ந‌டுநிசிகோடங்கி

Spread the love

நாய்களின் நடுநிசிகள்
தனதாக்கிக் கொண்ட‌
தெருவின் வழியே
நாய்களைத் துரத்தும்
கோடங்கிப் பயணம் எனது.

நான் பேயாய்த்
தெரிந்திருக்க‌க்கூடும்
நிறங்களைப் பிரித்தறியாத‌
நாய்க‌ளின் க‌ண்க‌ளுக்கு.

உர‌க்க‌க் குழைத்து
அடையாள‌ம் காட்டின‌-
பொங்கி வ‌ழியும்
அவைகளின் பயத்துடனான
ப‌ளிங்குக் க‌ண்களின் வழி
என் பேய் பிம்ப‌த்தை.

பேய் வேடம் தறித்து
நாய்க‌ளைத் துர‌த்த
ஆர‌ம்பித்த‌தில் நித்த‌மும்
என் ப‌ய‌ண‌த்தைத்
தெருக்க‌ள் விரும்பின‌.

நிம்ம‌தியிழ‌ந்த‌ நாய்க‌ள்
அடுத்த‌ தெருவில்
த‌ஞ்ச‌ம் புகுந்து
நான் செல்லும் தெருவில்
பேய் நட‌மாட்ட‌ம்
இருப்ப‌தை உறுதி செய்த‌ன‌.

ந‌டுநிசிக‌ளை
விழுங்க‌த் தொட‌ங்கிய‌து
நாய்க‌ளில்லாத தெரு.

-சோமா
9865390696

Series Navigationமகா சந்திப்பொன்றில்கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு