நீங்காத நினைவுகள் 12

நீங்காத நினைவுகள் 12
This entry is part 4 of 30 in the series 28 ஜூலை 2013

ஜோதிர்லதா கிரிஜா

sajbabaபுட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களைப் பற்றி நான் சொல்லப் போவதை உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ, அல்லது நான் பொய்களைப் புனைந்துரைப்பதாய் நினைத்து என் மீது ஐயுறுவீர்களோ, தெரியாது! எனினும், யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தக் கட்டுரையில் உள்ளவை யாவும் உண்மைகளே என்று என் எழுதுகோலின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதற்குப் பிறகும் சந்தேகப் படுபவர்களைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை!

மிகச் சிறிய வயதில் சத்திய சாயி பாபா அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஷிர்டி சாயி பாபா அவர்களைப் பற்றித்தான் தெரிந்திருந்தது. அது கூட, ஷிர்டி என்னும் ஊரின் பெயர் இன்றி, வெறும் சாயிபாபா என்பது மட்டுமே தெரிந்திருந்தது. எங்கள் ஊரின் அக்கிரகாரத் தெரு ஒன்றில் ஓர் அம்மாள் பஜனை மடம் நடத்தி வந்தார். ஷிர்டி சாயிபாபா பிரபலம் அடையத் தொடங்கிய காலகட்டத்தில் வியாழக்கிழமை தோறும் அவர் சாயிபாபா பஜனையைத் தொடங்கினார். எல்லாச் சிறுவர் சிறுமியருடனும் நானும் பஜனைக்குப் போவேன். வெள்ளியில் அமைந்த சாயிபாபாவின் சிறு தொங்கட்டான் ஒன்றை நானும் நான்கணாவுக்கு வாங்கிப் பவளமாலையில் கோத்துக்கொண்டேன்.

கொஞ்ச நாள்கள் கழித்து, புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களைப் பற்றிய செய்திகள் அடிபடத் தொடங்கின. அவர் கண்ணனின் அவதாரம் என்கிற வதந்தியோடு, அவரைப் பற்றிய அவதூறுகளும் செவிகளில் விழுந்தன.

பாபாவின் மிகச் சிறு வயதுப் புகைப்படத்துடன் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவரின் புகைப்படமும் அச்சாகியிருந்த ஒரு பத்திரிகைச் செய்தியைக்காண வாய்த்தது. பலசரக்குக் கடையில் ஏதோ சாமான் வாங்கிய பொட்டலத்தைப் பிரித்த துண்டுக் காகிதம் அது. அந்தப் படத்தில் பாபா ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவருக்குப் பின்னாலோ, அருகிலோ அந்த அம்மையார் நின்றுகொனண்டிருப்பார். தாயும் மகனும் போன்ற அல்லது அக்காளும் தம்பியும் போன்ற வயதினரான இருவரையும் இணைத்து ஓர் அவதூற்றுச் செய்தி அதன் கீழே அச்சாகியிருந்தது. அதிக விவரம் தெரியாத வயதாயினும், அது கெட்ட செய்தி என்பது மட்டும் ஓரளவுக்குப் புரிந்தது. மனம் அருவருப்படைந்தது. ‘’சீ என்று முணுமுணுக்கத் தோன்றியது.

ஆனால் அந்தப் பெண்மணி சத்திய சாயிபாபாவைக் கண்ணனின் அவதாரம் என்று நம்பிய பக்தை என்பதும், பாபாவைக் காண வரும் பிற அடியார்களுக்குத் தம் இல்லத்தில் உணவு அளித்து உபசரித்து மகிழ்ந்தவர் என்பதும் பின்னாளில் பாபாவின் வரலாற்றைப் படித்தபோது தெரியவந்தது. (விவேகானந்தரைப்பற்றியே அவதூறு பேசும் இயல்பைக்கொண்ட பொழுது போகாத பொம்முகள் நிறைந்த நாடாயிற்றே இதுதான்! பாபாவைப் பற்றி வம்பு வளர்க்கக் கேட்பானேன்!)

எனினும், விவரமில்லாத வயது ஆதலால், பாபாவைப் பிடிக்காமல் போயிற்று. அதன் பின் பாபாவைப் பற்றிய ஞாபகமே இல்லாதும் போயிற்று என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால், பல ஆண்டுகள் சென்ற பின், சென்னையில் தபால்தந்தி இலாகாவின் தலைமை அலுவலகத்தில் பணியில் சேர்ந்த பிறகு ஒரு நாள் பாபாவைப் பற்றிய சேதி காதில் விழுந்தது. எங்கள் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் உறவினர் வீட்டில் அவரின் குடும்பத்தார் தங்கள் வழிபாட்டு அறையில் வைத்துத் தொழுது கொண்டிருந்த சத்திய சாயி பாபாவின் படத்திலிருந்து திருநீற்றுத் துகள்கள் உற்பத்தியாகி உதிர்ந்துகொண்டே இருப்பதாக அவள் சொன்னதும் எங்கள் அலுவலகத் தோழியர் சிலர் இராயபுரத்தில் இருந்த அவர் வீட்டுக்குச் சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். எதைப் பற்றியுமே சிறிதளவேனும் கூடத் தெரிந்துகொள்ளாது அதைக் கண்மூடித்தனமாக ஏற்பதும் தவறு, நிராகரிப்பதும் தவறு என்கிற கொள்கையின் விளைவே அந்தப் பயணம்.

அந்தப் பெண் சொன்னது உண்மைதான் என்பது கண்கூடாய்த் தெரிந்தது. பாபாவின் படத்திலிருந்து விபூதித் துகள்கள் இடைவிடாது உதிர்ந்துகொண்டே இருந்தன.படத்தின் முன்னால் விழுந்து குவிந்தவண்ணம் இருந்ததிருநீற்றை அவ்வீட்டின் அம்மையார் அள்ளி அள்ளி வந்தவர்களுக் கெல்லாம்விநியோகம் செய்தார். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் திருநீறு கொட்டியவாறே இருந்தது. எனினும் இதனால் பாபாவின் மீது பெரிய நம்பிக்கை ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. மந்திரவாதச் செயல் போல் தான் தோன்றியதே ஒழிய அதில் தெய்விகம் எதுவும் இருந்ததாய் நினைக்கவில்லை. மாங்கொட்டையைத் தெரு மண்ணில் குழி தோண்டி விதைத்து அதை ஒரு கூடையால் மூடிய பின் சில நிமிடங்களில் கூடையை அகற்றியதும் அங்கே ஒரு மாஞ்செடி முளைத்திருப்பதைக் காட்டும் செப்படி வித்தைக்காரரின் செயல்தான் நினைவுக்கு வந்தது. மொத்த்தில் பாபாவின் மீது எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை.

என் தோழி அனசூயா தேவி பாபாவின் பக்தை. அவளும் அங்கு வந்திருந்தாள். கருத்துக் கேட்ட போது நான் அசுவாரசியமாய்ச் சூள் கொட்டிவிட்டு மாங்கன்று விஷயம் பற்றிச் சொல்லிச் சிரித்தேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

சில நாள் கழித்து, ஒவ்வோர் இரவும் படுக்கப் போகும் முன் ஏதோ ஒரு மாத்திரையைச் சாப்பிட்டே ஆகவேண்டிய இதய நோயாளியான அவள் என்னிடம் ஒரு சேதியைச் சொன்னாள்: “நேற்றைக்கு முன் தினம் மாத்திரை தீர்ந்துவிட்டது. வாங்கிவைக்கும்படி என் அப்பாவிடம் சொல்ல மறந்துவிட்டேன். நேற்று ஏதோ படித்துக்கொண்டிருந்ததில் படுக்கப் போகும் போது மணி பதினொன்று ஆகிவிட்டது. அருகில் மருந்துக் கடை எதுவும் இல்லை. தவிர அந்த நேரத்தில் யார் கடையைத் திறந்து வைத்திருப்பார்கள்? ஆனால் அந்த மாத்திரையைச் சாப்பிடாவிட்டால் எனக்கு நெஞ்சு வலி வந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போய் பாபாவின் படத்துக்கு முன் நின்று அங்கலாய்த்தேன். பிறகு சமையல் கட்டுக்குப் போய்த் தண்ணீர் குடித்துவிட்டு வந்து விளக்கை அணைக்கப் போனபோது பாபாவின் படம் இருந்த பீடத்தில் ஒரு மாத்திரை இருந்தது. எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! ஏன் தெரியுமா? அன்று காலையில்தான் பாபாவின் பீடத்தைத் துடைத்துத் துப்புரவு செய்திருந்தேன் நீ நம்பவில்லைதானே?

நான் நம்பவில்லைதான். அவள் பொய் சொன்னதாக நினைக்கவில்லை. அது ஏற்கெனவே அங்கே விழுந்திருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவள் மனம் புண்படும் என்பதால் அதைச் சொல்லவில்லை.

இவள் புளுகுகிறாள் என்று மனசுக்குள் சிரிக்கிறாய்தானே? அல்லது கவனக் குறைவால் தப்புக் கணக்குப் போடுகிறாள் என்றாவது நிச்சயம் நினைப்பாய்!என்று என் தோழி சிரித்தாள்.

சேச்சே! அது உனது நம்பிக்கை. அதை விமர்சிக்க நான் யார்?என்று பட்டுக்கொள்ளாது பதில் சொன்னேன். உண்மையில் அவளைக் கேலி செய்து மனத்துள் சிரிக்காவிட்டாலும், ஏற்கெனவே தவறி பாபா படத்துக்கு முன் விழுந்திருந்த மாத்திரையை அவரே தனக்காக வரவழைத்து உதவியதாய் அவள் நம்பியது ஏற்புடையதாக இல்லை. தற்செயல் நிகழ்வுகளுக்கெல்லாம் கடவுளருள் எனும் சாயத்தைப் பூசி இப்படித்தான் நம்மில் பலர் மூடர்களாக இருக்கிறோம் என்று மட்டும் நினைத்துக்கொண்டேன்.

நாள்கள் நகர்ந்தன. சத்திய சாயி பாபா எனது நினைப்பிலிருந்து மறைந்தே போனார் என்றே சொல்லிவிடலாம்.

1992 ஆம் ஆண்டில், டிசம்பர் மாதத் தொடக்கத்தில் என் தோழி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவ்வப்போது வந்து ஒரு வாரம் போல் எங்கள் வீட்டில் தங்கிச் செல்லும் வழக்கம் உள்ளவர். என்னை விட மூத்தவர். வந்த மறு நாளே, தாம் புட்டபர்த்திக்குப் போய் பாபாவைத் தரிசிக்க விரும்புவதாகக் கூறி, தம்மோடு துணைக்கு வர முடியுமா என்று கேட்டார். சம்மதித்தேன். என் தங்கையும் எங்களுடன் புறப்படத் தயாரானாள். கிளம்பினோம்.

ஒரு சிறு வீட்டை அமர்த்திக்கொண்டு புட்டபர்த்தியில் மூன்று நாள்கள் தங்கினோம். மூன்று நாள்களிலும் பாபாவின் தரிசனம் நிறையவே கிடைத்தது. பாபா பக்தர்களிடையே வலம் வந்த போது, பலர் அவரிடம் தங்கள் வேண்டுதல் மனுக்களை நீட்டினார்கள். சிலரிடமிருந்து மட்டும் அவற்றை அவர் கை நீட்டிப் பெற்றுக்கொண்டார். வெற்றி பெறாத மக்கள் மறு நாளுக்குக் காத்திருக்க முற்பட்டார்கள்.

கூட்டமான கூட்டம்! லட்சக் கணக்கான மக்கள் குழுமி யிருந்த இடத்தில் ஒருவர் பெருமூச்சு விட்டால் கூடக் காதில் விழும் அளவுக்கு அந்தப் பெரிய வளாகத்தில் அமைதி நிலவியது. நம் இந்துக் கோவில்களில் இருக்கும் இரைச்சலும், சளசளப்பும் கடுகளவும் அங்கே இல்லை. நம் நாட்டின் அதே மக்களா இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இங்கே அமைதியாக இருக்கிறார்கள் எனும் வியப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அரிய ஆன்ம சக்தி இருந்தாலல்லாது இது சாத்தியமாகுமா எனும் கேள்வி முதன் முறையாக என் மனத்தில் எழுந்தது. (ஆனால் அதற்காக நான் எனது அவநம்பிக்கையினின்று மீண்டுவிடவில்லை. இதுவும் ஒரு மந்திர சக்தியின் விளைவாக இருக்கலாம் என்று அடுத்த கணமே என் (குரங்கு) மனம் நினைத்தது.)

பாபாவைப் பற்றி ஜெர்மானியர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த நூல் ஒன்றை வாங்கினேன். அன்பான பார்வையாலும், அழகான சிரிப்பாலும் எவரையும் கவர்ந்து விடும் பாபாவின் புகைப்படங்கள் சிலவும் வாங்கினேன்.

புட்டபர்த்தியிலிருந்து நாங்கள் புறப்பட இருந்த நாளில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட செய்தி வந்தது. எனவே மேலும் ஒரு நாள் தங்கிவிட்டுக் கலவரம் நிகழக்கூடிய அபாயம் இருந்த வழித்தடத்தைத் தவிர்த்து, பங்களூர் வழியாகச் சென்னைக்குப் பயணமானோம்.

சென்னைக்குத் திரும்பிய பின், என் அம்மாவின் விருப்பம் போல் நின்றுகொண்டு ஆசிவழங்கும் தோற்றத்தில் பாபா இருந்த நாள்காட்டியைக் கூடத்தில் மாட்டிவைத்தேன். எனினும் புட்டபர்த்தி விஜயம் என்னுள் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் விளைவிக்கவில்லை.

இதன் பின் ஒரு வாரம் கழித்து ஓர் இரவில் என் அறையைத் துப்புரவு செய்தேன். மேசை மீதிருந்த தமிழ்த் தட்டெழுத்துப் பொறியைக் கொண்டு போய்க் கூடத்தில் இருந்த மேசை மீது வைத்து விட்டு, எனது அறைக்குத் திரும்பி வந்து என் மேசை இழுப்பறையிலிருந்து பேனாக்கள் வைத்திருந்த ஒரு நீள் சதுரப் பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த பேனாக்களை இழுப்பறைக்குள் போட்டுவிட்டுத் தூசு படிந்திருந்த அந்த டப்பாவைச் சோப்புப் போட்டுக் கழுவி ஒரு துணியால் துடைத்த பின் அதை மேசை மீது அதன் ஈரம் காய்வதற்காக வைத்துவிட்டு, அப்படியே மேசையையும் ஓர் ஈரத்துணியால் துடைத்தேன் பிறகு, என் அறைக் கதவைச் சாத்திவிட்டு, கூடத்துக்குப் போய்ப் படுத்தேன்.

மறு நாள் காலையில் வழக்கம் போல் காஃபி போடப் பால் பையை எடுப்பதற்காக ஃப்ரிட்ஜைத் திறந்தேன். அதன் கதவை அவசரமாய்த் திறந்த அதிர்வில் அதன் மீது அதன் கதவை ஒட்டினாற்போல் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருள் தவறித் தரையில் விழுந்து சிதறியது. அது ஒரு கண்ணாடிக் குப்பி. மிகச் சிறிய, அழகான வாசனைத் தைலக் குப்பி. என் தங்கை மகன் அதை ஃப்ரிட்ஜின் மீது வைத்திருந்திருக்கிறான். அடிக்கடி ஆர்வத்துடன் அவன் முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்தக் காலிக் குப்பி சிதறிவிட்டது கண்டு நான் சற்றே அதிர்ந்து போனேன். அவன் தூங்கி எழுந்ததும் அது விழுந்து உடைந்து போய் விட்ட விஷயத்தை எப்படி அவனிடம் சொல்லப் போகிறோம் என்று மலைப்பாக இருந்தது.

பால் பையை எடுத்துக்கொண்டு ஃப்ரிட்ஜை மூடிய கணத்தில் அருகில் கைகளை உயர்த்தி ஆசி வழங்கும்கோலத்தில் கூடத்துச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த நாள்காட்டியில் இருந்த பாபாவின் படம் பார்வையில் பட்டது. அதைக் கண்டதும் என் மனத்தில் சட்டென்று குறும்புத்தனம் நிறைந்த எண்ணம் ஒன்று தோன்றியது. “பாபா! உன்னை எல்லாரும் கண்ணனின் அவதாரம் என்பதாய் நம்பிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிறிதேனும் உண்மை இருந்தால், உடைந்து சிதறிச் சுக்கல் சுக்கலாய்ப் போய்விட்ட சென்ட் பாட்டிலைத் திருப்பிக் கொண்டு வா, பார்ப்போம்!என்று அவரை மரியாதையற்று ஒருமையில் விளித்துச் சவால் விட்ட பின், பால் பையை மேசை மீது வைத்து விட்டு, தரையில் சிதறிக்கிடந்த கண்ணாடித் துகள்களை விளக்கு மாற்றால் குவித்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாயைக் கட்டிய பின் தெருவுக்குப் போய்ச் சுற்றுச் சுவருக்கு வெளியே போட்டுவிட்டுத் திரும்பினேன்.

