மலட்டுக் கவி

   —  ரமணி

 

ஒரு மிருகத்தை

வேட்டையாடுவது போல

அடம்பிடிக்கும் குழந்தைக்குச்

சோறூட்டுவது போல

வயதானவர்களின்

பிடிவாதம் தளர்த்துமாப் போல

பரீட்சை நாளின்

முன்னிரவு போல

எண்ணங்களுக்கு வடிவு

கொடுப்பதும் ஆகிவிடுகிறது.

எங்கேயோ புதர்களுக்குள் பதுங்கிவிடும்

வாயில் திணித்ததை

என்மேலேயே துப்பிவிடும்

முதுகில் ஏற்றிக்கொண்ட

காலத்தால் சண்டையிடும்

ஓட்டைத் தொட்டியில்

தங்காது தப்பிவிடும்

நால்வகைப் போக்கில்

உருக்கொள்ளாது

எத்தனை முறை

தரிக்காது போயிருக்கிறது?

Series Navigationபூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வைமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39