மறுபக்கம்

Spread the love

 

 

வானத்தின் கைகள்

யாரைத் தழுவ

மோகம் கொண்டு அலைகிறது

முடவனின் கால்களும்

குருடனின் கண்களும்

ஊனன் நாடியாக வேண்டும்

பிறர் தயவை எந்நாளும்

சிநேகிதியிடம் நேரத்தை

பகிரும் போது

வியர்த்து ஆடை

நனைந்து விடுகிறது

விபரீதங்கள்

நடந்த பின்னரே

உணர  முடிகிறது

எல்லைக் கோட்டை

தாண்டி விட்டோமென்று

செய்தது பாபம்

என்று உணர்ந்த பின் மனம்

தாயின் மடியை

தேடியலைகிறது

பிறரின் மறுபக்கம்

தெரிய வரும் போது

ராட்சச சிலந்தி வலையில்

சிக்கிக் கொண்டுள்ளது

ஞாபகம் வருகிறது.

 

Series Navigationபொது மேடை : இலக்கிய நிகழ்வுபிராயச்சித்தம்