நேரம்

Spread the love

எனக்கு நேரம் சரியில்லை
எனக்கணித்த
ஜோதிடகளுக்கு
நான் நன்றியே சொல்வேன்
நேரம் சரியில்லை
எனும்பொழுதெல்லாம்
நான் கடவுளாகிவிடுகிறேன்
ரொம்ப நல்லநேரம் எனும்பொழுதெல்லாம்
நான் இயந்திரமாகிவிடுகிறேன்
எது நல்லநேரம் என்று
குழப்பமாய் உள்ளது
கடவுளாய் இருப்பதைவிட
இயந்திரமாய் இருப்பதையே
மனித மனம் விரும்புவதாலோ.

=முத்துசுரேஷ் குமார்

Series Navigationஜென் ஒரு புரிதல் பகுதி 8மரத்துப்போன விசும்பல்கள்