பிறகு பால்பையுடன் அடுக்களைக்குப் போய்க் காஃபி போட்டு நான் மட்டும் குடித்தேன். (மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.)

பின்னர், ஃப்ரிட்ஜைக் கடந்து, வழியில் ஆசிவழங்கிக்கொண்டிருந்த பாபாவை நோக்கி ஒரு கேலிப் புன்னகை புரிந்த பின் என் அறைக்குப் போனேன். அறையின் சன்னல் கதவுகளைத் திறந்த எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்த்து. முந்திய இரவு நான் கழுவிக் காலியாய் வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் பளபளப்பாய் ஏதோ ஒளிர்ந்தது. நான் திகைப்புடன் நெருங்கிப் பார்த்தேன். அதைக் கையில் எடுத்துப் பார்த்து அதிர்ந்தும் திகைத்தும் போனேன்.தூள் தூளாய்ச் சிதறிப் போன பின் தெருவில் வீசப்பட்ட அதே போன்ற ஒரு கண்ணாடிக் குப்பிதான் அந்தப் பொருள்!

நான் சிலிர்த்துப் போனேன். என்னால் நம்பவே முடியவில்லை. அது கனவா, நினைவா என்பது புரியாமல் அவள் தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்என்று எழுத்தாளர்கள் எழுதும் சொற்கள்தான் நினைவுக்கு வந்தன. நான் அதற்கு முன்னர் உணர்ந்தே அறிந்திராத ஒரு பரவசத்தில் மனம் ஆழ்ந்தது. விழிகள் கலங்கின. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு சிலிர்ப்புப் பரவிப் பின் சில நொடிகளில் நின்று போனது. அந்தக் கண்ணாடிக் குப்பியை எடுத்துத் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்தபின், யாரேனும் என்னைப் பார்த்துச் சிரிக்கப்போகிறார்களே என்னும் கூச்சத்தால், இன்னும் யாரும் விழித்தெழவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின், பாபாவின் படத்துக்கு எதிரே கைகூப்பி நின்று, “பாபா! என்னை மன்னித்துவிடுங்கள்! நீங்கள் கடவுளாக இல்லாதிருக்கலாம். ஆனாலும் தெய்வாம்சம் நிறைந்தவர் என்பதைப் புரிந்துகொண்டேன்!என்று முணுமுணுத்துக்கொண்டேன்.

நான் பாபாவை வேண்டிக்கொண்டேன். அதன் பின் மந்திரம் போட்டது போல் என் உடல்நிலை சரியானதுஎன்று எவரேனும் சொன்னால், அது காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதை என்று சொல்லிவிடலாம். அல்லது மூட நம்பிக்கை, பிரமை என்றெல்லாம் கிண்டலடித்துச் சிரிக்கலாம். ஆனால், கடுகுகளின் அளவில் சுக்கலாகிப் போன ஒரு கண்ணாடிக் குப்பி மீண்டும் அதே உயரம், அதே பருமன், அதே வேலைப்பாடு போன்றவற்றுடன் என் மேசைக்குத் திரும்பி வந்த நம்பத்தகாத நிகழ்வுக்கு அறிவுஜீவிகளும், விஞ்ஞானிகளும் என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்? நான் பாபாவிடம் விட்ட சவால் எப்படி அவருக்குத் தெரிந்த்து? (ஆனால் எனக்கு ஏற்பட்ட பரவசத்திலும், வியப்பிலும் நான் வீசிய பை சுற்றுச்சுவர்க்கு அருகில் கிடந்ததா என்பதைப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை. மறு நாள் தான் அந்த எண்ணம் வந்தது. ஆனால் அது அங்கே இல்லை. குப்பையள்ளுபவர் எடுத்துச் சென்றிருக்கக்கூடும் என்று தோன்றியது.)

அன்றிலிருந்து நான் புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் பக்தை யானேன். அவரது தெய்வத்தன்மை மீது நம்பிக்கை கொண்டவளானேன். இன்று வரை தொடரும் அந்த நம்பிக்கை என்றும் தொடரும்.

என் தங்கைகளுக்கு மட்டும் அந்த அதிசய நிகழ்வு பற்றிச் சொன்னேன். அதற்கு முன்னர் வரை நான் பாபாவை நம்பாதவளாக இருந்ததால், நான் சொன்னது உண்மையே என்று அவர்கள் நம்பினார்கள். உடனே என் தோழி அனசூயாவின் ஞாபகம்தான் வந்த்து. பாபாவின் பீடத்தில் இதய நோய்க்கான மாத்திரை திடீரென்று முளைத்ததாய் அவள் சொன்னதை ஏற்காததற்கும் சேர்த்து பாபாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். இதனிடையே என் தோழி காலமாகிவிட்டிருந்ததால் அவளிடம் அது பற்றி மனசிகமாக மட்டுமே பேச முடிந்தது.

jothigirija@live.com

Series Navigationஅண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]வீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :

80 Comments

  1. Avatar ஷாலி

    கட்டுரையாசிரியர் எழுதிய சம்பவங்கள் எல்லாம் மிக மிக ஆச்சரியமும்,அதிசயமூட்டும் செய்திகள்தான்.புட்டபர்த்தியில் இருந்துகொண்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் உள்ள பக்தர் வீடுகளில் அதிசயம் நடத்துவது,சாதாரண மானிட ஜென்மங் களால் நிச்சயம் முடியாது.இதுபோன்ற காரியங்கள் கடவுள் எனும் ஆதி பகவானால்தான் முடியும்.இப்படிப்பட்ட பகவான், கடவுளும் இறந்து விட்டார் என்பதுதான் சற்று யோசைனையில் ஆழ்த்துகிறது.மேலும் அங்கு நடந்த கொலைகள்,கூடா உறவு போன்ற செய்திகளும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
    பொதுவாக அதிசயங்களை தெய்வ அனுக்கிரகம்? உள்ள பாபாக்கள் மட்டுமே நிகழ்த்துவார்கள் என்பதில்லை. தெய்வத்திற்கு எதிரியான சாத்தான்களாலும் அற்புதம் நிகழ்த்த முடியும். கர்த்தராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பிசாசு நாற்பது நாள் சோதித்ததாக பைபிள் கூறுகிறது. (மத்தேயு.4:1)கள்ள தீர்க்கதரிசிகளாலும் அற்புதங்கள் காண்பிக்க முடியும் என்றே பைபிள் கூறுகிறது. “நல்லவர் போலும் கள்வர்” என்கிறார் வள்ளுவர்.
    இதுபோல் இஸ்லாம் மார்க்கத்தில் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்த இப்லீஸ் ஷைத்தானாக சபிக்கப்பட்டு இறை சன்னிதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.அப்பொழுது அவன் கேட்ட வரம், இறைவா! எனக்கு அனுமதியும் ஆற்றலும் நீ கொடுத்தால் உன்னுடைய நல்லடியார்களை நான் வழி கெடுத்து பாவியாக்கி விடுவேன்.” ஷைத்தான் எனும் சாத்தானுக்கும் அற்புதங்களைக்காட்டி மனிதர்களை நரகத்தில் வீழ்த்தும் ஆற்றல் கொடுக்கப்பட்டுள்ளது.
    ஒட்டு மொத்த இப்பிரபஞ்சத்தை படைத்த ஒரே ஒரு இறைவனை, ஒரே ஆண்,பெண்ணில் பிறந்த உலக மாந்தர் வழிபடக்கூடாது என்பதில் சர்வ மத சாத்தான்கள் சர்வ ஜாக்கிரதையாக உள்ளனர்.அற்புதம் என்ற விளக்கில் விழும் விட்டில் பூச்சி மனிதர்களை பார்க்க பரிதாபமாகவே உள்ளது.
    அதிலும் பெண்கள் இளகிய மனம் உள்ளவர்கள் மேட்டிலிருந்து பாயும் வெள்ளமாய் ஓடுவதில் அதிசயமில்லை.
    ஒரு தீர்க்கதரிசன செய்தியை சொல்லி முடித்துக்கொள்கிறேன். இறுதிக்காலத்தில் கடவுளுக்கு எதிரியான அந்திகிருஸ்ட் என்னும் (AntiChirist) தஜ்ஜால் பல அற்புதங்களை காட்டி நானே கடவுள் என்று கூறுவான்.பெய்! என்றால் மழை பெய்யும். நில்! என்றால் நிற்கும்.வானத்திலிருந்து உணவை மலை போல் குவித்து உண்ணச் சொல்வான்.உயிருடன் ஒரு மனிதனை கொன்று மீண்டும் உயிர் கொடுப்பான். இவன்தான் உண்மையான கடவுள் என்று நம்பி முஸ்லிம் பெண்கள் கூட்டம், கூட்டமாய் இவனை ஆராதிப்பார்கள். இவன் ஒரு பொய்க் கடவுள், ஷைத்தான் என்று அறிந்த முஸ்லிம் ஆண்கள் தங்கள் வீட்டுப்பெண்கள் இவனை வணங்கி வழி பட போகக்கூடாது என்று வீட்டினுள் தூண்களில் கட்டி வைப்பார்களாம். அதிசயத்தால் ஆட்கொள்ளப்படுவது அன்றும் இன்றும் என்றும் பெண்களே! பெண்களே!! நம் கண்களே!
    கட்டுரை ஆசிரியை திருமதி.ஜோ.கிரிஜா அம்மா என்னை மன்னிக்கட்டும்.உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.
    “நம்பினோர் கெடுவதில்லை! நான்கு மறைத்தீர்ப்பு! நல்லவர்க்கும் தீயவர்க்கும் ஆண்டவனே காப்பு,பசிக்கு விருந்தாவான்,நோய்க்கு மருந்தாவான்,பரந்தாமன் சன்னதிக்கே வாராய் நெஞ்சே!”

    • Avatar களிமிகு கணபதி

      // தஜ்ஜால் பல அற்புதங்களை காட்டி நானே கடவுள் என்று கூறுவான்.//

      அதாவது புட்டபர்த்தி சாயி பாபா அவர்கள் ஒரு ஷைத்தான், அவர் ஒரு தஜ்ஜால் என்று சொல்லுகிறீர்களா ?

      உங்களது முகமதிய மார்க்கத்தை உருவாக்கிய முகம்மதுவை சாத்தானின் படைப்பு என்று கிறுத்துவர்கள் கூறிவருவதை அறிவீர்கள்.

      அதைக் கேட்கும்போது உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்படுகிறது ? அதே போன்ற உணர்வு மற்ற மதத்தவர்களுக்கும் ஏற்படாதா ? அவர்கள் எல்லாம் உங்களைப் போன்ற உணர்வுகள் கொண்ட சக மனிதர்கள்தானே ?

      இங்ஙனம் அடுத்தவர் மதத்தை இழித்துப் பேசுகிற முகமதியர்களின் வெறுப்புக் கருத்தை மறுத்து, மறுகருத்து கூறினால் “மத உணர்வைப் புண்படுத்துகிறார்கள்”, “செக்யூலரிசம் அழிகிறது”, “ஹிந்துத்துவ மதவெறி” என்று ஒப்பாரி வைக்கிறார்கள் முகமதியர்கள்.

      இதையெல்லாம் தொடர்ந்து பார்க்கும்போது படிக்கும்போது முகமதியர்கள் மேல் மரியாதை முற்றிலும் இல்லாமல் போகிறது. அதன் காரணமாக, தமிழர்களாகிய நாங்கள் இந்த நேருவிய செக்யூலரிசம் பற்றி மறுபரிசீலனை செய்துவருகிறோம்.

      பிற மார்க்கங்கள் சாத்தானின் வழிகள் என்று மனகுழப்பம் செய்யப்பட்டவர்களால் வன்முறையும், வேதனைகளும், அழிவுகளும்தான் உலகில் எஞ்சும் என்று பொதுமக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

      பெண்பித்தனுக்கு ராமச்சந்திரன் என்று பெயர் வைத்ததுபோல, மற்ற மதங்களை அழிக்க வேண்டும் என்று சொல்லுகிற மதத்திற்கு அமைதி மார்க்கம் என்று பெயர் வைத்தார்கள்.

      கேவலமாக இல்லையா ?

      .

  2. ஸ்ரீ சத்திய சாயிபாபா பற்றி இதுபோன்று நிறைய செய்திகள் சொல்லப்படுகின்றன.இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அவர் படத்தில் விபூதித் துகள்கள் கொட்டுவதாகக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். இதை நான் நம்பியதில்லை. ஆனால் இந்தக் கட்டுரையை நம்பகத் தகுந்த ஒருவர் சத்தியம் சொல்லி எழுதியுள்ளதால் குழப்பமே மேலிடுகிறது. அறிவியல் பூர்வமாக இதை எப்படி ஏற்பது அல்லது விளக்குவது என்று தெரியவில்லை….டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar cuziyam

    //புட்டபர்த்தியிலிருந்து நாங்கள் புறப்பட இருந்த நாளில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட செய்தி வந்தது. //

    அம்மா, அந்த ஆக்கிரமிப்புக் கட்டிடத்தின் பெயர் “பாப்ரி கும்மட்டம்”.

    புறப்படும்போதே நல்ல செய்தி கிடைத்துப் புறப்பட்டு உள்ளீர்கள். எல்லாம் அவர் செயல்.

  4. Avatar ஷாலி

    டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்களுக்காக விளக்கம் கொடுப்பவர், யோகி.ஸ்ரீ ராமானந்த குரு.

    “ மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்தைகள் உள்ளன.சில வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது.இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.
    உங்களுக்குத் தெரிந்த நாட்டு வைத்தியர் யாராவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷனம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இது நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்.இருப்பினும் அறிமுகமில்லாதவர்களுக்கு விற்க மாட்டார்கள்.நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள்.அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்துவிடும்.இது எப்படி? திமிர் பாஷனத்தின் தன்மை காற்றிலுள்ள தூசுகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும்.காற்றில் உள்ள தூசுகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.
    மேலும் இந்த திமிர் பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம்.கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊறவைத்து ஒரு பாட்டிலில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.ஏதாவது யோகம்,யாகம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மரக்குச்சிகளின் மீது அந்த கற்பூரத்தை வைத்து மந்திரம் சொல்வதுபோல் முணுமுணுத்து குப்பென்று ஊதுங்கள் கரியமில வாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி எரியும்.

    http://www.ujiladevi.in/2010/12/blog-post_5384.html

    பிள்ளையார் சிலை பால் குடிக்கும் சம்பவங்கள் “சவ்வூடு பரவல்” (Cappillary Attraction) எனும் அறிவியல் வழியே என்பதை டாக்டர்.ஜி.ஜான்சன் அறிந்திருக்கலாம். நன்றி!-ஷாலி.

    • Avatar களிமிகு கணபதி

      //….உங்களுக்குத் தெரிந்த நாட்டு வைத்தியர் யாராவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷனம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இது நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும்…//

      அதாவது ஜோதிர்லதா கிரிஜாவின் தோழியானவர் இந்த நாட்டு மருந்தை வித்தை ஊரை ஏமாற்றி இருக்கிறார் என்று சொல்லுகிறீர்கள். ஒட்டுமொத்தமாக சாயிபாபா பக்தர்கள் எல்லாம் மோசடிப் பேர்வழிகள் என்று முத்திரை குத்திவிட்டீர்கள். சாயிபாபாவை நம்புகிற ஜோதிர்லதா கிரிஜா அவர்களும் உங்கள் பார்வையில் மோசடிப் பேர்வழிதான் போல. நல்ல மதசகிப்புத்தன்மை !

  5. Avatar Indian

    ஷாலி
    Of Course, Sai Baba worshipers are idiots and superstitious. We should believe only Prophet Mohamed ( PBUH) who split the moon and went to heaven on a horse and managed to have regular conversation with Angels.These are verifiable facts! Miracles of Sai Baba are plain con jobs. Thanks for enlightening us poor ignorant mugs.

  6. விளக்கம் தந்துள்ள திரு ஷாலி அவர்களுக்கு நன்றி. நான் ஸ்ரீ சத்திய சாயிபாபா பற்றி ” SAI BABA -The Ultimate Experience ” by ப்ய்ல்லிஸ் Krystal எனும் ஆங்கிலப் பெண்மணி எழுதிய நூலைப் படித்தேன்.இதில் அவர் புட்டபர்த்தியில் ஸ்ரீ சாயிபாபாவின் ஆசிரமத்தில் தங்கி அவருடைய அன்றாட வாழ்க்கையை கவனித்து அவருடன் பேசி எழுதிய நூல் இது. இதில் பல விசித்திரமான, நம்ப முடியாத, அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன! இவர் அவரின் பக்தி என்பது குறிப்பிடத் தக்கது.

    நான் ஒரு மருத்துவர் என்ற காரணத்தால் அதில் உள்ள ஒரு பகுதியை தருகிறேன். படித்துப் பாருங்கள். இதை எப்படி ஏற்பது?

    + He explained that he materializes objects by his sankalpa, a mental powerthat creates. He added that if we develop our mental power and purify our hearts we can also do it, provided, we love the entire creationas he does.
    They asked ,” Whay is the scientific ezplanation?> Will science ever understand your materialization? ”
    Baba replied,” Material science can never understand it. The scope of science is limited because it does not go beyond the manifest world. Science deals with experiments, whereas spirituality deals with experience and inner vision. I can see matter where the best microscope can find none., Even the best doctor needs the help of an X-ray film and the results of clinical tests of blood, urine and stool to diagnose a complicated disease. BUT I NEED NONE. I CAN GIVE YOU THE CORRECT DIAGNOSIS STRAIGHT AWAY.” page 126.

    டாக்டர் ஜி.ஜான்சன்.

  7. Avatar ஷாலி

    அன்புள்ள டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்களின் பதிலுக்கு நன்றி!
    ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களைப்பற்றிய விபரங்களைக் கூறி இதை எப்படி ஏற்பது? என்று என்னிடம் கேட்பதைவிட, அன்பு நண்பரும் சாயி பக்தருமான இந்தியன் அவர்களே இதற்க்கு பதிலளிக்க பொருத்தமானவர் என்று நினைக்கிறேன்.நல்ல ஆங்கிலப்புலமை உள்ளவர்.உங்கள் ஆங்கிலத்திற்கு ஈடு கொடுக்கக்கூடியவர்.எனக்கு தமிழை விட்டால் வேறு கதியில்லை.நன்றி!

    • Avatar களிமிகு கணபதி

      //…எனக்கு தமிழை விட்டால் வேறு கதியில்லை…//

      தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரானைத்தான் ஓதி வருகிறீர்களா ?

  8. Sai Baba lived like a spiritual human being and died like an ordinary human being. He was a not a medical doctor who can diagnose, or explore nature like a scientist or play like a God.
    People can believe anything what they want to believe.

    S. Jayabarathan

    • Avatar புனைபெயரில்

      இயேசு நாதர் அப்பம் மீன் பங்கிட்டல், தொழுநோயை குணப்படுத்தியது எல்லாமே , இமயமலையில் கற்ற ஏகாந்த நிலைப்பாட்டின் உய்வே. புட்டப்பூர்த்தி சாய்பாபாவின் மேலும் இருக்கும் குற்றச்சாட்டுகள் தாண்டி அவரால் சாதிக்கப்பட்டது அதிகம். மிஷினரிகளின் அட்டூழியம் போல் அல்லாமல், மதம் மாறச் சொல்லாமல் பல நன்மைகள் செய்தார். புட்டப்பூர்த்தி என்ற புல் பூண்டு முளையா வறண்ட பிரதேசம் இன்று இருக்கும் நிலை, அவரது ஒயிட் ஃபீல்ட் ஆஸ்ரமம், மருத்துவமனைகள் என்பன சாமான்யன் தாண்டி சாதிக்கப்பட்டவை. இயேசு நாதர் ஜொஸபின் காண்ட்ரவர்சி தாண்டி வழிபடப்படுவது போல் தான் இவரும்.

  9. Avatar Indian

    Thank you Shri Shali. I hope Thinnai will permit me to write in English. For a starter. I am not a follower of Sai Baba. Neither I believe nor I dis believe his miracles. I was in Mumbai last year and experience first hand the miracles of Shri Sai Baba . I was taken to an ordinary apartment, with very basic amenities . There was this huge puja room with Sai Baba’s picture every where. Vibudhi was falling from pictures and ceiling. ( from INSIDE the pictures also) . There was this empty table in front of the pictures and soon the top of the table was filled with heaps of vibudhi. This humble man of this apartment pulled out 3 solid metal /brass idols after clearing the vibudhi (Vinayak, Lakshmi and Ambal) for our family. I have never met this man before and absolutely there was no reason for this gift. He told me that Baba told him to gift these idols. Shri Sai Baba still literarily lives in his house in spiritual form. Thre was continuous video monitoring of is puja room and you cann see steps of Bab appearing in those videos. I am a doctor and have spent 4 decades working overseas. Hard to believe these incidents but true. My overseas born and brought up daughters were dumbstruck . As I see it, humans have only limited senses. We an only see certain spectrum of light, can hear only certain frequencies and our sense of smell is very limited. With our limited intellect it is neigh impossible to understand the infinite. Simply put, what we see,hear and smell is different from what is out there. Lesson I learnt: never knock anything that is considered holy and revered just because you do not understand. The explanation of falling of vibudhi by using Thimir bhashanam is simply laughable.

  10. Avatar ஷாலி

    ஸ்ரீ சாயிபாபா,பிரேமானந்தா,நித்தியானந்தா,கல்கி, மற்றும் பங்காரு அடிகளார் போன்ற அனைவருமே தங்களை பகவான் மற்றும் அவதாரம் என்றே கூறிக்கொள்கின்றனர்.இவர்கள் மடங்களில்,மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்,இவர்களில் ஒருவர் அவதாரமேன்றால் மற்றவர்கள் அனைவரும் போலி.ஏனென்றால் இவர்கள் அனைவரும் சம காலத்தவர்கள்.ஒரு தொலைகாட்சி நேரடி நிகழ்ச்சியில் யாகவா முனிவரும் கல்கி பகவானும் நீயா-நானா என்று மோதிக்கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே.இவர்களுக்கு பொதுவான கொள்கை என்று எதுவும் கிடையாது.மக்களின் அடிப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக வைத்து தங்கள் சில டெக்னிக் சித்து வேலையை அற்புதமாக்கி அவதார புருஷர்களாக ஆகி விடுவர். மக்களும் தங்கள் கண்ட விபூதி காட்சியை, உண்மைக்கு சாட்சியாக வைத்து (கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா?…… உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?) நம்பி சேவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
    ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் ஒரு அவதாரம்தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளாரின் பக்தரிடம் சென்று நித்தியானந்தரும் ஒரு அவதாரம் தானே என்று கேளுங்கள் எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.இந்த அவதாரங்களின் லட்சணம் எல்லாம் அவரவர் பக்தர் என்ற அளவில்தான். ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமகா தலைவன் என்று உயர்த்திப்ப் பாடுவதுபோலவே, மதவாதிகள் தங்கள் கடவுள்தான் டாப்பு.மற்றேதெல்லாம் டூப்பு என்று கூறுவது போல்தான் அவதார பக்தர்களின் அலம்பல் இருக்கும்.

    உண்மையான ஒரே இறைவனுக்கு,பகவானுக்கு, விபூதியை கொட்டியோ, மோதிரம், லிங்கம் வரவழைத்தோ பக்த கூட்டத்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.அது இறைவனுக்கு தகுதியும் இல்லை.இது போன்ற மலிவான யுக்தி கார்பொரேட் கம்பெனி நடத்தும் பகவான்களுக்கே தேவை.
    கட்டுரையாசிரியர் ஜோதிர்லதாகிரிஜா அம்மா அவர்களும்,அன்பு நண்பர் டாக்டர்.இந்தியன் அவர்களும் விபூதி கொட்டும் அதிசயத்தை பார்த்தது ஏற்கனவே “ஏற்ப்பாடு” செய்து வைத்திருந்த ஒரு வீட்டில்தானே தவிர தங்களது வீட்டிலுள்ள பாபா படத்தில் கொட்டுவதாக சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
    கடவுள் அற்புதம் செய்பவர்தான்! ஆனால் அற்புதம் செய்பவர்கள் எல்லாம் கடவுளல்ல! கடவுளை அறிவதற்கு அற்புதத்தை அளவுகோலாக்கக் கூடாது. நல்லவேளை நரகாசுரன் இன்று இல்லை.இருந்திருந்தால் சிவனிடம் பெற்ற தவ ஆற்றலால் பிறர் தலையில் கைவைத்து சாம்பலாக்கும் அற்புதத்தை கண்டு நம் மக்கள் அநேகர் அவனை பகவானாக்கி மகிழ்ந்திருப்பர். ஏனெனில் வரம் கொடுத்த சிவனே அவனைக்கண்டு பயந்து ஓடியது நாம் தெரிந்ததே. கள்ளன் பெரியவனா? அல்லது காப்பான் பெரியவனா? என்ற கேள்விக்கு கள்ளனே! என்பதுதான் நன்கு படித்த பகவான் பக்தர்களின் பதிலாக உள்ளது.ஆகவே நாமும் பாடுவோம் சாய் பஜன்.

  11. Avatar ஷாலி

    இன்று ஸ்ரீ சாயிபாபா,பிரேமானந்தா,நித்தியானந்தா,கல்கி, மற்றும் பங்காரு அடிகளார் போன்ற அனைவருமே தங்களை பகவான் மற்றும் அவதாரம் என்றே கூறிக்கொள்கின்றனர்.இவர்கள் மடங்களில்,மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்,இவர்களில் ஒருவர் அவதாரமேன்றால் மற்றவர்கள் அனைவரும் போலி.ஏனென்றால் இவர்கள் அனைவரும் சம காலத்தவர்கள்.ஒரு தொலைகாட்சி நேரடி நிகழ்ச்சியில் யாகவா முனிவரும் கல்கி பகவானும் நீயா-நானா என்று மோதிக்கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே.இவர்களுக்கு பொதுவான கொள்கை என்று எதுவும் கிடையாது.மக்களின் அடிப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக வைத்து தங்கள் சில டெக்னிக் சித்து வேலையை அற்புதமாக்கி அவதார புருஷர்களாக ஆகி விடுவர். மக்களும் தங்கள் கண்ட விபூதி காட்சியை, உண்மைக்கு சாட்சியாக வைத்து (கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா?…… உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?) நம்பி சேவிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
    ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் ஒரு அவதாரம்தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளாரின் பக்தரிடம் சென்று நித்தியானந்தரும் ஒரு அவதாரம் தானே என்று கேளுங்கள் எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.இந்த அவதாரங்களின் லட்சணம் எல்லாம் அவரவர் பக்தர் என்ற அளவில்தான். ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமகா தலைவன் என்று உயர்த்திப்ப் பாடுவதுபோலவே, மதவாதிகள் தங்கள் கடவுள்தான் டாப்பு.மற்றேதெல்லாம் டூப்பு என்று கூறுவது போல்தான் அவதார பக்தர்களின் அலம்பல் இருக்கும்.

    உண்மையான ஒரே இறைவனுக்கு,பகவானுக்கு, விபூதியை கொட்டியோ, மோதிரம், லிங்கம் வரவழைத்தோ பக்த கூட்டத்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.அது இறைவனுக்கு தகுதியும் இல்லை.இது போன்ற மலிவான யுக்தி கார்பொரேட் கம்பெனி நடத்தும் பகவான்களுக்கே தேவை.
    கட்டுரையாசிரியர் ஜோதிர்லதாகிரிஜா அம்மா அவர்களும்,அன்பு நண்பர் டாக்டர்.இந்தியன் அவர்களும் விபூதி கொட்டும் அதிசயத்தை பார்த்தது ஏற்கனவே “ஏற்ப்பாடு” செய்து வைத்திருந்த ஒரு வீட்டில்தானே தவிர தங்களது வீட்டிலுள்ள பாபா படத்தில் கொட்டுவதாக சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
    கடவுள் அற்புதம் செய்பவர்தான்! ஆனால் அற்புதம் செய்பவர்கள் எல்லாம் கடவுளல்ல! கடவுளை அறிவதற்கு அற்புதத்தை அளவுகோலாக்கக் கூடாது. நல்லவேளை நரகாசுரன் இன்று இல்லை.இருந்திருந்தால் சிவனிடம் பெற்ற தவ ஆற்றலால் பிறர் தலையில் கைவைத்து சாம்பலாக்கும் அற்புதத்தை கண்டு நம் மக்கள் அநேகர் அவனை பகவானாக்கி மகிழ்ந்திருப்பர். ஏனெனில் வரம் கொடுத்த சிவனே அவனைக்கண்டு பயந்து ஓடியது நாம் தெரிந்ததே. கள்ளன் பெரியவனா? அல்லது காப்பான் பெரியவனா? என்ற கேள்விக்கு கள்ளனே! என்பதுதான் நன்கு படித்த பகவான் பக்தர்களின் பதிலாக உள்ளது.ஆகவே நாமும் பாடுவோம் சாய் பஜன்.

  12. Avatar Indian

    Sorry, I forgot to mention this. The three idols we received from Sai Baba were about 10x4cm in size and made of solid metal.

  13. Avatar IIM Ganapathi Raman

    //As I see it, humans have only limited senses. //

    Sai Baba is a human. How comes a human is vested with such supernatural or superhuman powers.

    இக்கேள்வியை ஆராயும்போது நமக்குத் தென்படுவது: கடவுள் மட்டுமே நம்மைவிட சக்தி பொருந்தியவர். மனிதர்கள் இல்லை. இப்படியிருக்கும்போது ஒரு பெண்ணின் வயிற்றில், அப்பெண்ணும் அவள் விரும்பிய ஆணும் – சிற்றின்பத்தில் இணையும் போது – உருவான ஒரு மனிதப்பிறவிக்கு எப்படி கடவுளுக்கு இருக்க வேண்டிய அமானுஷய சக்திகள் வந்தன? பதில் ஷாலி சொல்வது போலல்லவா வருகிறது? அஃதாவது, கிருத்துவம், இசுலாம் மட்டுமில்லாது இந்து மதமும் – சாத்தான்கள், அரக்கர்களுக்கும் கடவுளையே நேர்கொள்ளும் சக்திகள் உண்டு என்று படிக்கிறோம். எனவே இங்கே நாம் பேசும் நபருக்கு அப்படித்தான் இல்லையா? so says Shali and we are tending to agree. Otherwise, how to a/c for all?

    The Question – or the Overwhelming Question – is not whether he has them. It is why did he alone have?

    Attempt the answer.

    அடுத்து ஆரிந்த ஆள்? கடவுளா? இல்லை மனிதரா? இக்கேள்விக்கும் பதிலைச்சொல்க.

  14. Avatar IIM Ganapathi Raman

    //I am a doctor and have spent 4 decades working overseas//

    I am not surprised. Being a doctor does not give one the courage to examine. Courage to question and examine may be absent in so many.

    பிள்ளையார் பால் குடித்தார் என்று நம்பிய கூட்டத்தில் மருத்துவர்களும் மெத்த கல்வி பெற்றோரும் ஏராளம். நம் நாட்டில் பட்டிக்காட்டானோ கல்லாதவனோ நீருபிக்க முடியா நம்பிக்கைகளை நம்பும் எண்ணிக்கயை விட கற்றவர்கள் நம்புவது எண்ணிக்கையில் அதிகம். கல்லாதவன் நம்பி போய்விடுவான். கற்றவனோ உண்டியல் பிரித்து கோயில் கட்டுகிறான். எனவே கல்வி என்பது இருவகை: ஒன்று கல்லாதவனுக்கு இருக்கும் குணங்க்ளை அழிக்காமல் வைத்து வாழ்வது. இன்னொன்று அழித்துவிடுவது.

    “நான் மருத்துவர்; இருப்பினும் சொல்கிறேன்”. “நான் நோபல் பரிசு பெற்ற பவுதீஅ விஞ்ஞானி இருப்பினும் சொல்கிறேன்…” எனப்தெல்லாம் சுத்த உடான்ஸ். நீங்களும் அவர்களும் ஒன்னுதான் சாமி.

    நீட்டா எழுதிக்கிட்டே போங்க. நீங்கள் மருத்துவர் நம்புகிறீர்கள். அதைப்படித்துவிட்டு அடடே இவரே நம்புகிறாரே என நான் நம்ப வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கிறதே இஃது ஒரு ஏமாற்று வேலை.

