நான் எப்பொதெல்லாம் தனிமையிலிருக்கிறேன்


எதையும் யோசிக்காதபோதும்,

எதையும் செய்ய,செய்விக்க இயலாதபோதும்,

ஒரு பாடலையும் பாடாதபோதும்,

 

என் கிட்டாரின் மெல்லிய விள்ளல் இசையை

என் விரல்களால் தூண்ட இயலாதபோதும்,

என் கவிதைகளில் காதல் இல்லாதபோதும்,

என் கண்களில் ஈரம் குறையும் போதும்,

 

என்னைச்சுற்றி நடப்பவை பற்றி எனக்கு

சிறிதும் அக்கறையில்லாத போதும்,

எனக்கென சாலையோரப்பெட்டிக்கடைக்காரன்

ரொட்டியை மீதம் வைத்திருக்காத போதும்,

 

தூரத்தில் ஒலிக்கும் தடதடக்கும் ரயிலின் ஓசை

சட்டென மறையும் போதும்,

என்றும் வரும் என நம்பிக்காத்திருந்த

மழைக்குருவி இன்று வராமலேயே போகும்போதும்

 

என

நான் எப்போதெல்லாம்

தனிமையிலிருக்கிறேன்

என்று உணர்ந்துகொண்டிருக்கும்

அப்போதெல்லாம் தனிமை

என்னைப்படர்ந்து கொண்டிருக்கிறது.

 

– சின்னப்பயல்

 

 

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 10பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது !