பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

Spread the love

 

 

சந்திரசோம

நீ காலமானதும்

பத்மினி அழவில்லை

வேறு பெண்களென்றால்

நிலத்து மண் தின்று

உளறி உளறி ஓலமிட்டு

ஒப்பாரி வைத்தழுது

துயருறும் விதம் நினைவிலெழ

பத்மினி உன்னை நேசிக்கவில்லையென

கவலை கொண்டாயோ சந்திரசோம

 

எனினும்

நீயறியாய் சந்திரசோம

மூன்று நான்கு மாத காலத்துக்குள்

பேச்சு வார்த்தை குறைந்து

நடக்கவும் முடியாமல் போய்

திடீரெனச் செத்துப் போனாள்

பத்மினி

 

– தக்ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationவாதம் – விவாதம் – ஒரு ஜாலியான அலசல்வாயு