    லேகியம் விற்பவனும் ஜோஷியக்காரனும் பல புள்ளிகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வைத்திருப்பான். பார்ப்பவர்கள் அடடே இவர்களே நம்பும்போது உண்மையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்குவதுதான் இங்கு நோக்கம்.அதைப்பார்த்து நாம் நம்பி வாங்க வேண்டுமென்பது எண்ணம்.

    நான் மருத்துவர். இருப்பினும்…என்பது அதே வகை ஏமாற்று. Sorry.

  15. Avatar IIM Ganapathi Raman

    அடடே இவரே சொல்லும்போது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அச்சத்தை எழுத்தாளரும் உருவாக்குவார் கண்டிப்பாக.

    ஆயிரம் வாசல் இதயம். எனவே பல காற்றுக்கள் இலகுவாக உள்ளுழைந்து விட முடியும். எரிகின்ற கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்பது? நுழையும் காற்றில் எது துர்காற்றென்பது?

    இதுவரை படித்ததிலிருந்து எழுத்தாளரின் ஒரு குணம் எனக்குத் தெரியவருகிறது. தப்பிருந்தால் மன்னிக்கவும்.

    அதாவது இவருக்குப் பெரிதாக ஆழமான கடவுள் பக்தியோ நம்பிக்கையோ இருந்ததாகத் தெரியவில்லை.

    இதை ஏன் சொல்கிறேன் என்றால், கடவுள் நம்பிக்கை என்பது 99.999999 என்று கிடையாது. அஃது எப்போதுமே 100 விகிதமே. அப்படி முழநம்பிக்கையில்லாதவ்ர்கள் கடவுளை மாற்றிக்கொண்டேயிருப்பார்கள். இவர்களை விட நாத்திகர் பெட்டர். அவர்கள் கடவுள் இல்லை என்பதை முழுமையாக நம்பினால்.

    இப்படி முழு நம்பிக்கை இல்லாதவர்கள் பாபாக்களையும் சாமியார்களையும் உடனே நம்பிவிடுவார்கள். நம் எழுத்தாளர் கொஞ்சம் விட்டுப்பிடித்து நம்பி விட்டார். அவ்வளவுதான்.

    One cannot serve God and Mammon என்பார்கள். No man can serve two master என்பார்கள்.

    அப்படிப்பார்க்கும்போது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், இருப்பது போல நடிப்பவர்கள், முழக்க நம்பாதவர்கள் – இப்படிப்பட்டோரை சாமியார்கள் தம்வசப்படுத்த முடியும்.

    All those who believe in the miracles of Sai Baba are atheists. I am not sorry to say this.

    I don’t believe in any saamiaar’s miracles. Because I believe in my God.

  16. Avatar ஷாலி

    “ஆண்டியை அடித்தால் சாம்பல்தான் பறக்கும்” என்று அன்று சொல்லுவார்கள்.இன்று காவி கட்டிய கார்ப்பரேட் ஆண்டிகளை அண்டினால் விபூதி சாம்பல் மட்டும் கொட்டுவதில்லை, அவர்கள் காட்டில் கரன்சி மழையும் கொட்டுகிறது. மொத்த சொத்து நாற்பதாயிரம் கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடிவரை உள்ளது.இதில் பொது மக்களுக்கு செய்த தண்ணீர் வசதி,ஆஸ்பத்திரி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் ஆயிரம் கோடி.” கொட்டும் விபூதி.. ஆன்மீக புகையில் அறிவு மயங்கி கிரங்கி விடுவதில் ஆச்சரியமில்லை.நம்மாழ்வார் சொன்னதுபோல் “உளன் என்றால் உளன்! அளன் என்றால் அளன்!!”. உண்டு என்றால் அது உண்டு,இல்லையென்றால் அது இல்லை! எம்ஜியார் படத்துக்காக மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் வரிகள் மனதில் வருகிறது.

    “கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்,
    உண்மை இல்லாதது.
    அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது.

    காவலரே வேசமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
    கண் முன்னே தோணுவது சாத்தியமே!
    காத்திருந்த கள்வனுக்கு கை விலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்குத் தோணாத சத்தியமே,
    போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்!

  17. Avatar nallavan

    இங்கு ஒரு சிலரின் கருத்து ஏற்கபட்டால் — பரிசுத்த ஆவியல் இட்லி வேகுமா — என்று கேட்டது கூட சரிதான?? வசனம் பேசுபவர்கள் எப்படி என்று பார்போம்?

    • Avatar IIM Ganapathi Raman

      நல்லவன் ஏன் இழிசொற்களை எழுதுகிறார்? அவரெழுதியதை நான் நாகரிகமாக எழுதி அவருக்குப் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்கலாமென நினைக்கிறேன்.

      இயேசு நாதர் மனிதர்களுக்குப் பிறந்தவர். அவரின் அமானுஷ்ய செயல்களை எப்படி ஏற்றுக்கொண்டு அவரைக் கடவுளாக வழிபடுகிறார்க்ளே? எப்படி? அது சரியென்றால் சாய பாபாவும் கடவுள்தானே? இப்படிக்கேளுங்கள் நல்லவன்.

      இந்துத்வம் என்பது நாகரிகாமனது என்பதை 100/100 நம்புங்கள். பிறருக்கும் சொல்லூங்கள்.

      I have not used any offensive words about Sai Baba. I didn’t even call his miracles a hogwash. All I ask is why should a man be invested with such superhuman powers? Only he, why? In Hindu puranas, only rakshas are invested with such powers equal to God?

      Why don’t you answer me ? But you should use decent words!

  18. சாய்பாபாவின் புரட்டுகளை வீடியோ ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய பின்னும் ஜோதிர்லாதா கிரிஜா போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் எப்படி இப்படி ஒரு நம்பிக்கையை இன்னும் வைத்துள்ளார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’என்பதுதான் நமது முன்னோர்களின் வழிபாடு. அது எந்த பெயரிலாவது இருந்து கொள்ளட்டும். ஆனால் தயவு செய்து மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களை இறைவனாக்கி அந்த ஏக இறைவனை சிறுமைப்படுத்தாதீர்கள்.

    • Avatar புனைப்பெயரில்

      மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களை இறைவனாக்கி –> இது பிற மதத்தில் இருக்கும் தூதர்களுக்கும் பொருந்துமா? சொல்வீர்களா?

    • Avatar பொன்.முத்துக்குமார்

      // ஆனால் தயவு செய்து மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களை இறைவனாக்கி அந்த ஏக இறைவனை சிறுமைப்படுத்தாதீர்கள். //

      மல ஜலம் சுமந்து கொண்டிருக்கும் மனிதனையும் தெய்வமாக போற்றுகிற ஒரு மரபும் இவ்வையகத்தில் உண்டு. அது இறைவனை சிறுமைப்படுத்துமா இல்லையா என்பது தனி நபர் பார்வை சார்ந்தது. ஆனால் தனது பார்வை சார்ந்து அப்படி செய்யாதீர்கள் என்று மற்றவர்களை சொல்வது என்ன விதமான பார்வை என்று புரியவில்லை.

      சாய்பாபா வாழ்வாங்கு வாழ்ந்தவரா என்று நானறியேன். ஆனாலும் உங்களது மேற்சொன்ன வாக்கியத்துக்கு பதிலாக இதை சொல்ல தொன்றுகிறது.

      வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப் படும்.

      • Avatar IIM Ganapathi Raman

        மனிதருள் மாணிககங்களை அப்படி போற்றுவது உண்டென்றாலும் இறைவனுக்கு ஈடாகப்போற்றும் மரபு கேள்விக்குறியதே.

        காரணம் இறைவன் அனைத்தையும்விட மேலானவன் என்றால் ‘ஈடு’ என்ற பேச்சுக்குமிடமேயில்லையிங்கே!. உண்டு என்றால் அஃதொரு எக்ஸாகிரேசன் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். எக்ஸாகிரேசன் ஒரு உணர்ச்சிப்பெருக்கில் பேசப்படுவது. பின்னர் சிந்தனை பலப்படும்போது அவை எக்ஸாகிரேசன் எனத்தெரிய வரும்.. இல்லை..இல்லை என்றும் எப்பொழுதும் உண்மைதானென்றால் அஃது இறைவனை சிறுமைப்படுத்துவ்தும், நாத்திகமும் ஆகும். இஃதொன்றும் தனிநபர் பார்வையில்லை.ஏன்? இறைவனுக்கு ஈடாக என்றால், இறைவனுக்குப்பக்கத்தில் இன்னொரு இறைவன் என்றலலவா ஆகும்? ஆதியும் அந்தமும் இல்லா இறைவன் எப்படி ஆதியும் அந்தமும் உடைய மனிதனுக்கு இணை. இதுதானே பொதுப்பார்வை? உங்களுக்கும் எனக்கும் இங்கு வேறுபாடு இருக்குமா? இருந்தால்தானே தனிநபர் பார்வை?

        ஒரு ஆளை இறைவனாக ஒரு கூட்டம்தான் பார்க்கிறது. உலகத்தில் உள்ள மற்றவர்கள் அவனைச் சிறந்த மனிதன் மனிதர்களுள் மாணிக்கம் எனப்போற்றுமே தவிர இறைவனுக்கு ஈடாக இன்னொரு இறைவனாகப்பார்க்காது.

        குறளைப்பற்றி ஷாலி சொன்னது சரியாகத்தான் வரும்.

        வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் என்றால் சாமியார்களா? மேஜிக் காட்டி கூட்டம் சேர்க்கும் சாமியார்களா? அசாதராண செயல்களைச்செய்பவரும் அதிவீர்ப்ராக்கிரமசாலிகளுமா?

        அப்படியென்றால், எளிய மனிதர்கள் நிலையென்ன? அவர்களையெல்லாம் வையத்துள் வாழவேயில்லை. வெறும் பூமிக்குச் சுமைகளென்றாரா வள்ளுவர்? Please don’t insult Valluvar. Prof Venkatachalam is watching !!

        எவரும் அவ்வாழ்க்கையை வாழலாம். அப்படி வாழ்பவர்கள் இறைவனுக்குள் — “குள்” – வைக்கப்படும் என்றுதான் சொன்னாரே தவிர இறைவனுக்கு ஈடாக வைக்கப்பட்டு இன்னொரு இறைவனாக பார்க்கப்படும் என்று சொல்லவில்லை.

        எல்லா மதங்களும் அல்மோஸ்ட் என்ன சொல்கின்றன? நம்மில் நல்லோர் மரணத்துக்குப்பின் இறைவனடி சேர்வார்கள் என்றுதானே? அதைத்தான் சொல்கிறார் தி கிரேட் வள்ளுவர்.

        தனிநபர் பார்வை என்பது இங்கேதான்: அதாவது மேஜிக் காட்டும் சாமியார் இறைவனடி சேர்வார் ‘காலையில் எழுந்தவுடன் பார்த்தேன். அடடா…அந்த சின்னச்சொப்பு அப்படியே இருந்தது!’ என்று மேஜிக்கைக்கண்டு வியப்ப்போர் (apologies to the writer) அச்சாமியார் இறைவனடி சேர்வார் என்பர். மற்றவர்கள் – அந்த மேஜிக்கை வைத்து பட்டினிச்சாவுகளை அவர் தடுத்திருந்தால் சேர்வார் என்பர்.

        இப்போது தெரிகிறதா தனிநபர் பார்வை எங்கே மாறுபடுகிறது என்று?

        • Avatar பொன்.முத்துக்குமார்

          மிக நீண்ட விவாதங்களுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

          ‘தெய்வத்துள்’ என்று சொல்லும்போது, பிரிவினையின்றி ‘தெய்வத்தோடு கலத்தல்’ என்றும் ஒரு பொருள் கொள்ளலாம். எப்படி நல்லதொரு கவிதைக்கு பல்கோண வாசிப்புகள் இருக்குமோ, அது போல வள்ளுவர் வாக்குக்கும் அவரவர் வாசிப்புக்கு தகுந்த வகையில் வேறு கோணங்களில் விரித்துப்பொருள் கொள்ள இயலும். எனவே, ‘வள்ளுவர் இப்படி சொன்னாரா அப்படி சொன்னாரா’ என்ற வாத கதிகளுக்குள் நான் புக விரும்பவில்லை.

          இந்து மரபு சொல்லும் முக்தி என்பதற்கு இதுவும் ஒரு விளக்கம் ஆகும். பிரம்மமே உண்மை என்றும், எல்லா உயிர்களும் பிரம்மத்தின் பல்வேறு தோற்றங்களே என்றும் அத்வைதம் இதையே இன்னொரு விதமாக சொல்கிறது.

          இந்த உருவெளி தோற்றத்தை விளக்கவே கயிற்றரவு என்ற புகழ்பெற்ற உவமை சொல்லப்பட்டது. இன்னமும் விளக்கமாக சொல்ல ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ என்றும் ‘நாயை கண்டால் கல்லைக் காணோம், கல்லைக்கண்டால் நாயைக் காணோம்’ என்றெல்லாம் பிரயோகங்கள் கையாளப்பட்டுள்ளன.

          இதன்படி என்னால் அனைத்தும் இறை உருவே என்பதை புரிந்து கொள்ளப்படுகிறது. அதை என்னால் முழுமையாக உணர்ந்துகொண்டால் – நான் உப்பு பொம்மை மட்டுமே, கடலை அடையும்போது கரைந்து கடலோடு கலந்துவிடுவேன் என்று உணர்வது எனது இருப்புத்துயரை அகற்றிவிடும். அப்படி கலந்து போகும்போது நானும் விடுதலை அடைந்துவிடுகிறேன்.

          நான் படித்ததன் மூலம், கேட்டதன் மூலம் அறிந்துகொண்ட, எனக்கு ஒப்புதலாக இருக்கும் எனது இந்த பார்வைக்கு மாற்றுப்பார்வை உண்டு என்பதை புரிந்துகொள்கிறேன்.

          நான் கேட்டுக்கொள்வது என்னவெனில், நான் எப்படி எனது கொள்கைக்கு / நம்பிக்கைக்கு / சித்தாந்தத்துக்கு மாற்றுப்பார்வை உண்டு என்று புரிந்து கொள்கிறேனோ அப்படியே நீங்களும் புரிந்துகொள்ளுங்கள், உங்களது நம்பிக்கையே ‘அனைவருக்குமான இறுதி உண்மை’ என்று முன்வைக்காதீர்கள் என்பது மட்டுமே.

          • Avatar IIM Ganapathi Raman

            அப்படி யாரும் வைக்கவில்லை. இங்கு செய்யப்படுவது கருத்து பரிமாற்றங்களே தவிர, கருத்துத் திணிப்புக்க்கள் அல்ல.

            ஒரு கருத்தை ஒருவர் வைக்கும்போது அதில் ஒவ்வாமை இருக்கும்போது சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வாறு சுட்டல் கருத்துத்திணிப்பு ஆகாது.

            அதே நேரத்தில் கருத்து சுதந்திரம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை எனறு சொல்வது நச்சுக்கருத்துக்களைப்புகுத்தி மனிதர்களை தவறான வழியில் கொண்டுசென்று ஒரு சிலர் தின்று கொழுக்க, பலர் மாய வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

            How ill Pon Muthukumar take it if i create a cult and preach a theology of mass sucide as the only way to reach the feet of God? Or keeping women enslaved and using them at will, is my religion. And my followers commit suicide en masse. (In japan and Guyana sects arose like that)? Are not Al Quida killing people of other religions on the thelogy such killing is ordained by their God?

  19. //இது பிற மதத்தில் இருக்கும் தூதர்களுக்கும் பொருந்துமா? சொல்வீர்களா?//

    கண்டிப்பாக! ஏசுவாகட்டும், முகமது நபியாகட்டும், ஆப்ரஹாமாகட்டும், ராமனாகட்டும் அனைவரும் மல ஜலத்தை சுமந்து மணம் செய்து குழந்தை குட்டிகளை பெற்றுக் கொண்டவர்களே! இவர்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? அல்லது கடவுளின் அவதார மாக மாற முடியும்?

    • Avatar பொன்.முத்துக்குமார்

      // ஏசுவாகட்டும், முகமது நபியாகட்டும், ஆப்ரஹாமாகட்டும், ராமனாகட்டும் அனைவரும் மல ஜலத்தை சுமந்து மணம் செய்து குழந்தை குட்டிகளை பெற்றுக் கொண்டவர்களே //

      மல ஜலம் என்பது மனிதன் என்ற நிலையின் இயல்பு, இழிவு அல்ல.

