நிராகரிப்பு

உதாசீனப்படுத்துதல் என்பது
கொலையைவிட கொடூரமானது
விடை பெறுவதற்கு முன்பிருந்த
நான் எங்கே போயிற்று
ஆதாமின் சந்ததிகளே
நீங்கள் ஆறுதல்
கூறாதீர்கள்
இதயம் அழுவதை கண்கள்
காட்டிக்கொடுத்துவிடுகிறது
சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை
என்னுள் குருட்ஷேத்திரம்
நடப்பது
அருந்தப்படாத கோப்பையில் அன்பு
விளிம்பு வரை தெரிகிறது
அழுகை ஓர் ஆயுதம்
அதை நீ தெரிந்து வைத்திருக்கிறாய்
உள்ளம் எனும் வீடு
காலியாக இருக்கிறது
வாடகை தரவேண்டாம்
காரியம் சாதித்து கொள்வதிலேயே
கவனம் செலுத்த வேண்டாம்
நீ கண் பார்க்கும் போதெல்லாம்
நான் தோற்கிறேன்
பாலை நிலத்தில்
விதை தெளித்து
ஆவதென்ன
எனது புத்தகத்தின்
நடுப்பக்கத்தை நீதான்
நிரப்ப வேண்டும்
ஏட்டைப் படித்தவன் தான்
பாட்டைக் கெடுத்தான்.

Series Navigationஇலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சிவால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!