புதிய சிற்றிதழ் ‘ குறி ‘ – ஓர் அலசல்

புதிதாக சிற்றிதழ்கள் உலகத்தில் ஜனித்திருக்கிறது
இரண்டாவது இதழ் என் கைகளில்.. தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். அட நம்ம கவியோவியத்தமிழன். திண்டுக்கல் காரர். வித்தியாசமான சித்திரங்கள் வரைவதும், அழகான கையெழுத்தில் சிற்றிதழ்கள் ( அவைகளுக்கு சொற்ப ஆயுள்தான் என்றாலும்) வெளியிடுவதும் அவர் வழக்கம்.
இதழில் சா. கந்தசாமியின் ‘ எதிர்ச்சொல் ‘ சிறுகதை. வர்ணனைகளுக்கு முக்கியத் துவம் கொடுத்து ஏறக்குறைய கதை ஏதும் இல்லாத கதை. முதல் இதழில் சுஜாதாவின் ‘ நகரம் ‘ போட்டிருந்தார்களாம். அதுவாவது பரவாயில்லை. இரண்டா வது இதழிலேயே கதைத் தேர்வு பாஸ் மார்க் வாங்கவில்லை.
அரும்பட்டி நடராசனின் சுவடிகள் ஓகே.. ஆனால் ஆசாமி அந்தண எதிர்ப்பாளர் போலிருக்கிறது. சுவடிகளில் பூணுல் என்கிற வார்த்தை வருகிறதாம். அதனால் அதை இடைச்செருகல் என்கிறார்.
மதிப்புரைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கவுதமனின் ‘நான் பச்சை விளக்குக்காரி ‘ நன்றாக இருக்கிறது. கவிதைகளை ஆங்காங்கே எடுத்துப்போட்டிருப்பது மதிப்புரைக்கு இன்னமும் வீரியத்தைக் கொடுக்கிறது.
எல்லாக் கடவுளையும் கும்பிட்டுவிட்டு / ஈஸ்வரன் சன்னதியில் நுழைகையில் / தீர்ந்து போனது சில்லறை / உள்மனது திட்டியது / பிள்ளையாருக்குப் போட்டிருக்கத் தேவையில்லை.
கவிதை நடைதான் கொஞ்சம் இடிக்கிறது. குறைந்த வரிகளில் நிறையச் சொல்லு வதே கவிதை. உள்மனது திட்டியது என்கிற வரி தேவையில்லை. கடைசி வரி இப்படி இருந்திருக்கலாம்: பிள்ளையாரை விட்டிருக்கலாம்.
மு. முருகேஷ், விக்கிரமாதித்யன் என்று பெத்த பெயர்கள் கவிதைகளில்.
வடிவமைப்பும், அச்சிடலும் சரியான கவனத்தைக் காட்டுகின்றன. வாழ்த்துக்கள்.
தொடர்பு முகவரி : எம் கே எம் காம்ப்ளெக்ஸ், வடமதுரை ரோடு, வேடசந்தூர்_624710. § 9976122445

Series Navigationகோழியும் கழுகும்…