      // இவர்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? அல்லது கடவுளின் அவதார மாக மாற முடியும்? //

      முடியும். ‘நீ மட்டும் நல்லா இரு, போ’ என்று இறைவனை கோபித்துக்கொண்டவர்களுக்கு, தனது காதலுக்காக இறைவனை தூது போகச்சொல்லி அதையும் இறையனார் ஏற்று தூது போகப்பட்டவர்களுக்கு, ‘வா என் பின்னே’, என்று கட்டளையிட்டு இறையை தன் பின்னே தொடரச்சொன்னவர்களுக்கு, இந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு முடியும்.

      மனிதன் இறைவனுக்கு இணை வைக்கப்படக்கூடாது என்ற பார்வை உள்ளவர்களுக்கு முடியாது.

      அவ்வளவே.

      • Avatar IIM Ganapathi Raman

        //மல ஜலம் என்பது மனிதன் என்ற நிலையின் இயல்பு, இழிவு அல்ல.//

        இந்த உயர்சிந்தனை அன்றிருந்திருந்தால் இந்துமதம் தீண்டத்தகாதவர்கள் என்று பிரிவினையை உண்டாக்கியிருக்காது. காலங்கடந்த ஞானோதயம்.

        சுவன்ப்பிரியன் சொன்ன கான்டெக்ஸ் திரிக்கப்பட்டுவிட்டதாகவே நினைக்கின்றேன். அவர் மல ஜலம் என்று சொன்னது ஒரு சிம்பாலிக்கலாகத்தான்.

        அதாவது மனிதனின் வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. தோன்றி மறையும் மனிதன் இருக்கின்ற காலஙகளில் உணர்ச்சிகள் வழியாக வாழ்கின்றான். அவ்வுணர்ச்சிகள் எல்லாமே அவனை ஆன்மிகத்தின் உயர் நிலைக்குக் கொண்டு செல்லா. அதே நேரத்தில் அவ்வுணர்ச்சிகளில்லாமல் அவனுக்கு வாழ்க்கையில்லை. ஐந்தடக்கல் என்று ஞானிகள் அறிவுருத்தினாலும் நடக்காது.

        இப்படிப்பட்ட இழுபறி நிலையில் வாழும் மனிதன் எபபடி இறைவனுக்கு சமமாக ஆக முடியும் என்பதுதான் அவர் சொல்வது. It is impossible for a man to be NOT BAD.

        ஏதோ ஒரு பரமஞானியை எடுத்துக்கூட பேசலாம். அதை நீங்கள்தான் சொல்வீர்களே தவிர அவர் சொல்லமாட்டார். இந்து ஞானிகள் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பெருங்கடல் என்றும் அதை நீந்திக்கடந்த பிற்வாமை பெறுதலே இறைவன்டை செல்லும் வழியென்றும் சொன்னர். பிறவாமை வேண்டும் என்றுதான் வேண்டுகிறார்கள்.

        இதிலிருந்து என்ன தெரிகிறது ? மனித வாழ்க்கை புனிதமன்று. இடரே.

        எனவே இவ்வாழ்க்கையை வாழ்பவனும் இறைவனும் ஒன்றல்ல என்பது சுவனப்பிரியனின் சிம்பாலிக் சொற்களிலுள்ள இறைச்சி. Ironically he explicates Hindu thoughts tersely :-)

        • Avatar பொன்.முத்துக்குமார்

          // இந்த உயர்சிந்தனை அன்றிருந்திருந்தால் இந்துமதம் தீண்டத்தகாதவர்கள் என்று பிரிவினையை உண்டாக்கியிருக்காது. காலங்கடந்த ஞானோதயம். //

          ஐயன்மீர், இப்படிப்பட்ட சிந்தனை அப்போதும் இருந்திருக்கிறது. இருந்ததால்தான் –

          அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
          ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்
          கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
          அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

          நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்
          வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு
          ஆள் என்று உள்கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே

          என்றெல்லாம் பாடியிருக்கிறார்கள். நீங்கள் சொன்ன தீண்டாமை போகிற போக்கில் ஒரு வரியில் உரையாடிச்செல்லும் விஷயமில்லை. அதற்கான காரணிகள் பலப்பல. பழங்குடி சமூகம் நிலா உடைமை சமூகமாய் அடுத்த படி நோக்கி மேலேறும்போது ஏதோ ஒரு வகையில் தீண்டாமை என்பது தவிர்க்கவியலா வகையில் இடம்பெறக்கூடியதே. இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.

          • Avatar IIM Ganapathi Raman

            நான் சொன்னது வரலாறு. நீங்கள் சொல்வது சித்தாந்தம். வாழ்க்கையில் அன்றாடம் நடப்பது வரலாறு. நூலகளின் எழுதப்பட்டு கிரகிக்கப்படுவது சிந்தாந்தம்.

            சித்தாந்தம் அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டதாக எழுதிவிட்டீர்கள்! அப்படியென்றால் மதுரை மீனாட்சி கோயிலுக்குள் ஏன் தலித்துகள் போனால் புனிதம் கெட்டுவிடும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்களைத் தள்ளிவைத்தீர்கள்?

            நீங்கள் எழுதிய பாடலகளில் உள்ள உம்மைத்தொகைகள், தலித்துகளை தீண்டத்தகாதவர்கள் என்றுதான் பறை சாற்றுகின்றன.

            இதோ…

            //அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
            ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்புலையரேனும்..//

            தொழுநோயர்கள்; மாட்டுமாமிசம் உண்பவர்கள்.

            ஆனால் நீங்கள் பரிசுத்தமானவர்கள். கொஞ்சம் இறங்கி வாருங்கள் என உஙக்ளுக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல். இது.

            //நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும்//

            அவர்கள் சண்டாளர்கள்; அவர்களின்டம் நலமில்லை. அதாவது தீட்டு.

            மனசாட்சியொடு படிப்பவர்கள் வேதனைப்படுவார்கள். நம்மில் ஒரு மக்களை இறைப்புனிதர்கள் எனப்படுவோரே இப்படி இழித்துரைக்கின்றாரே? அட கடவுளே. உன் பெயரில் இந்த நாடகமா?

        • Avatar பொன்.முத்துக்குமார்

          // சுவன்ப்பிரியன் சொன்ன கான்டெக்ஸ் திரிக்கப்பட்டுவிட்டதாகவே நினைக்கின்றேன். அவர் மல ஜலம் என்று சொன்னது ஒரு சிம்பாலிக்கலாகத்தான். //

          நான் சொன்னதும் அதே சிம்பாலிக்காகத்தான். என்ன, அவர் கொடுத்த அதே உதாரணத்தையே பயன்படுத்தினேன், அவ்வளவே.

          நான் சொல்ல வந்தது என்னவெனில், குறைபாடுகளோடு பிறக்காத மனிதன், வளர வளர தன்னுள் சேரும் களைகளை / குறைகளை / அழுக்குகளை (உதாரணமாக மும்மலங்கள்) களைவதன் மூலமாக மேலேறலாம். உன்னதமாகலாம் (sublimation) பிரபஞ்ச மூலையில் மிகச்சிறு தூசென இருக்கும் ஒரு கிரகத்து உயிர்களின் பார்வையில் இல்லாமல், அந்த குறையுள்ள பார்வையை உதறி பிரபஞ்சத்தையே ஒன்றென பார்க்கும் முழுமைப்பார்வையை அடையலாம். என்னைப்பொறுத்தவரை, அது இறை நிலைக்கிணையே.

          என்ன, அதற்கென இருக்கும் பாதையில் பயணிக்க முயற்சி வேண்டும், அவ்வளவுதான்.

  20. Avatar ஷாலி

    திரு.பொன்.முத்துக்குமார் அவர்களே! தங்கள் கூறும் குறள் தரும் பொருளை நீங்கள் அறிவீர்களா?
    “இவ்வுலகத்தில் இல்லறத்தை ஒழுகி மிகச்சிறப்போடு வாழ்கின்றவன்,இந்த உலகத்திலேயே வானுலகத்துத் தெய்வத்திற்கு நிகராகப் போற்றப்படுவார்.

    அதாவது துறவறம் மேற்கொண்டவர் பெறும் மேம்பாடுகளைக்காட்டிலும்,இல்லறத்தை அதன் இயல்புகளோடு, சிறப்பொடு ஒழுகி வாழ்பவர் வான் உறைத் தெய்வம் போல் போற்றும்படி மதிக்கப்படுவார்.என்கிறார் வள்ளுவர்.

    Message –இதுதான் “முறையான இல்வாழ்வைச் சிறப்பாக மேற்கொண்டவர்,அனைவராலும் தெய்வம் போல் போற்றப்படுவர்.

    திரு.பொன்.முத்துக்குமார் அவர்களே! இந்தக்குறள் உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டது. மனைவி மக்களோடு சிறப்பான இல்வாழ்க்கை நடத்தினால், அதன் பெறுமதி காவி கட்டிய துறவறம் பூண்ட சாயிபாபாவை விட சிறப்பான அந்தஸ்து கிடைக்கும் என்பதே.இன்னும் எளிமையாக புரிந்து கொள்ள ,இந்தப் பாடலைக் கேளுங்கள்.

    “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,-வாரி வாரி
    வழங்கும்போது வள்ளலாகலாம்
    வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்,
    உருகி ஓடும் மெழுகைப்போல ஒளியைக்கூட்டலாம்.
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!…..”

    சிறந்த பண்புள்ள மனிதன் தெய்வத்தின் பண்பை பெறுகிறான்.ஆனால் அவன் தெய்வமல்ல மனிதனில் புனிதன் மகாத்மா.எதுவும் தேவைப்படாதவன் இறைவன்!.தேவை உள்ளவைகள் படைப்பினங்கள். இரண்டும் சமமாக முடியாது.

    • Avatar பொன்.முத்துக்குமார்

      // திரு.பொன்.முத்துக்குமார் அவர்களே! தங்கள் கூறும் குறள் தரும் பொருளை நீங்கள் அறிவீர்களா? //

      அறிவேன். அறியாமலா மேற்கோள் காட்டினேன் ?

      ஷாலி, என்னுடைய பின்னூட்டம் உங்களுக்கு சொன்னதில்லை. எனவே சொன்னப்பட்ட தளத்துக்கு வெளியே பொருள் கொண்டு மயங்காதீர்கள்.

      // சிறந்த பண்புள்ள மனிதன் தெய்வத்தின் பண்பை பெறுகிறான்.ஆனால் அவன் தெய்வமல்ல மனிதனில் புனிதன் மகாத்மா.எதுவும் தேவைப்படாதவன் இறைவன்!.தேவை உள்ளவைகள் படைப்பினங்கள். இரண்டும் சமமாக முடியாது. //

      இது உங்களது பார்வை மட்டுமே. அனைவருக்கும் பொதுவாக இருக்காது, இருக்கவும் முடியாது. ஒவ்வொருவரது சிந்தனையும் சித்தாந்தமும் வேறு வேறு.

      மனிதன் இறைவனுக்கு இணை வைக்கப்பட முடியாது, கூடாது என்பது ஒரு பார்வை. மனிதனும் இறைவனுக்கு இணை வைக்கப்படலாம், இறைவனாகலாம் என்பது இன்னொரு பார்வை.

      • Avatar IIM Ganapathi Raman

        இந்து மதத்திற்குள்ளேயே கூட ஒரே பார்வை – அதாவது மனிதன் தெயமாகலாம் – என்பது இல்லை.

        • Avatar பொன்.முத்துக்குமார்

          ஒப்புக்கொள்கிறேன். நானும் அப்படி சொல்லவில்லை. இந்துமரபு என்பது ஆபிரகாமிய மதங்கள் போல ஒற்றைபடை ஆனதல்ல. அதில் பல்வேறு பார்வைகள், போக்குகள் உண்டு. ஒன்றுக்கொன்று முரணானவை கூட (சார்வாகம் போன்று)

  21. இயேசு திருமணம் செய்து பிள்ளைக் குட்டிகள் பெற்று வாழ்ந்தார் என்று யார் சொன்னது? புத்தர், சிவன், இராமர், கிருஷ்ணர், நபிகள் நாயகம் போன்றவர்களுக்கும் ஏசுவுக்கும் உள்ள ஒரே வேற்றுமை இயேசு திருமணம் ஆகாதவர் என்பதுதான்.இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது அபத்தம் அதாவது NONSENSE ! ….டாக்டர் ஜி, ஜான்சன்.

    • Avatar புனைப்பெயரில்

      நான்சென்ஸ் என்று கத்துவதால் தீராது உண்மை. இயேசுவை உங்களுக்கு அறிமுகப்படுத்திய வெள்ளைக்காரனே இயேசுவின் மனைவி குழந்தைகள் பற்றி அறிவார்ந்த முறையில் ஆராய்ச்சியுடன் அலசுகிறான். அதுவும் ஐசக் நியூட்டன் போன்றோர் இயேசுவின் பிள்ளைப் பாரம்பரியம் காக்கும் இனம். டாவின்சி கோட் படம் எடுத்தவர் நாத்திகர் அல்ல, ஒரு கிறிஸ்துவரே.

      • Avatar IIM Ganapathi Raman

        சினிமாவோ புதினமோ எவரும் எழுதலாம். வெள்ளைக்காரனோ கறுப்பரோ? ஏன் நீங்களேன் எழுதக்கூடாது?

        கிருத்துவர்கள் நம்பினாரா? என்பதைச்சொல்லவும்.

        டான் பிரானின் தலையைக்கொண்டுவா என்றார்களா? அவர் நூலை பகிஷ்காரம் பண்ணச்சொன்னார்களா? இல்லை அவர்கள் குருமார்கள் அவர்களைத்தூண்டிவிட்டனரா?

        திருஞான சம்பந்தரைப்பற்றி ஒருவர் தப்பாக எழுதப்போக ஒரு ஊர்வலமே நடாத்தி அவரை மிரட்டினார்களே தெரியுமா?

        கிருத்துவர்களிடமிருந்து தம் மதத்தைத் தூடனை செய்வோரை எப்படி நடத்தவேண்டுமென கற்றுக்கொள்ளுங்கள்.

        ஆனால் ஒன்றுமட்டும் தெரிகிறது. ஒரு சிலருக்கு ஒரு இன்பச்சொறியல் கிடைக்கிறது.

  22. Avatar புனைப்பெயரில்

    எங்கோ தூரத்தில் என் கண்ணுக்கும் , காலுக்கும், எண்ணத்திற்கும் எட்டுப்படாத எனக்கு “அரசன்” போல் நான் பயமுற்று மண்டியிடும் நிலையில் இருப்பவன் எப்படி என்னைப் படைத்த இறைவனாக இருக்க முடியும். என்னில் தன்னை இறுத்தி, தன்னில் என்னை பிணைக்கும் சக்தி தானே என்னை படைத்திருக்க முடியும். எங்கும் நிறையாமல் , எங்கோ ஒரு இடத்தில் மட்டும் இருப்பது மன்னராக வேண்டுமானால் இருக்கலாம், அதனால் அந்த மண்ணில் மன்னராட்சி இன்றும் ஏழைகள் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் கூத்தாட்ட வாழ்வு கொண்டு. ஆனால், எங்கு நிறைந்திருப்பான் பரம்பொருள் என்று நினைப்பவர்கள் எதுவும் எனக்கில்லை என்று தானே துறவு நிலை. உலகை படைத்தது இறைவன் என்றால் மலமும் ஜலமும் அவன் படைப்பின் பகுதி தானே.. இதில் என்ன வெறுப்பு.? மலம் கழிவென்றால் அது உரமாகி செடியாகி காயாகி கனியாகி பின்னர் உணவாக தானெ பின்னரும் உள் செல்கிறது. ஆன்மாக்கள் சுமக்கும் வாகனமே உடல். உடலை தாண்டி நிற்பதே நம் தத்துவம்.

    • Avatar IIM Ganapathi Raman

      According to you, God is the cause of all. Then, how will you a/c for the creation of a young man who yesterday clubbed his father and mother just because they kept the relationship secretly alive with their first son who is hated by the killer son?

      Hasn’t God created Evil too? Can you dare to call such Evil holy and respectable?

  23. //இயேசு திருமணம் செய்து பிள்ளைக் குட்டிகள் பெற்று வாழ்ந்தார் என்று யார் சொன்னது?//

    மகதலேனா மரியாள் ஏசுவின் மனைவி என்று சொல்லப்டுவதை தாங்கள் அறியவில்லையா? ‘டாவின்சி கோட்’ சர்ச்சையே இதில் தானே வந்தது. ஏசுவுக்கு பல மனைவிகள் இருந்ததாக பல கிறித்தவ நூலாசிரியர்கள் நூல்களை எழுதிச் சென்றுள்ளனர். ஆதாரங்களை பிறகு சமர்ப்பிக்கிறேன்.

