திரை விமர்சனம் இது என்ன மாயம்

This entry is part 14 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன்
0
செட்டப் காதல் ஃப்ளேர் அப் ஆகும் கதை!
ஆங்கில நாடகங்களில் நடித்து, போணியாகாமல், காதலர்களுக்கு திரைக்கதை எழுதி, இயக்கி வெற்றி பெறச் செய்யும், நிறுவனத்தை ஆரம்பிக்கிறான் அருண். ப்ரேக் அப் ஆன பாய்ஸை, தோற்றம் மாற்றி, நவீனமாக்கி, சில தருணங்களை கவிதையாக்கி, காதலியுடன் சேர வைப்பது தான் அவனது ஐடியா! சினிமா மழை, புயல், போலி ரவுடிகளுடன் சண்டை என ஜாலியாக முன்னேறுகிறது அவனது நிறுவனம். கோடிசுவரன் சந்தோஷ் காதலிக்கும் மாயாவை பார்த்தவுடன், அவனது கல்லூரி நாட்கள் நினைவு வர, ஒரு ஃப்ளாஷ் பேக். அதில் அவனைக் காதலிக்கும் மாயா! விலகிச் செல்லும் அருண் . இன்னமும் மாயாவுடனான காதலில் கசிந்துருகும் அருண், சந்தோஷை விலக்க போடும் திட்டங்கள் எல்லாம் காமெடி கார்னிவல். முடிவில் மாயா அருணை அடைந்தாளா என்பது க்ளைமேக்ஸ்!
இயக்குனர் விஜய் மீண்டும் ஒரு ‘ பொய் சொல்லப் போறோம் ‘ பாணி காமெடியைக் கையில் எடுத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். சாய்ஸ் ஆஃப் ஹீரோ தான் கொஞ்சம் சொதப்பல்.
விக்ரம் பிரபு, பினாச்சியோ மூக்குடன், இறுக்கமாக வலம் வருகிறார். அவரை யாராவது கூத்து பட்டறைக்கு அனுப்பினால் தேவலை. கன்னட கீர்த்தி சுரேஷ் தான் மாயா. சின்ன வயது சாவித்திரி சாடையில் அவர் காட்டும் பாவங்கள், அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு போகும். விஜய் படங்களில் கம்பல்சரி இணைப்பு நாசர். ஆனால் அவருக்கு அதிக வேலையில்லை. பழைய நடிகை அம்பிகா, சின்ன புருவ உயர்த்தல்களில் நம் ஞாபகங்களை கிளறி விடுகிறார். சந்தோஷாக நவ்தீப் கச்சிதம்! பண்பலை பாலாஜியும், பாலாஜி வெங்கட்ராமனும் நகைச்சுவை செட்டப்புகள்!
கடற்கரை செட்டப் சண்டை, சினிமா மழை, ஓட்டைக் குடை என நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறது திரைக்கதை. மென்முறுவல்கள் கேரண்டி.
ஜி.வி.பிரகாஷும், நிரவ் ஷாவும் விஜய்க்கு தனியாக உழைத்திருக்கிறார்கள். பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் அருமை.
“ எப்போ” என்கிற ஒற்றை வார்த்தையை வைத்து விஜய் கட்டியிருக்கும் கதம்பக் காதல் காட்சிகள் தமிழுக்கு புதுசு.
“ என்னை விட நல்ல பையன் கிடைப்பான் “ என்று காதலை மறுதலிக்கும் அருண், க்ளைமேக்சில் “ என்னை விட நல்ல பையன் உனக்கு கிடைக்க மாட்டான்” என்று காதலை சொல்வது சூப்பர்.
இன்னொரு முறை பார்க்க தூண்டும் படம் ‘ இது என்ன மாயம்’
0
மொத்தத்தில்: ஜாலம்
சத்தத்தில்: கொம்பனை பார்த்த பயத்திலேயே இருக்காரு விக்ரம்.. அவருக்கு வேப்பிலை அடிக்கணும்!
0

Series Navigationஅதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *