மாதிரிகள்அண்ணன் மாதிரி என்றும்
தங்கை மாதிரி என்றும்
அபத்த மாதிரிகள்
வேறு மாதிரிகளாக  மாறுவதுண்டு

மாமனார்  அப்பா மாதிரி
மாமியார்  அம்மா மாதிரி
மருமகன்  மகன் மாதிரி
மருமகள்  மகள் மாதிரி
ஒரு போதும்  மாதிரிகள்  அசலாவதிலை

மாய மான்  என தெரிந்தும்
சீதைகளுக்காக  ராமர்கள்
அன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு
துரத்தும் நாடகம்  நடந்து கொண்டே இருக்கிறது
கங்குகள் மீது படிந்த சாம்பலை
கைகள் அறியும்
அலுத்துவிட்ட  காட்சிகள் என்றாலும்
அலுக்காமல்  அரங்கேறுகின்றன

உண்மை  முகம் காட்டும் போது
உறவு பனிகள் உதிர்ந்து விடுகின்றன

Series Navigationசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51