    • Avatar IIM Ganapathi Raman

      விவாதம் வேறுவழியில் செல்கிறது.

      ஒரு மதம் இருக்கிறது. அதன் நம்பிக்கையாளர்களும் பக்த‌ கோடிகளும் இருக்கின்றார்கள். இவர்கள் எதை நம்புகிறார்களோ அதுதான் மதம். அதறகப்பால் உள்ள சர்ச்சைகளும் ஆராய்ச்சிகளும் கருத்துக்களும் அவர்களுக்கில்லை. Such controversies, debates and opinions are not religion. But religious controversies with which the followers are not concerned. Dr Johnson speaks here as a follower only.

      இங்கு சித்தாந்த்தத்தைப்பற்றித்தான் பேசுகிறோமோயொழிய, மேற்குறிப்பிட்ட சர்ச்சைகளைப்பற்றி பேசவில்லை.

      அதன்படி டாவின்சி கோடும் இன்னபிற ஆராய்ச்சிகருத்துகளும் விவாதத்தில் இல்லை.

      இருப்பதைப்பற்றிப்பேசினால் மருத்துவர் சொன்னதே சரி: இயேசுநாதர் மணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை.

      சுவனப்பிரியன் சொன்னால், அவர் மதத்திலும் அவர்கள் சித்தாந்ததிற்குமப்பால் ஆராய்ச்சிகள் உண்டு.

  24. Da Vinci Code is fiction. It is not history.The Bible is authentic and there is no mention of Jesus having wives. Writers can write according to their whims and fancies. The Chrristian world has never approved any of those writings.We never question what is written in the Ramayana, Maha Bharatham and the Holy Koran as they are the holy books of the Hindus and Muslims. Arguments are only based on what is written in them.

  25. Arignar Anna wrote KAMBAARASAM and NEETHITHEVAN MAYAKKAM. his views . They are his views. Are the Hindu believers willing to acceopt them as facts? Periyaar said and wrote thay
    there is no God. How many believers in God renounced God and religion?
    In this section we are discussing on the miracles done by Sri Sathya Sai Baba. It is better to discuss on it rather than sidetracting on other religions. We are not discussing on the Hindu religion. We should only concentrate our arguments on the miracles done by Sri Sathya Sai Baba.

  26. Avatar ஷாலி

    “மனிதனும் இறைவனாகலாம்” எனும் மாற்றுப்பார்வை கொண்ட திரு.பொன்.முத்துக்குமாரின் கருத்தை நான் மதிக்கின்றேன்.”எல்லா மனிதர்களையும் ஒரே சிந்தனையில் இறைவன் படைக்கவில்லை.”ஒவ்வொருவருக்கும் அவர் நோக்கும் திசை உண்டு “ என்றே வேதங்கள் கூறுகின்றன.
    எந்த மனிதன் இறைவனாகிறான்?..மனித குலத்தை வாழவைப்பதற்க்காக தங்கள் வாழ்க்கையை,தியாகம் செய்கிறவர்கள்,ஆன்மீகத்தில்,அரசியலில்,அறிவியலில்,சமூதாயப்பணிகளில் என எல்லாத்துறைகளிளிலும் இருக்கிறார்கள். இம்மக்களின் உழைப்பால்,சிந்தனையால்,தியாகத்தால் பலன் பெற்றவர்களே அவர்களை தெய்வமாக வணங்குகிறார்கள்.
    இந் ஞானப்பெரியோர்கள் தங்களை தெய்வமாக வணக்கும்படி சொன்னதில்லை. அப்படி சொல்பவர்கள் மெய்ஞ்ஞானி அல்ல.பொய்ஞானி.
    பவுத்தத்தை உருவாக்கிய மனித புத்தர் தான் ஒரு கடவுள் என்று சொன்னதில்லை. இன்று அம்மக்களால் உருவக் கடவுளாக்கப்பட்டார். நான் கடவுளின் தூதன் என்னை பின் பற்றுவதன் மூலமே கர்த்தரை அடையலாம்.என்னை பின் பற்றாதவன் கடவுளை அடைய முடியாது.ஆகவே என்னைக் கண்டவன் பிதாவைக்கண்டான்.நானே கடவுள் வழியை காட்டும் ஜீவனுள்ள சத்தியம்.என்ற இயேசு கிருஸ்து அம்மக்களால் இன்று கடவுளாக்கப்பட்டார்.
    நம் கிராமங்களில் காணப்படும் ஒன்டிக்கருப்பு,சுடலை மாடன்,மதுரை வீரன் போன்ற தெய்வங்கள் கூட,அந்தந்த மக்களைக் காப்பாற்ற ஆதிக்கச் சக்திகளை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த பெருமக்களே, அக்கிராம மக்களால் தெய்வங்களா மாற்றப்பட்டு வணக்கப்படுகிறாகள்.
    கடவுள் தன்மையின் சிறப்பே படைத்தல்தான்.மேலே சொன்ன புத்தர்,இயேசு,கிராம தெய்வங்கள் எதைப் படைத்திருக்கிறார்கள்? சூரியன்,சந்திரன்,கோள்கள்,நட்சத்திரம் என்று எவையேனும் படைத்திருக்கிறார்களா? குறைந்த பட்சம் ஒரு அற்ப கொசுவையாவது படைத்துள்ளார்களா? இல்லை.பூமியை படைத்தது சாமி!ஆனால் பூமியிலுள்ள மக்கள் சாமியை படைக் கிறார்கள். “புது ராகம் படைத்ததாலே…நானும் இறைவனே!” என்ற வைர முத்து வழியில் படைப்பவர்கள் தெய்வமில்லை.மக்களிடத்தில் பல பார்வை உண்டு. அப்பல பார்வையில் மெய்ப்பொருள் காண்பதறிவு.என்கிறார்,வள்ளுவர்.

    • Avatar பொன்.முத்துக்குமார்

      // கடவுள் தன்மையின் சிறப்பே படைத்தல்தான். மேலே சொன்ன புத்தர்,இயேசு,கிராம தெய்வங்கள் எதைப் படைத்திருக்கிறார்கள்? //

      அப்படி எதுவும் pre-requisites இல்லை, இந்து ஞானவெளியை பொறுத்தவரை.

  27. Avatar க்ருஷ்ணகுமார்

    ஜெனாப் சுவனப்ரியன்,

    நலமா? காலம் கடந்த ஈத் முபாரக்.

    ம். ஈசா-அல்-ஏ-சலாம் அவர்களை நீங்கள் குரான்-ஏ-கரீம் வழியாகத் தான் ஏற்பீர்கள் எனத் தெரியும். ஈசா-அல்-ஏ-சலாமுக்கு குரான்-ஏ-கரீம் பத்னி அல்லது பத்னிகளைச் சொல்கிறதா என்று மட்டிலும் சொல்லுங்கள்.

    ஏசுபிரான் என்ற தேவகுமாரனை க்றைஸ்தவர்கள் நம்புவதை நான் மதிக்கிறேன். அந்த தேவகுமாரன் விவாஹமாகாது மரித்தார் என்று அவர்கள் நம்புவதையும் மதிக்கிறேன்.

    ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததில்லை என்ற விஷயம் திண்ணை தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது. க்ஷமிக்கவும். ஏசு என்ற நபரே சரித்ரத்தில் இல்லாதிருந்த போது இல்லாத ஒரு நபருக்கு மக்தலீனா மரியாள் என்று ஒரு பத்னி இருந்தாள் என விவாதம் செய்வது கொம்புள்ள முயல் ஆகாசத்தில் பறந்தது என்ற விக்ஞான உண்மையைச் சொல்வது போல் இருக்கிறது.

  28. Avatar க்ருஷ்ணகுமார்

    சஹோதரி ஸ்வேதா, சர்வ ஸ்ரீமான் கள் ராமா, பரமசிவம் மற்றும் இந்தியன் போன்றோர் தமிழில் தங்கள் உத்தரங்களைப் பகிர இயலாதவர்கள் என்று அறிகிறேன். ஆயினும் தமிழ் உத்தரங்களை வாசித்து ஆங்க்ல பாஷையில் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதில் ஆர்வமுள்ளவர்கள். சொற்பமான இது போன்ற ஓரிரு அன்பர்கள் தங்கள் உத்தரங்களை ஆங்க்ல பாஷையில் பகிர்வதை அனுமதிப்பதை தள நிர்வாகிகள் அவச்யம் பரிசீலிக்க வேணுமாய் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  29. Avatar க்ருஷ்ணகுமார்

    அன்பின் டாக்டர் ஜான்சன்,

    \ இயேசு திருமணம் ஆகாதவர் என்பதுதான்.இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது அபத்தம் அதாவது NONSENSE ! ….டாக்டர் ஜி, ஜான்சன்.\

    ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுக்கு இது விஷயமாய் உத்தரமளித்துள்ளேன். அந்தந்த விஷயங்களை அந்தந்த தலைப்பில் விவாதிப்பது உசிதமானது.

    சஹோதரி ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் புட்டபர்த்தி சாயி பாபா அவர்களைப் பற்றி சமர்ப்பித்துள்ள இந்த வ்யாசத்திற்கு அது சம்பந்தமாக நாம் விவாதம் செய்வதே………… பரிச்ரமப்பட்டு இந்த வ்யாசத்தை சமர்ப்பித்த அவருக்கு நாம் செய்யும் சம்மானமாகும்.

    • Avatar IIM Ganapathi Raman

      ஜோதிர்லதா கிரிஜா எழுதியது நினைவலைகள். ஒரு விவாதத்தை அவர் வைக்கவில்லை.

      என்ன பின்னூட்டங்கள் எப்படி போக வேண்டுமெனவும் அவர் நினைக்கவில்லை. விண்ணப்பிக்கவுமில்லை.

      படைப்பது அவர் செயல். விவாதிப்பது நம் செயல்.

    • Avatar IIM Ganapathi Raman

      அப்படியென்றால் சொல்லுங்கள்:

      புட்டபர்த்தி சாயிபாபா கடவுளா? கடவுளின் அவதாரமா? இந்துமதமா? எந்த மதம் அவர்? அவரை நினைத்தேன் அப்படி நடந்தது என எழுத்தாளர் சொல்வதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? ஷாலி சாத்தானுக்கும் அப்படி அமானுச்ய சக்தியுண்டு என்று மதங்கள் சொல்லியிருக்கின்றன என்று சொல்கிறார். உங்கள் கருத்தென்ன?

      அனைத்துக்கேள்விகளுக்கும் உத்தரங்கள் தருவது ஜோதிலதா கிரிஜா எழுதியதற்குப் பொருத்தமாக வருமென நினைக்கிறேன்.

      சொல்லலாம்.

  30. டா வின்சி கோட்:

    இந்த பாறையின் மேல் என் வீட்டை கட்டுவேன் என்று இயேசு கிறிஸ்து பேதுருவை குறித்து அல்ல மகதலேனா மரியாளை குறித்தே சொன்னார்: (p. 248) இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையின் எதிர்காலம் மகதலேனா மரியாளின் கைகளில் தான் இருக்கின்றது என்று எண்ணினார்.(p. 248)

    கி.பி 1099ல் பிரான்ஸ் அரசன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட ஓர் இரகசிய சங்கமான “Priory of Sion”. அங்கே இயேசுவின் வம்சம் பற்றிய தகவல்களையும், மகதலேனாவைப்பற்றிய தகவல்களையும் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டது.

    http://onlinepj.com/design/031129_davinciCode_hd.jpg

    இவர் மகதலேனா மரியாள்எனப்படுகிறார். இயேசுவுன் தாயார் பெயரும் மரியாள். இந்தப் பெண்ணின் பெயரும்மரியாள். அதாவது மகதலேனா மரியாள். இயேசுவைக் கல்லறையில் வைத்தவுடன் ஈஸ்டர்தினத்தில் கல்லறை வந்தவர்களில் இவரும் ஒருவராவார்.

    ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்த இயேசு இளம் பெண்ணுடன் இரவு விருந்து உண்ணும் இந்த ஓவியத்தை இத்தனை ஆண்டுகளாக மறுக்காமல் கிறித்தவ் உலகம் அங்கீகரித்து வந்துள்ளது.

    அந்த ஓவியம் தான் கதையின் கரு.அதாவது இயேசுவுக்கு அருகில் இருப்பவர் அவரது மனைவி மகதலேனா மரியாள் தான் என்றுஇந்த சினிமா சொல்கிறது. அன்னிய இளம்பெண்ணுடன் இரவு விருந்து சாப்பிடுவதை விட மனைவியுடன் இரவு விருந்து சாப்பிடுவது இயேசுவுக்கு கண்ணியம் அளிக்கக் கூடியதுதாம். பைபிளில் மகதலேனா மர்யாள் பல இடங்களில் முக்கியத்துவத்துடன் கூறப்படுகிறார்.

  31. திரு க்ருஷணகுமார்!

    நலமே! நீங்கள் நலமா? வாழ்த்துக்கு நன்றி!

    //ஏசு என்ற நபர் சரித்ரத்தில் இருந்ததில்லை என்ற விஷயம் திண்ணை தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளது.//

    ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் ஏசு வாழ்ந்து மரித்ததை ஐயம் திரிபுற நம்புகிறேன். அவருக்கு வேதமும் அருளப்பட்டது. அவரும் ஏக இறைவனையே உபதேசித்தார். அதையும் பைபிளைக் கொண்டே நிரூபிக்க முடியும்.

    “அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் “இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்” என்றார்.” – (யாத்திராகமம் 4:22,23)

    “இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.” – (எரேமியா 31:9)

    இஸ்ரவேலை இறைவனின குமாரர் எனக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார். இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? பைபிளில் கூறப்படுவதை அவர்கள் நிராகரிக்கலாமா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

  32. Avatar Indian

    There never was a Jesus Christ, not HISTORICALLY ANYHOW. Mythology Jesus? A big YES. Citing example from Bible for the existence of JC is plain ridiculous. Christianity is based on ” Mithraism”. Most of the life and miracles of JC are based on Lord Mithra, the Persian God and the Church had copy pasted them onto Christianity.

  33. “பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”

    “என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”

    “என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”

    மேலே நாம் படித்த வார்த்தைகள் அனைத்தும் அன்னை தெரஸா உதிர்த்த முத்துக்கள்.

    மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

    http://suvanappiriyan.blogspot.com/2009_02_01_archive.html

    • Avatar IIM Ganapathi Raman

      நம்பிக்கை சில சமயங்களில் இடர்வது இறைப்புனிதர்களிடம் காணப்படுவதுதான். இதற்கு ஆங்கிலத்தில் பேக் ஸலடிங்க் என்பார்கள். இஃது எல்லாமதங்களிலும் உண்டு. It doesn’t diminish their saintliness.

      கத்தோலிக்க மதத்தில் இறைப்புனிதர் எனபது கொடுக்கப்படும் பட்டமுமாக இருப்பதால், அதற்கென ஒரு அளவுகோல வைத்திருக்கிறார்கள். மற்றமதங்களில் மக்களாகவே கொடுப்பதால் இந்தப்பிரச்சினை கிடையாது.

      நாத்திகமும் இந்து மதத்தில் புனிதமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது எனபதை பொன் முத்துக்குமாரிடம் கேட்டறியலாம்.

      ஒரு மதத்தின் கண்ணாடியைப்போட்டுக்கொண்டு மற்ற மதங்களைப்பார்த்தால் பரிகாசம் பண்ணத்தோன்றும்.

  34. Avatar Indian

    Mother (!) Teresa was nothing more than a evangelizing missionary, bent on converting poor, vulnerable Hindus to Christianity. The book ” Missionary position” reveals all. Ramakrishna Mission in Calcutta had done more charity work for the poor than Mother Teresa ever did and also without the conversion agenda. There are umpteen number of home grown, Hindu charities doing fantastic work without any recognition from the International community. That is another topic, another time.

  35. டாக்டர் ஜான்ஸன்!
    //Da Vinci Code is fiction. It is not history.The Bible is authentic and there is no mention of Jesus having wives. Writers can write according to their whims and fancies. The Chrristian world has never approved any of those writings.We never question what is written in the Ramayana, Maha Bharatham and the Holy Koran as they are the holy books of the Hindus and Muslims. Arguments are only based on what is written in them.//

    ‘பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றி திரிந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்.’ – (மத்தேயு 4:23)

    ‘ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்’ – (மாற்கு 1:14)

    ‘காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்’ -(மாற்கு 1:15)

    உங்கள் வேத கருத்துப்படியே வருகிறேன். தேவன் என்பவரை விசுவாசிக்கச் சொல்லி ஏசுவே சொல்லும் போது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏசுவைக் கடவுளாக்கினீர்கள்?

