மருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் வைரஸ் ( Herpes Virus )

          வைரஸ் கிருமிகள் பலதரப்படட நோய்களை உண்டாக்கலாம்.இவற்றை வைரஸ் நோய்கள் என்போம். நமக்கு மிகவும் பழக்கமான அம்மை ஓர் வைரஸ் நோய்தான்.
          ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் ( Herpes Simplex – HSV  ) என்பது ஒருவகையான வைரஸ். இவை 2 வகையானவை – HSV – 1 , HSV  –  2 .
          முதல் வகையான ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் -1 தொற்று உண்டானால் ஏற்படும் நோய் அறிகுறிகள் வருமாறு:
          * காய்ச்சல்
          * வாய்ப்புண் – நாக்கில் புண்
          * நெறி கட்டிகள்
          * விரல்களில் கொப்புளங்கள்
          * கண் சவ்வழற்சி
          * மூளை அழற்சி
          * குறைவான உடல் எதிர்புச் சக்தியில்  பலதரப்பட்ட தொற்றுகள்.
          ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் – 2 பாலியல் தொடர்பால் உண்டாவது. இந்த தொற்று நோயால் உண்டாகும் அறிகுறிகள் வருமாறு:
          * பாலுறுப்பில் வலியுடன் கூடிய புண்கள்.
          * நெறி கட்டிகள் ( Lymphadenitis )
          * காய்ச்சல்
          * கல்லிரல் அழற்சி ( Hepatitis )
          * மூளை அழற்சி  ( Encephalitis )
          * ஓரின புணர்ச்சியில் ஆசனப் பகுதியில் புண்கள் ( Anal Ulcers in Homosexuals )
          * குறைவான உடல் எதிர்புச் சக்தியில் பலதரப்பட்ட தொற்றுகள்
          சிலருக்கு இத்தகைய ஹெர்ப்பீஸ் வைரஸ் தொற்று திரும்பத் திரும்ப உண்டாகும். வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி அமைதி காக்கும். காயம் அல்லது காய்ச்சல் உண்டானால் அவை வீரியம் பெற்று மீண்டும் நோயை உண்டாக்கும்.
                                                                                                                    நோய் நிர்ணயம்
          மருத்துவப் பரிசோதனையின்போதே இந்த நோயை அறிந்துகொள்ளலாம். சில வேளைகளில் புண்களில் வைரஸ் உள்ளதை PCR என்னும் பரிசோதனையின் வழியாக அறிந்துகொள்ளலாம்.
                                                                                                                              சிகிச்சை
          தற்போது ஏசைக்குலோவீர் ( Acyclovir ) என்னும் வைரஸ் கொல்லி மருந்து உள்ளது. இதை 5 நாட்கள் உட்கொள்ளலாம்.
          சிலருக்கு திரும்பத் திரும்ப வைரஸ் தொற்று ஏற்பட்டால் சிகிச்சையை 6 முதல் 12 மாதங்கள் வரை தொடரவேண்டியுள்ளது.
          புண்கள் உண்டான பகுதியில்  வைரஸ் கொல்லி களிம்பு தடவலாம்.
          ( முடிந்தது )
Series Navigationபிறந்துள்ளது கறுப்புக் குழந்தை !சபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்