பொம்மை ஒன்று பாடமறுத்தது

ஹெச்.ஜி.ரசூல்

குரலைத் திருடியது யாரென்று தெரியவில்லை
பொம்மை ஒன்று பாடமறுத்தது
பொம்மையின் பேச்சு எப்படி இருக்கும்
பொம்மைகள் விளையாடிக் கொண்டிருந்தன
பூக்களைதலையில் சூட்டியும்
நாசியால் முகர்ந்தும்
குழந்தைகளை இடுப்பில் தூக்கியும்
முத்தம் கொடுத்தும்
துப்பாக்கிமுனைகளை துடைத்தும்
சுடுவதாய் பாவனை செய்தும்
பொம்மைகள் பொம்மைகளாய் இருந்தவரை
பொம்மைகளின் விளையாட்டில் படைக்கப்பட்ட உலகம்
யாருக்கும் வசப்படாதது
பார்ப்போருக்கும் கேட்போருக்கும்
பொம்மையின் பேச்சு பிடிபடுவதாக இல்லை
இடியோசை கேட்டும்
மின்னல்களைப் பார்த்தும்
பொம்மைகள் பயப்படவில்லை
ஏற்கெனவே அறிமுகமான
பொம்மை ஜின்களின் தலைகளில்
கொம்புகளும் முளைத்திருந்தன.
அறுபட்ட மரண நூலில் ஒரு பொம்மலாட்டம்

Series Navigationகாற்றும் நிலவும்ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.