முகபாவம்

*

முன்னோர்களின் மண்டையோட்டுக்களை

மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு

முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன்

அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர்

 

அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு

அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று

அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால்

கொடிய நகைப்புடன் ஒளிந்திருப்பதை அறியாமல்

 

குருதிச் சுழியிலென் மண்டையோடுகள்

ஓய்வற்றுச் சுழல்கின்றன

*

***

கலாசுரன்

 

Series Navigationசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்