பிரசவ அறை

நீ பிறந்து விட்டாய்
கேட்டதும் சில்லென்ற உணர்வு..

உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே
அரை அங்குல புன்சிரிப்பு மட்டும்
கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும்
பிறப்பே, பிறப்பை பார்க்க வருவதே பரவசமாய்..

எப்போது என தெரியாமல்
வெடிக்கின்றன குண்டுகள்..
முதுகில் பாய்கின்றன பாதுகாவல்கள்…
உறவுகள் தருவதற்கு மறுதலிக்கிறது –
தலையனை தரும் ஆறுதலை கூட
சிற் சமயங்களில் ..

என்ற போதும்
ஏதோ ஒர் மூலையில்
மிக அகண்டு,மிக அகண்டு –
வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை
முத்தமிடுகிறது உன் நெற்றியில்

பூவுலகத்திற்கு ,எங்கள் உலகத்திற்கு
வந்து விட்டாய்,அந்த ஆனந்தத்தில்
வரவேற்கிறேன் ,அன்பே உன்னை !

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationகாலம்தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்