalum tharamudiyaadhu nala thittangalai vidungal avar kondu vandha min thittangalaal 2012-13 il thamilnaadu min urpathiyil thanniraivu adaiyapovadhu nichayam hillary chennai vandhadharke kaaranam kadantha 5 aandugalil chennai petra valarchiyaalthaan hillariyin anna noolaga visit iruttadippu seyyapattadhu theriyumaa ungalukku

  8. Avatar மலர்மன்னன்

    ஸ்ரீ கே என் விஜயன், கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டிய தருணங்களில் தமக்கே உரிய மென்மையான முறையில் கண்டிப்பாக நடந்துகொண்டவர்தான் அண்ணா என்றுதானே எழுதியிருக்கிறேன், வேறு வழிகாட்டக் கைநீட்ட வில்லையே!
    இன்று அண்ணா இருந்தால் என்ற ஹைபாதெடிகல் கேள்வியை ஸ்ரீ சின்னக் கருப்பன் கேட்டதற்குத்தான் மிகச் சரியான விடையை ஸ்ரீ ஸத்யா கொடுத்துள்ளாரே! நான் எனது நினைவுகளின் அடிப்படையில் எனது யூகத்தை வெளியிட்டேன் அவ்வளவுதானே. சில அரசியல் ஆதாய நிர்பந்தங்களால் அண்ணாவும் அரசியல்வாதியேயாதலால் சகித்துக் கொள்ள வேண்டி வந்த சந்தர்ப்பங்களும் உண்டுதான். உதாரணமாக கருணாநிதி ஆதித்தனாரைக் கொண்டு வந்து சேர்த்தது. சென்னை மாநகராட்சியின் பொறுப்பை முதலில் ஏற்க நேரிட்ட போது கருணாநிதியின் ஏற்பாட்டுக்கு இணங்க தவறான முறைக்கு ஒப்புக் கொண்டது.
    நிற்க, 1991-96-ல் தி. மு.க. வீழ்ந்துகிடந்தது. ஸ்டாலினோ அழகிரியோ பெரும் சக்தியாகத் தலையெடுத்திருக்கவில்லை. ஜயலலிதா பெரும் செல்வாக்குடன் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிட்டிருந்தார். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப சுயநலமின்றி ஊழலற்ற நிர்வாகத்தை அவ்ர் கொடுத்திருந்தால் அவரது ஆட்சியே 1996 க்குப் பிறகும் நீடித்திருக்கும். தி. மு. க. தலையெடுக்காமலேயே போயிருக்கும். 1997-2000-ல் தி மு க ஆட்சிக்கு வந்ததால்தான் ஸ்டாலினும் அழகிரியும் தலையெடுக்க முடிந்தது.
    2006-11 ல் தி. மு. க. ஆட்சி ஒரு அராஜகக் கூட்டம் தலைவிரித்தாடியதாகத்தான் இருந்தது. நில அபகரிப்பு மிகப் பெரும் அளவில் நடந்துள்ளது. மிரட்டல் கொலைகள் நடந்துள்ளன. கருணாநிதியின் பேச்சில்கூட முரட்டுத்தனம்தான் எப்போதும் வெளிப்பட்டது. தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு பதில் நியாயப் படுத்தி வந்தார்.

    ஜயலலிதா இம்முறை ஒழுங்காக நடந்துகொள்ளாமல் மீண்டும் பழைய சபலங்களுக்கு ஆட்பட்டாலோ இரண்டாம நிலைத் தலைவர்களை உருவாக்கத் தவறினாலோ மீண்டும் ஸ்டாலின் தலைமையில் தி. மு. க.ஆட்சிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பா ஜ க பொறுப்புனர்ச்சியுடன் சமயத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டால் நல்லது. இல்லையேல் எதிர் காலம் ஸ்டாலின், விஜயகாந்த் என்று போய்விடும். மக்களைக் குறை சொல்லிப் பலனில்லை.
    -மலர்மன்ன்ன

  9. Avatar மலர்மன்னன்

    வெளிப்படையாகத்தான் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியைக் கூப்பிட்டு உன் மகன்களை அரசியலில் இறக்காதே என்று அண்ணா சொல்லியிருப்பார். அண்ணா இருந்தபோதே கட்சியின் தலைமைப் பொறுப்பான பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட கருணாநிதி திட்டமிட்டபொழுது, அதைத் தடுக்க மதியழகன் அண்ணாவைத் தவிர யார் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டாலும் தானும் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். அண்ணாவும் தாமே திரும்பவும் பொதுச்செயலாளர் ஆனார். தலைமைப் பதவிக்கு ஆரோக்கியமான போட்டி இருக்கலாம், அடிபிடி சண்டை கூடாது என்று அவர் சொன்னார்.
    -மலர்மன்னன்

  10. ippodhum malarmannan staalinai edho theendathagaathavar pola pesugiraar satta mandra uruppinaraaga, mayoraaga, ullaatchithurai amaicharaaga thunai mudhalamaicharaaga avar seitha saadhanaigal eraalam mudhalvar aavadharkaana poruppunarchi pakkuvam ellaam avaridam ulladhu than kalyaanamandapatthin oruthoon membaalathirkaaga idikkapatthapodhu adhai edhirthu katchi aarambittha podhunalavaadhi vijayakanthodu stalinai oppidaatheergal