    ஏசுவுக்கு வழங்கிய அந்த சுவிஷேம் என்ன ஆனது? அதை ஏன் மக்கள் மன்றத்திலிருந்து மறைக்கப்பட்டது?

  36. Avatar க்ருஷ்ணகுமார்

    \ Arignar Anna wrote KAMBAARASAM and NEETHITHEVAN MAYAKKAM. his views . They are his views. Are the Hindu believers willing to acceopt them as facts? Periyaar said and wrote thay there is no God. How many believers in God renounced God and religion? \

    அன்பர் ஜான்ஸன், நாஸ்திகம் என்பது ஹிந்துஸ்தானத்தில் மட்டும் இருந்த விஷயம் அல்ல. உலகளாவிய விஷயம். அவரவர் புரிதல் மற்றும் ருசிக்கேற்றவாறு ஆஸ்திக நாஸ்திக ஈடுபாடு இருக்கலாம். நாஸ்திகம் என்பது ஒரு கோட்பாடாக ஹிந்துஸ்தானத்தில் தழைத்துள்ளது.

    ஸ்ரீமான் ஈ.வெ.ரா அவர்களது நாஸ்திக கோட்பாடுகள் என்று பராபரியாக இணையத்தில் உலாவரும் சமாசாரங்களை வாசித்திருக்கிறேன். அதில் நாஸ்திகம் என்பதை விட அதீத த்வேஷம் மற்றும் நிர்லஜ்ஜையுடனான பக்ஷபாத ஹிந்து மத தூஷணைகள்…… போன்ற விஷயங்களே விகஸிதமாக இருப்பதாகப் பட்டது. ஸ்ரீ அண்ணாதுரை அவர்கள் என்ன…… ஹிந்து மதம் பற்றி தூஷணைகளாக….. மனம்போனபடி எண்ணிறந்த பேர்கள் எழுதியுள்ளதாக இணையம் வாயிலாக அறிகிறேனே.

    \ In this section we are discussing on the miracles done by Sri Sathya Sai Baba. It is better to discuss on it rather than sidetracting on other religions. We are not discussing on the Hindu religion. We should only concentrate our arguments on the miracles done by Sri Sathya Sai Baba. \

    மத நம்பிக்கைகள் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை நம்பிக்கை என்பதை அடிப்படையாகக் கொண்ட எந்த விஷயமும் அது எந்த மதமாகிலும் நான் மதிக்கும் விஷயமே. பூமியில் கால் பதியாது ஓயாது ஒழியாது ஓடிக்கொண்டிருக்கும் மனுஷ்யர்களுக்கு மனச்சாந்தி தருவதற்கு ஹேதுவானவை உலகளாவிய பற்பல மதங்கள் என்பது என் புரிதல்.

    ஆமாம் இந்த வ்யாசத்தில் ஸ்ரீ புட்டபர்த்தி சாயிபாபா அவர்கள் இருந்த வரை நடந்த ஜாலங்கள் (Miracles – இந்த ஆங்க்ல பதத்திற்கு வேறெதேனும் தமிழ்ப் பதமுண்டா தெரியவில்லை) என்பதுதான் ப்ராதான்யமான விஷயம். நிஷ்பக்ஷமாக விக்ஞானபூர்வமாக அதை கேழ்விக்கு உட்படுத்த வேண்டுமானால்……. ஜாலங்கள் என்ற விஷயத்தையே……. அது எந்த ஒரு நம்பிக்கை சார்ந்ததாயினும் கேழ்விக்கு உட்படுத்தல்…… என்பது மட்டிலும் நேர்மையான கண்யபூர்வமான ஒரு விவாதமாய் இருக்கவியலும்.

    சாயிபாபா அவர்கள் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஜாலங்கள் விக்ஞானபூர்வமானதா என்று யாரும் கேழ்வியெழுப்பினால் தேவகுமாரன் ஏசுபிரானது வாழ்வைச் சார்ந்தது என்று சொல்லப்படும் (அல்லது புனையப்பட்ட Gospels களில்) ஜாலங்கள் விக்ஞான பூர்வமானவையா என்பதனையும் விசாரம் செய்ய வேண்டிவரும்.

    • Avatar IIM Ganapathi Raman

      செய்திருக்கின்றார்கள். என்னவோ நீங்கள் பண்ணப்போவதாக பூச்சாண்டி காட்டுகிறீர்களே..

      பலர் ஏசுவின் வாழ்க்கையாராய்ந்து பார்த்திருக்கிறார்கள். அவர்களில் பலர் கிருத்துவர்களும் கூட. காழ்ப்புணர்ச்சியால் எழுதியவர் வெகு சிலரே. பிபிலிக்கல் ஸ்டடீஸ் என்ற ஒரு பட்டப்படிப்பு இருக்கிறது. எல்லாரும் படிக்கலாம். அதில் இந்த மிரக்கல்களையும் ஆராய்வார்கள். Some scholars have attributed the miracles to certain customs in the soceity. The multiplication of fishes and loaves also have root in certain customs; not actually miracles. None of the researchers have mocking tone like that we find in Krishnakumar who uses gentle words with double tongue.

      இங்கு கேள்வி என்னவென்றால், ஏசுவின் மகிமைச்செயல்களைக் கிருத்துவர்கள் ஏற்றுக்கொண்டு அதற்கென அவர்கள் பிடித்த பொருள்களையும் சூட்சுமங்களையும் கொடுத்துக்கொண்டு ஒரு மதத்தைச் சிருஸ்டி செய்துகொண்டு வாழ்கின்றார்கள்.

      அதாவது அம்மகிமைகளினால் ஒரு மதமே உருவானது.

      சாயிபாபாவின் மகிமையால் என்ன உருவானது? தமிழ்ப்பிராமணர்கள் தங்கள் தங்கள் இந்துச்சாமிகளைக் கடாசிவிட்டு புட்டபர்த்திக்குப் போய் தரிசந்த்துக்க்காத்துக்கிடந்ததைத் தவிர. அல்லது மணிபர்சுகளில் சின்னதா அவர் போட்டோவை வைத்துக்கொண்டதைத்தவிர. தமிழ்ப்பிராமணர்களுடன் மற்ற சாயிபாபா பகதர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

      எனக்குப்புரியவில்லை: இவர்கள் எப்படி தங்களை இந்துக்கள் என அழைத்துக்கொள்கிறார்கள்?

      சாயி பாபா வேணுமென்றால் அங்கே போ. பெருமாள் வேண்டுமென்றால் இங்கே வா. அங்கே போனால் நீ இந்து இல்லை. நாஸ்தி.

  37. Avatar க்ருஷ்ணகுமார்

    ஜெனாப் சுவனப்ரியன்,

    சரித்ர ஆவணங்களின் பாற்பாட்டு ஏசுபிரான் என்ற வ்யக்தி சரித்ரபூர்வமாக பூலோகத்தில் வாழ்ந்திறந்த மனுஷ்யரா என்பது ஆராய்ச்சியாளர்களால்………. அவர் வாழ்ந்ததாக பைபிள் க்ரந்தம் சொல்லும் ரெண்டாயிரத்து சொச்ச வருஷம் முந்தி இருந்ததாகச் சொல்லப்படும் யஹூதிய, பாகனிய க்ரந்தங்கள் வாயிலாக புறச்சான்றாக விசாரம் செய்யப்பட்டு…… அப்படி ஒரு நபர் இருந்ததாகச் சொல்ல எந்த முகாந்தரமும் இல்லை என்பது விவரணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பைபள் க்ரந்தத்தில் உள்ள Gospels – களில் காணப்படும் முரண்கள் என்ற விஷயமும் இதற்கு ருஜு சேர்க்கிறது. இவை ஆராய்ச்சி மற்றும் சரித்ரம் சார்ந்து.

    சரித்ரம் என்ற விஷயத்தை விலக்கி நம்பிக்கை என்பதன் அடிப்படையில் பைபள் க்ரந்தம் சொல்லும் எந்த விஷயத்தையும் அந்தந்த விஷயங்களை அவ்வப்படியே க்றைஸ்தவ சஹோதரர்கள் தங்கள் மனதிலேற்றி தங்கள் வாழ்வு உய்வுறுவது என்பது மதிப்பிற்குறிய விஷயமே.

    க்றைஸ்தவர்களது ஏசுபிரான் உங்களது குரான்-ஏ-கரீம் இல் ஈசா-அல்-ஏ-சலாம் என்று சொல்லப்படும் நபர் என்று அறிகிறேன்.
    பைபள் க்ரந்தத்தில் ஏசுபிரான் ஜீவித பர்யந்தம் விவாஹமாகாது இருந்ததாகவே சொல்லப்பட்டதாக அறிகிறேன். இவரைப்பற்றி குரான்-ஏ-கரீம் இல் சொல்லப்பட்ட விஷயங்களில் சம்பவங்களில் வித்யாசங்கள் இருக்கலாம். பின்னும் தங்களது க்ரந்தத்தில் ஈசா-அல்-ஏ-சலாம் விவாஹமானவராகச் சொல்லப்பட்டுள்ளதா எனப்பகிரலாமே.

    ஒரு விஷயத்தைச் சரித்ர பூர்வமானதாக அணுகி சரித்ர ஆவணங்கள் பாற்பட்டு விசாரம் செய்வது என்பது விக்ஞான பூர்வமானது. ச்லாக்யமானது.

    ஆனால் நம்பிக்கைகள் சார்ந்த விஷயங்களைப் புனைவுகள் மூலமாக…. அதுவும் அடுத்தவர் நம்பிக்கைகளை அவஹேளனம் செய்யுமுகமாக விசாரிப்பது…. நிந்தனீயமான விஷயம். டா வின்சி கோட் என்பதனை சரித்ர ஆதாரமாகத் தாங்கள் முன்வைக்க முயன்றால்…….அதற்கு முகாந்தரம் இருந்தால்………..அப்படிப்பட்ட விஷயங்களை…….முழுமையாக…… தாங்கள் உசிதமாக தனியொரு வ்யாசமாக சமர்ப்பிக்கலாம்.

    • Avatar murali

      Is your age 90 or above, its very difficult for us to understand your tamil

  38. Avatar paandiyan

    //இங்கு கேள்வி என்னவென்றால், ஏசுவின் மகிமைச்செயல்களைக் கிருத்துவர்கள் ஏற்றுக்கொண்டு அதற்கென அவர்கள் பிடித்த பொருள்களையும் சூட்சுமங்களையும் கொடுத்துக்கொண்டு ஒரு மதத்தைச் சிருஸ்டி செய்துகொண்டு வாழ்கின்றார்கள்.

    //

    ஸ்‌ஸ்.. ரொம்ப கன்ன கட்டுத

    • Avatar IIM Ganapathi Raman

      உண்மை சுடும்.

  39. Avatar paandiyan

    //சாயிபாபாவின் மகிமையால் என்ன உருவானது? தமிழ்ப்பிராமணர்கள் தங்கள் தங்கள் இந்துச்சாமிகளைக் கடாசிவிட்டு புட்டபர்த்திக்குப் போய் தரிசந்த்துக்க்காத்துக்கிடந்ததைத் தவிர. அல்லது மணிபர்சுகளில் சின்னதா அவர் போட்டோவை வைத்துக்கொண்டதைத்தவிர. தமிழ்ப்பிராமணர்களுடன் //
    ஸ்‌ஸ்.. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கன்ன கட்டுத

    • Avatar IIM Ganapathi Raman

      ஆம் உண்மை.

      இறைவன் வேறு. ஜாலவித்தைகள் செய்யும் சாமியார் வேறு என்பதுதான் என் தியரி.

      அதை ஒரு ஜாதியை வைத்துக்காட்டினேன். அதற்காக மற்றவர்களை விட்டேன் என்று பொருளில்லை. புட்டபர்த்தி, கலகி பகவான், சீரடி என்றெல்லாமே இறை நம்பிக்கையைப் போலியாக்குகின்றன என்பதுவே என் வாதம். இறை நம்பிக்கை முழுமையாக இருப்போர் புட்டபர்த்திக்குப் போக மாட்டார். போனால் இறை நம்பிக்கையில்லாதவர்கள் ஆவார்கள். அதாவது நாத்திகரகள்.

      நான் ஏன் தவறு என்று பாண்டியன் சொன்னால் படிக்கலாம். உஸ்…என்று இழுப்பது ரொம்பரொம்ப ஈஸி.

  40. Avatar க்ருஷ்ணகுமார்

    அன்பின் அய்……..

    \ இங்கு கேள்வி என்னவென்றால், \

    ஜாலங்கள் விக்ஞான பூர்வமானவையா என்பது மட்டிலும்.

    லக்ஷ்யம் ரெவரெண்டு சேவை என்றால் பூஜ்ய ஸ்ரீ புட்டபர்த்தி சாய்பாபாவின் ஜாலங்கள் மட்டிலும் விக்ஞான பூர்வமானவையன்று என்று சொல்லத்தோணும்.

    \ Some scholars have attributed the miracles to certain customs in the soceity. The multiplication of fishes and loaves also have root in certain customs; not actually miracles. \

    இப்படி பூசி மொழுக அவச்யம் இருக்காது.

    அன்பர் ஸ்ரீ புனைப்பெயரில் அவர்கள் ஒன்றாம் திகதியன்று எழுதியது,

    \ இயேசு நாதர் அப்பம் மீன் பங்கிட்டல், தொழுநோயை குணப்படுத்தியது எல்லாமே , \

    அய்…..தொழுநோயை குணப்படுத்தியதையும் பூசி மொழுகுங்களேன்.

    அப்பம், மீன் பங்கிடல் தொழுநோயை குணப்படுத்தல் இத்யாதிகள் விக்ஞான பூர்வமானவையா என்பது மட்டிலும் நீங்கள் ஏசுபிரான் பற்றி பேசவே கூடாது. சாயிபாபா பற்றி மட்டும் இதெல்லாம் பேச வேண்டும். அது தானே தங்களது யுக்தி, தேவரீர்.

    \ None of the researchers have mocking tone like that we find in Krishnakumar who uses gentle words with double tongue. \

    With all due respects, any reader who reads what your goodself writen and what I wrote ……… sure can easily understand where lies double tongue, sir.

    But again with due respects, sir, krishnakumar never needs disguises to write his opinions in new names every day in and day out.

    • Avatar IIM Ganapathi Raman

      நான் கிருஷ்ணகுமார், நீ உன் பெயரைச்சொல்லவில்லை. எனவே உன் கருத்துக்கள் போலி, என் கருத்துக்களே சரக்கு என்பது குழந்த்தனம். அப்படிப்பட்ட குழந்தைத்தனத்தில் ஒரு மகிழ்ச்சி இருப்பின், அது செனைலிட்டி. மேலும், சொல்லப்பட்ட கருத்துக்களை எதிர்னோக்க தைரியமில்லாமல் திசை திருப்பும் கோழைத்தனம்.

      Now I come to Jesus of Nazareth and his so-called miracles and the magician Sai Baba…

      • Avatar IIM Ganapathi Raman

        //இங்கு கேள்வி என்னவென்றால், \
        ஜாலங்கள் விக்ஞான பூர்வமானவையா என்பது மட்டிலும்.
        லக்ஷ்யம் ரெவரெண்டு சேவை என்றால் பூஜ்ய ஸ்ரீ புட்டபர்த்தி சாய்பாபாவின் ஜாலங்கள் மட்டிலும் விக்ஞான பூர்வமானவையன்று என்று சொல்லத்தோணும்.//

        அந்த கேள்வி உங்களுக்கு; அதை நீங்கள் கிருத்துவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை ஏசுவின் செயலகள், மிரக்கல்களா – மஹிமைகளா இல்லை ஏமாற்று வித்தைகளா என்ற ஆராய்ச்சியில்லை. Magician’s tricks = ஜாலவித்தைகள்’ Mirales – மஹிமைகள்

        நான் சொல்வது அல்லது படித்தது என்னவென்றால் –

        முருகன் சரவணப் பொய்கையையில் சிவகலிதங்களில் இருந்து தோன்றி கார்த்திகப்பெண்களால் வளாக்கப்பட்டான் எனப்து கந்தபுராணம். இதை எப்படி இந்துக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நம்பிக்கை.

