மழைப்பாடல்

Spread the love


 

தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க

சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்

இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி

என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்

வெளியேற முடியா வளி

அறை முழுதும் நிரம்பி

சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்

மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி

நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை

 

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationகவிதைஇந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் !