  11. Avatar மலர்மன்னன்

    ஸ்டாலின் வகித்த எந்தப் பதவியும் அவரது சொந்த முயற்சியால் பெற்றது அல்ல. கே.ஏ.கே. போட்டியிட்டவரை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவரால் வெற்றி பெற முடிந்ததில்லை. தந்தைக்கு இருக்கும் சாமர்த்தியங்களில் ஒரு சிறிதும் ஸ்டாலினுக்கு இல்லை. கருணாநிதி முதல் தடவை முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் அழகிரி, ஸ்டாலின் இருவரும் விடலைச் சிறுவர்களாக இருந்தனர். அவர்கள் வளர்ந்த கோபாலபுரத்தில் அவர்களுக்கு நல்ல பெயர் இருந்ததில்லை. கருணாநிதிக்கு இருந்த இயக்கப் பாரம்பரியம் எதுவும் அவர்களுக்கு இல்லை. முதல்வரின் பிள்ளைகள என்ற தனிப் பெருமை, சலுகையில் வளர்ந்ததால் அகம்பாவத்துடனேயே வளர்ந்த spoilt children தான் அவர்கள். அக்கால கட்டத்தில் நான் அந்த வட்டாரத்தில்தான் இருந்தேன். மேற்கொண்டு இது விஷயமாக நான் எதுவும் பேசாது இருத்தலே நல்லது.

  12. malarmannan avargale vidalai paruvam veru uriya vayadhil pakkuvam peruvathu enbathu veru kalaignar mudhal thadavai mudhalvaraanapodhu makkal avarudaiya edhirkatchi surusuruppai paarthu,edutthom kavizhthom endru seyalpaduvaro endru payanthathu unmai aanaal padhavikkuriya pakkuvam avaridam vandhuvittadhu etthanaiyo arasiyal vaarisugal sobikkaamal ponadhundu aanaal oru indiraa gandhi pola than sontha thiraimaiyaalthaan kadina uzhaippukku pinnarthaan Staalin thunai mudhalvaraanar Avarudaiya valarchiyai evaraalum thadukkamudiyaathu 2016inn nambikkai natchathiram avarthaan

  13. Avatar paandiyan

    திரு மலர்மன்னன் அவர்களிடம் ஸ்டாலின் விஷயம் நிறைய கொட்டி கிடக்கின்றது என்று என்னுகின்ரன். மறைந்த அண்ணா பற்றி வெளிப்படைக நிறய பேசும் திரு மலர்மன்னன் அவர்கள் ஸ்டாலின் பற்றி வெளிப்படைக பேச முடியாமல் வைத்து இருக்கும் சக்தி எது ? இன்றைய எங்களுக்கு இதுவும் தெரிய வேண்டாமா ? இங்க பதிவு பண்ணுவார் என்று எதிர்பார்க்கலாம் . நான் ஏற்கணவ சொன்ன மாதரி “தி மு க உருவான வரலாறு” தெளிவாக தெரிய வேண்டும் என்றால் எல்லாரும் தேடுவது திரு மலர்மன்னன் எழுதிய “தி.மு.க உருவானது ஏன்? புத்தகம் தான் . அது ஒரு முழுமை அடைய வேண்டும் என்றால் அவர் இன்னமும் நிறைய பதிவு பண்ண வேண்டிய அவசியம் இருக்கின்றது . இந்த வேண்டுகோளுக்கு அவர் செவி சாய்பார் என்று திண்ணை வாசகர்கள் நம்புவோம் !!!!!

  14. Avatar smitha

    Malarmannan has a soft corner for annadurai & it shows clearly. We must not forget that it was Anna who wrote “kambarasam”, but when he came to power, he ordered them to be withdrawn from the market.

    His slogan was “kadavu illa” when he was with EVR but when he formed the DMK, it became “onre kulam oruvane devan”.

    Ithu samarasam illaiya?

    He presided over mu.ka 2nd (actually 3rd) marraige to rajathi ammal. Mu.ka himself admitted so.

    Where is the question of “ganniyam kattupadu” here that he is famous for?

    Agreed that he did not allow his family members to come to politics, but when mu.ka campaiagned against kamaraj calling him “andan kaka” in the election campaign, he did not pull him up. Why?

  15. Anna Kambarasam ezhudhiyathu kaalathin kattayam.Moodanambikkaigalil moozhgipoyiruntha samoogathai thiruttha Periyaar merkonda aruvaisigichhaiyil kambarasamum pangu vagitthathu.

  16. Avatar paandiyan

    எது மூட நம்பிக்கை , மூலையில் சிலை ஒன்றை வைத்து அதற்கு பூ மலை போட்டு கும்பிடுவத? மேடையில் உக்காந்து பாராட்டை காது குளிர கேட்பதா ? அப்படியா அண்ணா மூட நம்பிக்கையின் எதிரி என்றால் மணியமை திருமணம் என்ன ஒரு நம்பிக்கை என்று எதரிது வந்தார் . அண்ணா க்கு ஒரு கொள்கை என்று ஒன்று கிடையவ கிடைத்து . மேல் மட்ட ஜாதி சேர்ந்த ஒரு சிலர் உழைத்து பிளைகாமல் அரசியம் வியாபாரம் பக்கம் தங்கள் கவனம் திருப்பினார்கள் . அதன் மூலம் கோடிகள் குவித்து இன்று குறு நிலா மாணர்கள் ஆகி இருகின்றார்கள் .

  17. Let Mr.Pandiyan read “Mother India” written by Katherine Mayo in 1930s and “Revolt” a radical weekly published by Justice Party in 1930s to know what is meant by superstitions.These books are available in internet.

    • Avatar paandiyan

      who said justice party is PURE party. all are same fraud. when you read allways one side article you brain will be limitied only. you go and read all articles first.

  18. If I talk about present Dravidian leaders,MrPandiyan will say all are fraud.That is why I quoted the weekly published im 1930s.What about Katherine Mayo,an American lady who visited India and wrote about the social evils prevailed all over India?Like me,let Pandiyan also tell list of articles and books to enlighten myself..

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *