முடிவுகளின் முன்பான நொடிகளில்…

வெற்றியின் நொடிகளை கொண்டாடலாம்
தோல்வியின் நொடிகளை தேற்றலாம்
முடிவுகள் அறிவிக்கும் முன்புள்ள,
மனதை கவ்வி முறுக்கும் நொடிகளை
என்ன செய்வது?


ஜெயிக்க வைக்க சொல்லி ஜபிப்பதா?
ஆசீர்வதிப்பாரோ , மாட்டாரோ என்ற
நிழல் தடுக்கி இடறுகையில் - கண்களை 
இடுக்கி வேகம் கூட்டி ஜபித்தாலும்
மனக்கரைசல் திப்பிகளாய் தங்குவது நிற்பதில்லை


சரித்திர நாயகர்களின் சாதனைகளின்
நினைவுகளை துணைக்கு அழைத்தாலும்
இறுகி விடுகிற நொடிகளில் ,உள்இறங்காமல்
ஒழுகி ஓடி நழுவுகிறது நம்பிக்கைகள்..


மண்டை ஓட்டை அடைகாத்து என்னவாக போகிறது
சரிந்து இழுக்கும் இப்புதைக்குழி நொடிகளை
வலிக்க காத்திருப்பதினால் என்னவாக போகிறது
செய்ய வேண்டியவைகளை செய்வதை விட்டுவிட்டு ...


- சித்ரா (k_chithra@yahoo.com)


Series Navigationசவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்கவிதை