பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை.

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

bengurion                                                                                                          டேவிட் பென் குரியன்

 Map of Palestine under British rule

சமீபத்திய வரலாற்றில் பாலஸ்தீன் என்று அழைக்கப் படுவது இன்றைய இஸ்ரேல் ஜோர்டான் பகுதிகளாகும். 1517 முதல் 1917 வரையில் இந்தப் பகுதி ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாய் இருந்தது.

முதல்  உலகப் போரின் முடிவில் ஆட்டமன் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. அதன் பின்பு பிறந்த நவீன காலத் துருக்கி ;பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் வசம் ஒப்படைத்தது. இது லாசன் ஒப்பந்தம் எனப்படும்.

1917-ல் பிரிட்டன் பால்பூர் திட்டம் என்ற ஒன்றை அறிவித்து “பாலஸ்தீனம் இஸ்ரேலின் தாய் நாடு என்று அறிவித்தது” . 1922-ல் பாலஸ்தீனப் பகுதியின் 80 சதவீதத்தை  ட் ரான்ஸ் ஜோர்டான் வசம் அளித்தது. ஜோர்டான் தான் பாலஸ்தீனத்தின் அரபுப் பகுதி யாகும்.

பாலஸ்தீன வாசிகள் யூதர்கள், அரபுகள், ஜோர்டான் வாசிகள் எல்லோருமே பாலஸ்தீனர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்.

யூதர்கள் தமது வரலாற்று வசிப்பிடமான  ஜூடியா , சமாரியா பகுதிகளில் குடியேறிய பின்பு தான் அரபு பாலஸ்தீன தேசம் என்ற மாயை ஸ்தாபிக்கப் பட்டு பிரச்சாரம் செய்யப் பட்டது. பாலஸ்தீனம் என்று ஒரு மொழியோ, பாலஸ்தீனம் என்ற நிலப் பரப்போ என்றும் இருந்ததில்லை. பாலஸ்தீன அரசும் என்றும் இருந்ததில்லை. இன்றைய பாலஸ்தீனர்கள் அரபுக்களே.  அரேபியாவின் மற்ற அரபு மக்களிடமிருந்து இவர்கள் எந்த விதத்திலும் தனித் தன்மை கொண்டவர்கள் அல்ல. இவர்களின் கலாசாரமும் அரபுக் கலாசாரமே.

இவர்களில் பலரும் சென்ற 100 வருடங்களில் இங்கு குடியேறியவர்களே. இஸ்ரேலின் உருவாக்கம் பொருளாதார வளர்ச்சியை இந்தப் பகுதிக்குக் கொண்டு வந்தது. இதில் பலனடைய பலரும் இந்தப் பகுதிக்கு வந்தனர். 100 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி ஜனத்தொகையும் சொற்பமே. யூதர்கள் பெரும்பான்மையும், அரபுகள் சிறுபான்மையாகவும் ,இருந்தனர். ஓஸ்லோ ஒப்பந்தம் வரையில் இஸ்ரேல் பகுதியில் தான் அரபுகள் நல்ல வேளையில் இருந்தனர். இப்போதும் கூட பல அரபுகள் இஸ்ரேலுக்கு குடியேறி வாழ விரும்புகின்றனர்.
பாலஸ்தீன அத்தாரிடியின் தலைவர்  அராபத் கூட “பாலஸ்தீனர்” அல்ல. எகிப்தில் பிறந்தவர். பாலஸ்தீன் என்ற நாடோ மொழியோ பண்பாடோ என்றுமே இருந்ததில்லை. இன்றும் அரபுப் பகுதியாகத் தான் அறியப் படுகிறது. இந்த அரபுப் பகுதி இஸ்ரேலைப் போல 660 மடங்கு பரப்பளவு கொண்டது. ஜனத்தொகை அடர்த்தியும் அவ்வளவாய் இல்லை.
இன்று இஸ்ரேல் மீது சொந்தம் கொண்டாடுவது இஸ்ரேலின் அழிவையே முதன்மையான நோக்கமாய்க் கொண்டது. இஸ்லாமியப் பரப்புதலின் ஓர் அங்கம் தான் இந்த எதிர்ப்பு.
****
இந்த இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையை உலகு முழுதுமான முஸ்லிம்களின் பிரசினையாக ஆக்குவதில் இஸ்லாமிய அரசியல் வெற்றி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸில் யூதர்களுக்கு எதிரான வன்முறை தொடங்கியுள்ளது. பிரான்ஸின் கத்தோலிக்க மதச் சார்பு எப்போதுமே யூத எதிர்ப்பை தன்னுள் கொண்டது. அதன் கோர முகம் மீண்டும் வெளிப்படத் துவங்கியுள்ளது.
யூதர்களை அல்ல நாங்கள் ஜியோனிசத்தைத் தான் எதிர்க்கிறோம் என்று வாதம் செய்பவர்கள் உண்டு தான். இது போன்ற வறட்டு வாதங்கள் தமிழர்களுக்குப் புதிதல்ல. பிராமணர்களை எதிர்க்க வில்ல பிராமணீயத்தை தான் எதிர்க்கிறோம். என்று சொல்லப்பட்டதுண்டு. அதன் உண்மையை எல்லோரும் அறிவோம்.
**************
Series Navigation
author

