நட்ட ஈடு

Spread the love

 

 

பொருள் வழிப்பிரிந்ததினால்

சேர்ந்து களிக்காமல்

மகன் கணக்கில்

இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம்

ஈடு செய்து கொண்டிருக்கிறார்

முதுமையில்,

பேரனுடன் விளையாடும் தாத்தா.

மேலும் கடனாய்

முத்தங்களை வாங்கியபடி.

லேசான மனங்களைப்போல்

உயரே பறக்கிறது காற்றாடி

வாலை வீசி… வீசி.

Series Navigationஎன் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.சிறிய பொருள் என்றாலும்…