நழுவும் உலகின் பிம்பம்

Spread the love

இளங்கோ
*
வெகு நேரமாய் தலையசைத்துக் கொண்டிருந்த
பூவில் எறும்பொன்று நடுங்குகிறது வீசும் காற்று புரியாமல்
கைவிரித்துத் தாங்கிப் படர்ந்த பச்சைக் காம்பில்
சிலிர்ப்போடுகிறது உச்சி நிழல்

பிறகு
தூறலோடு தொடங்கிய சிறு மழை
உருட்டுகிறது துளிகளை

அதில் நழுவும் உலகின் பிம்பம்
எறும்பின் உடலை வளைத்து
கீழிறக்குகிறது
மணலில் நெளியும் புழுவைக் கடந்து
வெயில் காயும் மேட்டின் துளைக்குள் நுழைய..

பேச்சற்று சொற்ப வெளிச்சக் கீற்றோடு
மௌனமாய் அசைகிறது வனம்

******

Series Navigation‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’குசினிக்குள் ஒரு கூக்குரல்