மாணவ பிள்ளைதாச்சிகள்

Spread the love

ஒவ்வொரு பேருந்து பயணத்திலும்
ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும்
குந்த இடமில்லாமல்
முதுகில் புத்தகத்தை சுமந்து
நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள்

முதுகு பைகள் கர்ணகவசம்
கழற்றி வைக்கப்படுவதில்லை
குந்திகளின் முக்கை அறுக்கும்
பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும

மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்
மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம்
கூட்டம் அதிகமாக இருந்தாலும்
முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும்

இந்த கர்ணர்களை கண்டால்
கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும்
இறக்கி கையில் வைக்க சொன்னால்
ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும்

முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென
தொடங்கி வைத்த படையப்பாவுக்கே தெரியாது

Series Navigationஇலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்மட்டைகள்