மஞ்சுளா நவநீதன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    paandiyan says:

    //இந்த இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையை உலகு முழுதுமான முஸ்லிம்களின் பிரசினையாக ஆக்குவதில் இஸ்லாமிய அரசியல் வெற்றி பெற்றுள்ளது//

    true. and this is very good article. I have pasted earlier one link from other portal which talks abut why arab countries now indirectly support Israel this time to kill hamas. its good to read one that also. thiruma , vaiko should read tamil papers , portals rather than old style hindu type papers to get to know what is happening at present over there..

  2. Avatar
    ஷாலி says:

    குப்புற தள்ளிய குதிரை குழியும் தோண்டியகதையாக,இஸ்ரேலின் கொலை குண்டு தாக்குதலில் மரணித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களை குழி தோண்டி புதைக்கும் வேலையை திருவாளர்கள்.சின்னக்கருப்பன்,மஞ்சுளா நவநீதன் போன்றவர்கள் கையில் எடுத்து விட்டனர்.தங்கள் கை சைசுக்கு தகுந்த மாதிரி வரலாற்றை திரிக்கும் கைங்கரியத்தில் இறங்கிவிட்டனர்.

    மஞ்சுளா அம்மையார் கூறுகிறார், “பாலஸ்தீனம் என்று ஒரு மொழியோ, பண்பாடோ,பாலஸ்தீனம் என்ற நிலப் பரப்போ என்றும் இருந்ததில்லை. பாலஸ்தீன அரசும் என்றும் இருந்ததில்லை.”

    பாலஸ்தீனம் என்ற ஒரு மொழி, பண்பாடு இருப்பதாக இங்கு யாரும் சொல்லவில்லை.மொழியையும் பண்பாட்டையும் மீட்பதற்காக யாரும் சண்டை செய்யவில்லை.ஆனால் பாலஸ்தீனம் என்ற நிலப்பரப்பு உண்டா இல்லையா?

    இதோ உங்கள் இன மான சகோதரன்.திரு.சின்னக்கருப்பன் “இஸ்ரேலின் நியாயம்” என்ற கட்டுரையில் கூறுகிறார்,

    சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், ரோமர்கள் முதலாவது யூதப்போரை நிகழ்த்தும்போது (இயேசுவின் காலம்)…….. அங்கிருந்து அனைத்து யூதர்களும் சிதறடிக்கப்பட்டார்கள். யூத அடையாளமே அந்த நிலத்தில் இருக்கக்கூடாது என்று எடுத்துகொண்ட ரோமானியர்கள், இஸ்ரேல் என்று அவர்கள் அழைத்த நிலத்தை, பாலஸ்தீனம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். இன்று காஸா என்று அழைக்கப்படும் நிலம் மட்டுமே ஒரு காலத்தில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. பிலிஸ்தியர்கள் என்ற பெயரில் இவர்கள் பழைய ஏற்பாடு பைபிளில் குறிப்பிடப்படுகிறார்கள். இடத்தின் பெயர் மட்டுமே பாலஸ்தீனம்.

    “இதுதான் டேவிட் சாலமனின் இஸ்ரேலிய அரசு. இதில் பிலிஸ்தியா என்று கூறப்பட்டுள்ள இடத்தை கவனியுங்கள்.” என்று கூறி ஒரு மேப்பையும் போட்டுள்ளார்.
    பாலஸ்தீனம் என்ற நிலப்பரப்பே இல்லை என்று கூறும் மஞ்சுளா அம்மையார்,போகிற போக்கில் புழுதியை வாரி தூற்றுவது,கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா! போடுவது போல் உள்ளது. இனி கட்டுரை எழுத்தும் போது திரு.சின்னக்கருப்பன் அவர்களை கலந்து கொண்டு எழுதினால் முஸ்லிம் வெறுப்பரசியல் கல்லா கட்டும்.

  3. Avatar
    ஒரு அரிசோனன் says:

    உயர்திரு மஞ்சுளா நவநீதன் அவர்களே,

    //து போன்ற வறட்டு வாதங்கள் தமிழர்களுக்குப் புதிதல்ல. பிராமணர்களை எதிர்க்க வில்ல பிராமணீயத்தை தான் எதிர்க்கிறோம். என்று சொல்லப்பட்டதுண்டு. அதன் உண்மையை எல்லோரும் அறிவோம்.//

    சரியான கூற்று. உறைக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். செத்த பாம்பைத் திரும்பத் திரும்ப அடிப்பதுபோல, உலகத்தில் நடக்கும் கேடுகளுக்கெல்லாம் பிராமணர்களைக் குறைகூறி வரும் ஒரு கூட்டத்திற்குச் சரியான சுட்டுதல்தான்!

