படிக்கலாம் வாங்க..

This entry is part 10 of 27 in the series 29 செப்டம்பர் 2013

 

 

                  1.

நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் )

தமிழில்: ச.மாடசாமி

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர்  சிப்ஸ் )

 

    சிப்பிங் என்ற  பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு  பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர்  உறவு பற்றியும் இந்நூல் பேசுகிறது. ஒரு தலைமை ஆசிரியராக உயர்வது அவரின் கனவு.  அதற்குத் தேவையான கல்வித்தகுதியும் திறமையும் அவரிடம் இல்லை. 60 வயதில் பள்ளி ஆலோசராகிறார். 65ல் பணி ஓய்வு..பள்ளி வாழ்க்கையும் ,  ஓய்வு வாழ்க்கைக்குப் பின்னதான அவரின் அனுபவங்களும் இந்நாவலில் விரிகிறது. ஆசிரியர் மாணவரிடத்தில் அதிகாரமற்ற உறவு நீடித்திருப்பதை சிப்ஸ் பள்ளி வாழ்க்கை முடிய கடைபிடித்திருக்கிறார். மாணவர்களை தோழர்களாக வகுப்பிலும் வெளியிலும் நடத்தியிருக்கிறார்.1848ல் பிறந்த சிப்ஸ் 1913ல் மூச்சுத் திணறல் நோயால் இறந்து போகிறார்.பள்ளியை பனி மூடிக்கிடந்த போதும், பள்ளி மாணவர்கள் மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டபோதும் அசெம்பிளி ஹாலையே மருத்துவ வார்டாக மாற்றி சேவை செய்திருக்கிறார். முதல் உலகப் போர் தொடங்கிய போது புருக்பீல்டு மாணவர்களில் கணிசமானோர் ராணுவத்தில் சேர்ந்து சிலர் பலி ஆகி யிருக்கின்றனர். பழைய மாணவர்களைப் பற்றி பிறமாணவர்களிடம் பேசி உத்வேக மூட்டி மனம் கரையச் செய்திருக்கிறார்.பள்ளீக்கு வெளியே குண்டு மழை பொழிந்தபோதும் அது மாணவர்களை பெரிதும் பாதிக்கக் கூடாதென்று  பாடத்தை நடத்தி  காட்டியவர்.பள்ளி இயல்பான இடமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.போர்க்காலத்தில் ரொட்டிக்கு ரேசன். ரேசனில் கிடைத்த ரொட்டியை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்.தன் உயிலில் சொத்துக்களை புரூக் பீல்டு பள்ளிக்கும், ஆதரவற்றோர் பள்ளிக்கும் எழுதி வைத்தவர். ஆட்சி அதிகாரத்தைப் பற்றி  தொடர்ந்து மாணவர்களிடம் விமர்சித்துக் கொண்டே இருந்தவர்.திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களில் மனைவி இறந்து போன பின் முடிந்து போக வாழ்க்கை முழுக்க தனிமைதான். ஆனால் தனிமையை அவர் உணராமல்  மாணவர்களுடனேயே கழித்தவர்.” எனக்கா குழந்தைகள் இல்லை. எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள் . ஆயிரக்கணக்கில்.. எல்லாம் ஆம்பளப் பசங்க “ என்று மரணப் படுக்கையில் பெருமிதம் கொண்டவர்.வகுப்பறையை வெல்வது, மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரியராக உணர்ந்து வாழ்ந்தது, தொடர்ந்து வாசிப்பதன் ஆகியவை மூலம்  தன்னை தன்னை ஆசிரியராய்  நிருபித்து கொள்வதுமாய் வாழ்ந்திருக்கிறார். சிப்ஸ் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான். ஆனால் நிஜ மனிதராய் ஜேம்ஸ் ஹில்டன் மூலம் பெரும் ஆளுமையாக இந்நாவலில் வெளிப்பட்டிருக்கிறார் சிப்ஸ். எளிய மொழிபெயர்ப்பு.உள் ஓவியங்கள் பள்ளிச் சூழலை வெளிக்கொணர சிறப்பாகப் பயன்பட்டிருகிறது.திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.

 

இன்றைய ஆசிரியர் உறவு எவ்வகையிலும் தீங்கு தரக்கூடாது என்றிருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தம் சொல்லி மாளாது. திசை மாறிச் செல்லும் மாணவர் சமூகம்.அதிநுகர்வுப்போக்குகள் அவர்களை அலைக்கழிகின்றன, அது ஆண்டான் அடிமை உறவல்ல. அன்பும் கருத்துப் பரிமாற்றமும் உள்ளடக்கிய கருத்துப் பரிமாற்றமாக இருக்க வேண்டும். சுதந்திரக்கல்வி உணர்வு என்றைக்கும் மனதில் நிலவ வேண்டும்

ஆசிரியர் மாணவர் உறவு அசாதரணமாக இருக்கும் இன்றைய சூழலில் அதை மேம்படுத்தும் அம்சங்களை இந்நாவல் கொண்டிருக்கிறது.

   ( 64 பக்கங்கள் ரூ 35: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )



 

    – சுப்ரபாரதிமணியன் (  9486101003  )

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)தாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. !
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *