தோல்வியின் எச்சங்கள்

சு.மு.அகமது

தினம்
காகிதப்பூக்களை உயிர்ப்பிக்கிறேன்

மகரந்த துகள்களின் வாசத்தை
சிறை பிடிக்கிறேன்

ஆனால்
எனக்குள் விஞ்சியிருக்கிறது
தோல்வியின் எச்சங்கள்
அலகுகளால் எண்ணப்படும் மிச்சங்கள்

பயத்தீற்றல்கள்
சாம்பலின் சாயல்கள்
இனிப்பின் கசப்பறியா ஊடகங்கள்

எங்கோ வேர் பதித்திருக்கிறது
சோம்பலின் பிரதிகள்
பதியனில்லா பொதிகள்
தோல்வியின் இரணங்கள்

முடிவுரைக்கு முகவுரை தேடும் முகங்களே
வாசத்தை பூசுங்கள்
என் காகிதப்பூக்களில் !

– சு.மு.அகமது

Series Navigation