ஆயிரமாயிரம் உயிர்களைக்
கொன்று குவித்த கர்வத்தை
குடையாய்க் கொண்ட
இரதமொன்றை பூட்டி
நான்கு மாடவீதியில்
உலா வந்தேன்.
தெருவின் முனையில்
இடைமறித்த ஒருவன்
தன்னை புத்தனென
சுய அறிமுகம்
செய்து கொண்டு
இரதத்தில் ஏறிக்கொண்டான்.
யுத்த களத்தின் மொத்தச்
செந்நீர் நாற்றமும் என்
உடலில் அப்பியிருப்பதாய்ச்
சொல்லி அவன் வெண்
ஆடை துறந்து என் மேனியில்
படிந்திருந்த கறையைத்
துடைத்து தனதாக்கினான்.
ஒரு சேவகனின் செயலெனக்
கருதி அமைதி காத்தேன்.
அன்பு ஆசையுறாமை
ஜீவகாருண்யமென ஒரு
நீண்ட சொற்பொழிவு
நிகழ்த்திய சோர்வு அவன்
கண்களில் தெரிந்தது.
சாலையோரம் ஒரு
மரத்தடியில் இரதத்தை
நிறுத்தச் சொல்லி
என்னைத் தியானிக்கச்
சொன்னான்-வாளை
அவன் கையில் கொடுத்து
கண்கள் மூடியதருணம்
என் தலையைக் கொய்து
இரதத்தைச் சொந்தமாக்கிக்
கொண்டான் நவீன புத்தன்.
-சோமா
(sgsomu@yahoo.co.in)
- இந்த வார நூலகம்
- இந்தியாவின் வறுமைக்கோடு- கோட்பாட்டு விளக்கமும் ஹர்ஸ் மந்தரின்# கட்டுரையும்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 35 (நிறைவுப் பகுதி)
- ஜி.கிச்சாவின் ‘ மாசி ‘
- கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..
- காய்க்காத மரம்….
- அழகிய பெரியவன் எழுதிய “சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்” – அறிமுகமும் விமர்சனமும்
- ஆற்றைக் கடப்போம். ! ஆற்றலோடு கடப்போம். !! ( அம்பையின் ஆற்றைக் கடத்தல் வெளி ரங்கராஜனின் நாடகம் .. எனது பார்வையில்
- ச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்
- மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை
- கூந்தல்
- நன்பாட்டுப் புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
- பாதியில் நொறுங்கிய என் கனவு
- வனவாசம் -கண்ணதாசன் புத்தக விமர்சனம்
- அரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை
- மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:
- “நிலைத்தல்“
- பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்
- சாதிகள் வேணுமடி பாப்பா
- முன்னணியின் பின்னணிகள் – 32
- ‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை
- வளவ. துரையனின் நேர்காணல் – 2
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்று
- பஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்
- சத்யசிவாவின் ‘ கழுகு ‘
- இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்
- நாடகத்தில் சொதப்பாதிருப்பது எப்படி ?
- அன்பளிப்பு
- நவீன புத்தன்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 55
நிதர்சனம்….கவிதையில்…
அருமை சோமா.
சாலையோரம் ஒரு
மரத்தடியில் இரதத்தை
நிறுத்தச் சொல்லி
என்னைத் தியானிக்கச்
சொன்னான்-வாளை
அவன் கையில் கொடுத்து
கண்கள் மூடியதருணம்
என் தலையைக் கொய்து
இரதத்தைச் சொந்தமாக்கிக்
கொண்டான் நவீன புத்தன்
உண்மை உலகம் சோமா !
//வாளை
அவன் கையில் கொடுத்து
கண்கள் மூடியதருணம்
என் தலையைக் கொய்து
இரதத்தைச் சொந்தமாக்கிக்
கொண்டான் நவீன புத்தன்.//
இதுவே நிதர்சனம்..
thanks for your words…Ms.Jayashree, Umamohan & Amathisaaral shanthi mariapan. This new budha concept is executed by all the govt in every where. The latest classical expamples are Elam, koodankulam & Periyaar dam.