நவீன தோட்டிகள்

 

 

‘இங்கும் அதே தமிழன்தான்

அங்கும் இதே தமிழன்தான்’

கூரிய பார்வைகளும்

குற்றச்சாட்டுகளும்

குத்தும் ஊசிமுனைகளும்

முடிவற்றவை

 

தலைக்கு மேலே சூரியனும்

நோயுற்ற தீக் காற்றும்

கொதிக்கச் செய்கிறது குருதியை.

பரம்பரை வழித் திண்ணையும்

செந்தணலாய்ச் சுடுகிறது.

 

காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன

எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள்

‘இங்கும் அதே தமிழன்தான்

அங்கும் இதே தமிழன்தான்’

என்கின்றனர்.

 

– விஜய நந்தன பெரேரா

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்