பேனா பேசிடும்…

காற்றில் இடைவெளிகள் தேடி
அங்கே ஓரிடம் கண்டுபிடிப்போம்
அணுக்களாய் நாமும் மாறி
அங்கு சென்று வாழ்ந்திடுவோம்…

ஆறு குளங்களும் வேண்டாம்
ஆறு சுவைகளும் வேண்டாம்
ஆறாம் விரலொன்றே போதும்
ஆறாக் காயங்கள் ஆறும்…

ஆறு நதிகளும் மற்றும்
ஓடை வயல்களும் வற்றும்
ஆறுதலாய் நாமிருக்க
ஆறாம் அறிவொன்றே போதும்…

ஆண்டுகள் நூறு செல்லும் தூரத்தை
அடைவோம் நொடி ஒன்றில் சென்று..
ஆரும் காணாத தேசத்தை
ஆள்வோம் ஒன்றாக இணைந்து…

“காலவெளிகளை”க் கடந்து செல்லுவோம்
யுகங்கள் பலவற்றைக் கண்டு கொள்ளுவோம்…
தீய வார்த்தையை விட்டு விலகுவோம்..
தூய பூமியை கட்டியெழுப்புவோம்…

கால யந்திரம் அதிலே ஏறி யாம்
“கடந்த காலங்கள்” சென்று வருவோம்…
முடிந்தால் மூன்று லட்சம் மைல்
செல்வோம் நொடியொன்றில்..
வேண்டாம் பாரபட்சங்கள்
இனியும் இந்த உலகத்தில்…

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationஇறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை”- விமர்சனம்என்னவென்று அழைப்பது ?