மென் இலக்குகள்

Spread the love

__ரமணி

ஓர் இனிப்பைச் சுவைப்பது போல
என்னைத் திட்டிக்கொண்டிருந்தான்
என் உயர் அதிகாரி.

என் இயலாமையின் மீது
விளையாடிக்கொண்டிருந்தது
அவன் மூர்க்கம்.

பதிலடி கொடுப்பதின்
இழப்புச் சுமை
வாழ்க்கையை நசுக்கிவிடும்
என்பதாலேயே
என் சுயம்
நெடுஞ்சாலையில் நசுங்கிய
தவளையைப்போலக்
கால் பரப்பி உறைந்திருந்தது.

எனக்கு என் மனைவி
அவன் மனைவிக்கு அவன்
என்ற தொடர்ச்சியில்
அவனுக்கு நான்
வன்மையின் வடிகாலாவது
சரிதானென்று சமாதானம்
கொண்டது மனம்.

Series Navigationஉன்னிடம் அடிமை என்று பத்திரம் நீட்டுகிறாய்,கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)