        அதேவேளையில் அதை நம்பாதவர்களும் இந்துக்களாக இருக்கலாம். ஏனெனில் மதம் அப்படித்தான் சொல்கிறது. இசுலாமியர்களைப்போல 100.100 நம்பிக்கை; 99/100 என்றால் நீ காஃபிர் எனபது கிடையாது. எனவே புராணக்கதைகளில் நம்பிக்கை இருக்கலாம் இல்லாமலிருக்கலாம். மஹாபாரதத்தையும் ராமாயணத்தையும் கந்த புராணத்தையும் படிக்காமலும் அல்லது நம்பாமாலும் இந்துவாக வாழலாம்.

        ஆக ஒன்று கண்டோம். எப்படி எடுத்துக் கொள்ளவேண்டுமென்ற சுதந்திரம் இருக்கிறது. அதைப்போலவே கிருத்துவத்திலும் உண்டு. ஏசுவின மஹிமைகளை நம்பாதவர்களும், ஏசுவைத் தெய்வமாக ஏறகாத பிரிவுகளும் உண்டு. இவர்களுக்குமப்பால், ஏசு, ஏசுவைப்பற்றியவை, அவரது சமூகம் – இவற்றைப்பற்றி படிப்பாரொ ஆராவ்ய்வோரும் உண்டு. அவர்களுள் கிருத்துவரளும் யூதர்களும அனேகம்.

        இவர்களைப்பற்றித்தான் பேசுகிறேன்.I belong to their free world of intellectual pleasures.

        கிருஸ்ணகுமார், ஒரு உண்மையை புரிந்துகொள்வது மிக அவசியம். எல்லாமதங்களிலிலும் இந்த மஹிமைச் சமச்சாரங்கள் உண்டு. ஒரு சில இல்லாமலிருக்கலாம். எனக்கு அவைப்பற்றித் தெரியாது. பெருமதங்களைப்பற்றி பேசினால் உண்டு.

        முஹமது நபி வானத்திலிருந்து அசிரீரி வழியாக கேபிரியலிடமிருந்து குரானின் வாசகங்களைப்பெற்றார் என்று இசுலாமியர்களும்,
        மோசஸ் பெற்றார் என யூதர்களும்
        கன்னிவயிற்றுப்பிறப்பு, அப்பம்,மீன் போன்ற்வைகளைக் கிருத்துவர்களும்
        என்று இம்மதங்களும் இருக்க, இந்து மதமோ எண்ணிலடஙக்கா மஹிமைச்சம்பவ்ங்களை நம்புகிறது.

        ஆக ஒரு இந்துவாக இருந்து கொண்டு, பிறமதங்களிலுள்ள மஹிமைச்செயல்களைப்பற்றிப்பேசுவது அல்லது அப்பம், மீன், என்று பகடி பண்ணி பரிகாசம் பண்ணுவது மத வெறியில்லாமல் வேறொன்றுமில்லை. மத வெறி என்றால் religious fanaticism.

        A religious fanatic holds tenaciously that all those that belong to others, are frauds; and those that belong to his own, are true and sacred.

        But the hilarious fact is that the things that belong to the fanatic exist also with others. He is aware of it but pretends to be unaware.

        அதைத்தான் கிருஸ்ணகுமார், பாண்டியனக்ள, புனைப்பெயரில்கள் இங்கு செய்துகொண்டிருக்கிறார்கள். கண்ணாடி வீட்டிற்குள்ளிலிருந்து கல்லெறிகிறொமென்று அவர்களுக்குத்தெரியும்.

        This scene will make any watcher laugh. Laughter is caused by grotesque situations. Imagine a clown performing his antics standing near the ring master or the master has left.

  41. Avatar க்ருஷ்ணகுமார்

    \ பெருமாள் வேண்டுமென்றால் இங்கே வா. \

    பெருமாளே.

    ம்………பூர்வாவதாரத்து *சிரி* வைணவம், ஆழ்வார்கள் பற்றிய சம்ப்ரதாயப்படியல்லாத ஸ்வய வ்யாக்யானங்கள்; வர்த்தமான அவதார ஸ்ரீ வைஷ்ணவ நிந்தை எல்லாம் நினைவு கூர்கிறேன்.

    சாங்கேத்யம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளனமேவவா
    வைகுண்டநாம க்ரஹணம் அசேஷாத் அகஹரம் பரம்

    என்று அஜாமிளோபாக்யான ச்லோகம்.

    கேலி கிண்டல் வழியாயினும் சரி, பகவன் நாமம் உரைத்தவன் ஸத்கதியடைவான் என்பது தாத்பர்யம்.

    திருமங்கை மன்னன் பெயராக இருக்கட்டும் பெருமாள் பெயராக இருக்கட்டும்…… ரெவரெண்டு சேவா நிமித்தம் வைஷ்ணவ தூஷணை லக்ஷ்யமாகவே இருக்கட்டும்…..பகவன் நாமாவைச் சொல்வதோ அல்லது ஆழ்வாராதிகளின் பெயரைச் சொல்வதோ……லக்ஷ்யம் ஏதாயினும் சொல்லப்படும் பகவன் மற்றும் பாகவத நாமாக்கள் ச்ரவணபோக்யமே. ஆழ்வார் திருவடிகளே சரணம்.

    • Avatar IIM Ganapathi Raman

      Excellent.

      தலை சாய்க்கிறேன்.

      ஆனால் என் கருத்துபற்றியும் ஏதாவது சொல்லலாமே?

      ஜோதிலதா கிரிஜாவின் நம்பிக்கையைப்பற்றி நான் சொல்லியாயிற்று.

      அவை:

      ஒரு பிரபல எழுத்தாளர். இவர் சொல்லியதை நம்பிவிடாதீர்கள். ஏனென்றால், சினிமா ஹீரோ சிகரெட்டு பிடித்தால் பைய்னகள் அது ஒரு பெரிய செயல் என்று காப்பியடிப்பார்கள். இப்படிப்பட்ட எழுத்தாளரே நம்புகிறாரே நாமும் நம்ம சாமிகளை விட்டுவிட்டு ஜாலசாமியாரிடம் போனால் என்ன என்று நினைப்பார்கள் என்ற அச்சம் இருக்கின்றப்டியாலே.

      ஞான வேல முருகனை வணங்குபவர்கள் எப்படி சாயிபாபாவின் ஜாலவித்தைகளை எடுத்துக்கொள்கிறார்கள் என்ற அறிய ஆவல். வெற்றிவேல் முருகனின் பக்தரை விளக்கும்படி திண்ணை வாசகர்கள் சார்பாக நான் விண்ணப்பிக்கலாமா?

      பழனியாண்டிக்கு காவடியும் புட்டபர்த்திக்கு ரயில் டிக்கட்டும் ஒரே நேரத்தில் சாத்தியமா?

      இந்துக்களே சொல்லுங்கள்.

  42. //ம்………பூர்வாவதாரத்து *சிரி* வைணவம், ஆழ்வார்கள் பற்றிய சம்ப்ரதாயப்படியல்லாத ஸ்வய வ்யாக்யானங்கள்; வர்த்தமான அவதார ஸ்ரீ வைஷ்ணவ நிந்தை எல்லாம் நினைவு கூர்கிறேன்.
    சாங்கேத்யம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளனமேவவா
    வைகுண்டநாம க்ரஹணம் அசேஷாத் அகஹரம் பரம்
    என்று அஜாமிளோபாக்யான ச்லோகம்.//

    சத்தியமா ஒரு மண்ணும் புரியல. வேண்டுமென்றே வீம்புக்கு எழுதியதுபோல் உள்ளது.

  43. Avatar க்ருஷ்ணகுமார்

    \ நம்பிக்கை என்பதன் அடிப்படையில் பைபள் க்ரந்தம் சொல்லும் எந்த விஷயத்தையும் அந்தந்த விஷயங்களை அவ்வப்படியே க்றைஸ்தவ சஹோதரர்கள் தங்கள் மனதிலேற்றி தங்கள் வாழ்வு உய்வுறுவது என்பது மதிப்பிற்குறிய விஷயமே. \

    இது என் அபிப்ராயம்

    \ ஆக ஒரு இந்துவாக இருந்து கொண்டு, பிறமதங்களிலுள்ள ம்ஹிமைச்செயல்களைப்பற்றிப்பேசுவது அல்லது அப்பம், மீன், என்று பகடி பண்ணி பரிகாசம் பண்ணுவது மத வெறியில்லாமல் வேறொன்றுமில்லை. மத வெறி என்றால் religious fanaticism. \

    அய்…..நான் சொல்லாததைச் சொன்னதாக என் வாயில் வார்த்தைகளைத் திணிக்க முயன்று கூச்சலிடமுனைவது தேவரீர். But thats the way you put forth your ENDLESS POINTLESS HEATED arguments, sir.

    But yes, when you consider both saibaba and Jesus the christ as human beings, one can simply conclude that miracles performed by any human being IRRESPECTIVE OF HIS RELIGION for that matter can not be scientific. Thats the conclusion coming from an unbiased analyser. Perhaps, if someone has any agenda, the conclusion would be windowdressed.

    To say a simple truth, one need not shout and it canbe said in couple of lines. To window dress a lie, one has to roam around the world ofcourse, sir.

  44. Avatar க்ருஷ்ணகுமார்

    \ நான் கிருஷ்ணகுமார், நீ உன் பெயரைச்சொல்லவில்லை. எனவே உன் கருத்துக்கள் போலி, என் கருத்துக்களே சரக்கு என்பது குழந்த்தனம். அப்படிப்பட்ட குழந்தைத்தனத்தில் ஒரு மகிழ்ச்சி இருப்பின், அது செனைலிட்டி. \

    அன்பின் அய்…….. மறுபடியும் இது என் அபிப்ராயமே இல்லை. With due respects, please dont put words in my mouth, sir.

    என் அபிப்ராய பேதம் ரொம்ப சிம்பள். ஒரே நபர் பல பெயர்களில் கருத்துப்பதிவது unethical. இங்கு கருத்துப் பதியும் பல அன்பர்களும் இதனுடன் உடன்படுவார்கள் என எண்ணுகிறேன். இந்த தளத்தின் நிர்வாகிகள் கூட இந்த விஷயத்தை ஒரு விவாதத்தினூடே பதிவு செய்துள்ளனர்.

    ஒருவருடைய இல்லாத அபிப்ராயத்தை அவருடையதாகச் சொல்லி அதை வாதத்திற்கு உட்படுத்துவது, சார், thats a comedy.

    And, sir, I remind you………once you advised me to express my views in crisp short sentences. I am trying that sir. And could I expect your goodself also to adher to your advice, sir.

    And be cool. be happy, sir.

  45. Avatar க்ருஷ்ணகுமார்

    \ Now I come to Jesus of Nazareth and his so-called miracles and the magician Sai Baba…\

    Sir, there you are

    before even getting into an analysis, you say miracles of Jesus………….and magician Sai baba…….preconceived notion. ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு. Out and out bias

    considering Jesus and Sai Baba both as human beings……….

    I would never question “Jesus” the “deva kumara” performing any miracles. Thats beyond question, and a matter of faith and very well respected by me. Pl Do not expect me to repeat it ad nausea.

    Just say in one line whether miracles performed by human beings could be scientific……….

    one need not roam around the world for telling a simple truth.

    • Avatar IIM Ganapathi Raman

      கிருஷ்ணகுமாரின் புரிதல் அவருக்கு வசதியாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்.

      என்னைப் பொறுத்தவரைதான் என் கருத்துக்கள். பிறர் எப்படி நோக்குகிறார்கள் என்றன்று. நான் எவருடன் இணைகின்றோனோ அக்குழுவின் கருத்துக்கள். We are free intellectuals. We don’t have tags like Atheists, Theists, Religionisits (interchangeable with Fanatics).

      எங்களுக்கு புட்டப்ரத்தி சாயி பாபாவும் இயேசுவும் முஹமது நபியும் மனிதர்கள். But their charisma and value may be on different planes, not comparable. மேட்டர் ஓவர் கிருஸ்ணகுமார்.

      (இசுலாமியரைப்பொறுத்தவரை முஹமது நபிகள் மனிதரே என்பதில் இருவேறுகருத்துக்கள் இல்லை)

      5. எங்களுக்கு புட்டபர்த்தி சாயிபாபவினதும் இயேசுவினது முஹமது நபிகளில் அசிரீரி கேட்டலும் விஞ்ஞானத்தில் நிரூபணம் பண்ணமுடியாதவையே.

      இவைகள்தா பிரமைசைஸ்.

      இதற்கப்புறம்தான் வேறுபடுகிறோம்.

      மேற்கூறிய மதத்தவர்களிடமிருந்து வேறுபட்டாலும், அவர்களின் நம்பிக்கை அவர்களுக்கு என்று விடுவது சமூஹப்பண்பாடு. அஃது எங்களுக்கு இருக்கிறது.

      கிருஸ்ணக்குமார்களின் நிலையைப்பார்ப்போம்:

      இயேசுவினது செயல்கள் மஹிமைகள் என்று கிருத்துவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அப்படி எடுத்ததானேலே கிருத்துவமதம் என்று இருக்கின்றது. (சில பிரிவுகளை ஒதுக்கிவிட்டால்) மேலும் இயேசுவின் மஹிமைகளுக்கு முதலில் தெயவத்தன்மை கொடுத்து அவரையும் தேவகுமாரானாக்கிவர் புனித பவுல் என்பதையும் தெரியலாம். இதில் நாங்கள் தலையிடவில்லை.

      மத வெறியர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்றால், இயேசுவோ முஹமது நபிகளோ செய்தால் அதை பகடி, பரிகாசம், இழித்துரைத்தல் என்று இறங்கிவிடுகிறார்கள். அதே செயல்கள் தம் மதத்தில் இருப்பதை முற்றிலும் மறந்தவிட்டு ஒரு நாடகம் போடுகிறார்கள். இவர்களது பின்னூட்டங்கள் திண்ணையில் நிறைந்து கிடக்கின்றன. (Evangerlists and dogmatic Muslim groups also indulge in this despicable practics along with Krishnakumaars of Hinduism)

      ஒரே வரியில் வேண்டுமா கிருஸ்ணகுமார்: 5 வது வரியை எடுத்துக்கொள்ளுங்கள்.

      இயேசுவின் மஹிமைகளை அவை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபணம் செய்யமுடியாது என்ற் கிருஷ்ணகுமார், சரவணப்பொய்கையில் ஆறுசிவகலிதங்கள் விழந்தன; அதிலிருந்து முருககுழந்தைகள் தோன்றின. ஆறு கார்த்திகைப்பெண்டிர் வளர்த்து ஆறுமுகனானான்.

      இதை நிரூபிக்கமுடியுமா? கிருஸ்ணகுமார்? ஞான வேல் முருகபக்தரான இவர்தான் சொல்லவேண்டும்.

      இதைப்போல எண்ணிலடங்கா கதைகள் உள. நிரூபிக்க முடியா. அவை ஏன்? என்று நான் தாண்டிப்போகிறேன் (அடுத்தமடலில்) கிருஸ்ணகுமார்களால் முடியாது. காரணம் அவர்களில் அஜெண்டாவே வேறல்லவா?

      • Avatar ஷாலி

        “கிருஸ்ணகுமார்களால் முடியாது. காரணம் அவர்களில் அஜெண்டாவே வேறல்லவா?….”

        கணபதி ராமன் ஸார்! என்ன இப்படி ஒரே போடாகப் போட்டு தேங்காயை உடைத்து விட்டீர்கள்? அவர் கொஞ்ச நாளைக்கு அதை வைத்து உருட்டி விளையாடுவதை வேடிக்கை பார்த்திருக்கலாம் தானே! எந்த புராணத்திலும் இல்லாதது கந்த புராணத்தில் உண்டு என்று சொல்வார்கள்.அந்த ஸ்கந்தனின் ஆறு முகப் பிறப்பு மட்டுமல்ல முப்பது முக்கோடி தேவர்களின் பிறப்பும் அதிசயம்தான்.திரு.கிருஸ்ன குமாருக்கு இதிலெல்லாம் அறிவியல் ஆதாரம் தெரிந்தே உள்ளது.அவருக்கு தெரியாதது இயேசு செய்தவைதான்.அற்புதங்களை இயேசு தானாக செய்ததாக ஒருபோதும் சொன்னதில்லை.கர்த்தரின் கிரியைப்படியே செய்கிறேன்.என்றுதான் சொல்கிறார்.தேவ பாஷை தாசருக்கு இதெல்லாம் சொன்னால் புரியாது.

Leave a Reply to க்ருஷ்ணகுமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *