மீந்த கதை!

வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ
வாழ்க்கைக்குள் மறையவோ
சாத்தியம் எதுவும் இல்லை இங்கு…

வாய்வழி சென்றவை
பின் வாயில் வெளியேறி
மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும்

பற்கள் இடுக்கில்
சிக்கிய உணவு போல
ஒவ்வொரு நொடியும்
மீந்த கதை சொல்ல
மட்டுமே முடிகிறது நம்மால்…

தினேசுவரி, மலேசியா

 

 

Series Navigationபஞ்சதந்திரம்நிலவின் பனிப்பாறைச் சேமிப்புக்கு நீர் வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்