பரிகாரம்

Spread the love

காதறுந்த வீடுகள்
கலையா துயிலில் சுகித்திருக்க
பனிபோர்த்திய மைய இரவில்
குறி இசைத்தான்
கெட்டகாலம் பிறக்க
கெடுதிகள் நடக்குமினி
நோய்மை மனிதர்களையும்
கடந்த பிணமும் கண்டு
கற்றறிய பற்றற்றுப் போன
போதியாய் உன் மகனும்
தேசாந்திரியாவான்
முதிர்ந்த உடல் கிடத்தி
நிம்மதிக்கான வாழ்வின் கனவு
பங்கப்படாமலிருக்க பரிகாரம் உண்டிங்கு
அதிகாலை எனை அடைய
ஆறுதல் கொள்வாய்யெனும் ஒலி தேய
தொலைந்த நித்திரையை
துழாவிடத் துவங்கினோம்…

Series Navigationபாண்டிராஜின் ‘ மெரினா ‘புள்ளியில் மறையும் சூட்சுமம்