  4. Avatar
    ஷாலி says:

    // 100 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி ஜனத்தொகையும் சொற்பமே. யூதர்கள் பெரும்பான்மையும், அரபுகள் சிறுபான்மையாகவும் ,இருந்தனர்.//

    அம்மையார் மஞ்சுளா நவநீதன் அவர்கள் கட்டுரையில் ஒரு நீதத்தையும் பார்க்க முடியவில்லை.எல்லாம் அடுச்சு விடு! அள்ளி விடு ரேஞ்சில் உள்ளது. மஞ்சுளா அம்மா! உங்க நீதத்தை நிறுத்திவிடாதீர்கள்?சரித்திரத்தை பிழிந்து சாறு எடுத்து சக்கையை இங்கு துப்புங்கோ!

    According to Alexander Scholch, the population of Palestine in 1850 was about 350,000 inhabitants, 30% of whom lived in 13 towns; roughly 85% were Muslims, 11% were Christians and 4% Jews
    According to Ottoman statistics studied by Justin McCarthy,( is an American demographer, professor of history at the University of Louisville, in Louisville, Kentucky.) the population of Palestine in the early 19th century was 350,000, in 1860 it was 411,000 and in 1900 about 600,000 of whom 94% were Arabs. In 1914 Palestine had a population of 657,000 Muslim Arabs, 81,000 Christian Arabs, and 59,000 Jews. McCarthy estimates the non-Jewish population of Palestine at 452,789 in 1882; 737,389 in 1914; 725,507 in 1922; 880,746 in 1931; and 1,339,763 in 1946.
    In 1920, the League of Nations’ Interim Report on the Civil Administration of Palestine stated that there were 700,000 people living in Palestine: Four-fifths of the whole population are Moslems. A small proportion of these are Bedouin Arabs; the remainder, although they speak Arabic and are termed Arabs, are largely of mixed race.
    Some 77,000 of the population are Christians, in large majority belonging to the Orthodox Church, and speaking Arabic. The minority are members of the Latin or of the Uniate Greek Catholic Church, or—a small number—are Protestants. The Jewish element of the population numbers 76,000. Almost all have entered Palestine during the last 40 years. Prior to 1850, there were in the country only a handful of Jews.
    en.wikipedia.org/wiki/Palestine

  5. Avatar
    ஒரு அரிசோனன் says:

    Mr. Shali,

    What you say about the population distribution of Jews in Palastine may be correct. But, they were the majority of that land before they scattered from Palestine many a century ago.
    That Jewish diaspora suffered a lot under many pograms in Russia, genocide in Germany, and all other places. After suffering for centuries, waiting for a Messiah to free them, they did a lot of soul-searching.

    They wanted to have a land of their own where they can rule themselves. They looked inward, and found that the land in and around Jerusalem was their promised land. Zionism started, and they started moving into their promised land. They decided that either they would claim their promised land for themselves, or go down fighting –instead of suffering in foreign lands. The rest was history.

    Please do not quote statistics. In India, prior to the start of eighth century, there were no Muslims, or Christians either. If there were any, they were a handful.

    Now, the cradle of Hindusim, where Vedas flourished, is now Pakistan.

    Before the thirteenth century, there were no Europeans in the Western Hemisphere, or in the Australian continent. Now the native people are reduced a very small minorityu.

    These demographical changes happens all the time. People should try to live peacefully, avoiding war. Great Aztec culture was destroyed by the Spaniards.

    Until and otherwise people condition themselves to live in harmony, and respect others’ right to live and practice their faith, all these struggles will continue to happen.

    Who knows what the demographic conditions will be after a few centuries!

  6. Avatar
    ஷாலி says:

    //பாலஸ்தீன அத்தாரிடியின் தலைவர் அராபத் கூட “பாலஸ்தீனர்” அல்ல. எகிப்தில் பிறந்தவர். //

    ஒரு குழந்தை பிறந்த நாட்டை வைத்து,அதுதான் அக்குழந்தையின் நாடு என்று சொல்வது அபத்தமாக இல்லையா?

    இன்று பொருளீட்ட மத்திய கிழக்கு மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் தம்பதிகள் பிழைக்கும் நாட்டில் பெற்றெடுக்கும் குழந்தைகள் எல்லாம் அந்நாட்டு குடி மகனாக முடியுமா?

    யாசிர் அரபாத்தின் தந்தை பாலஸ்தீன் காஸா பகுதியைச் சேர்ந்தவர்,தாயார் ஜெருசலேமை சேர்ந்தவர்.இருவரும் பிழைக்க போன இடம் எகிப்து.போன இடத்தில் பிறந்தவர் அரபாத்.ஆகவே அரபாத்தும் பாலஸ்தினத்தை சேர்ந்தவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *