மகள்

தேர்வு மையத்திற்கு
கூட  வரவில்லை என்றால்
அப்பாவுக்கு  என் மேல்
அக்கறை இல்லை
கூடவே  சென்று
நிழல்  பார்த்து உட்கார
சொன்னால்
ஏன் அப்பா இப்படி
படுத்தறீங்க என்று
சடைத்து  கொண்டாள்
என் மகள்
மகள் என்றாலும் பெண்தானே
புரிந்து கொள்ள முடியவில்லை

Series Navigationநாய்ப்பிழைப்புபிரியாவிடை