மெஹந்தி

பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய்
இந்த வரம் வாங்கி வந்தேன்.
“கூடு விட்டு கூடு பாய்ந்து”
மெஹந்தி பிழியும்
இந்த கூம்புக்குள்
கண் கூம்பி தவம் இருந்தேன்.
இந்த “பியூட்டி பார்லருக்குள்”
அவள்
இன்று இதே நேரம் வருவாள்
என்று எனக்குத்தெரியும்.
அப்படித்தான் அவள் தோழியிடம்
பெசிக்கொண்டாள்.

அதோ சல்வார் கம்மீஸ்களின்
சரசரப்புகள் ஒலிக்கிறதே.
கண்கள் மூடி காத்திருந்தேன்.
கனவு விரித்து கூம்புக்குள்
சுருண்டு கிடந்தேன்.

இன்னும் சற்று நேரத்தில் அவள்
பொன் காந்தள் விரல்களில்
மின்னல் பூங்கொடிகளாய்
பின்னிக்கிட‌ப்பேன்…அவ‌ள்
உள்ள‌ங்கையில் என்
உள்ள‌ம் ப‌திப்பேன்.

செம்ப‌ஞ்சுக்குழ‌ம்பில் அவ‌ள்
நாண‌த்தை பூசிய‌போதெல்லாம்
அந்த ந‌றும்பூச்சில் நான்
பூக்க‌லாகாதா? என்ற‌
ஏக்க‌த்தையெல்லாம்
இப்போது போக்கிக்கொள்வேன்.

இந்த‌ பூ ஓவிய‌ம் கொண்டு
அவ‌ள் முக‌ம் மூடிக்கொள்ளும்
போதெல்லாம்
சூரிய‌னைக்க‌ரைத்து
ச‌ந்திர‌னில் ஊற்றிக்குடித்த‌து போல்
வெப்ப‌மும் த‌ட்ப‌மும்
க‌ல‌ந்து சுவைப்போம்.

ச‌ரி.இருங்க‌ள்.
மெஹ‌ந்தி
ஏழுவ‌ர்ண‌ அருவியாய்
இற‌ங்கி விட்ட‌து.

அடடா! ஐயோ!
அமில‌க்க‌ட‌லில் விழுந்த‌து போல்
உட‌லெல்லாம் எரிகிற‌தே.
ஆயிரம் ஆயிரம் வாட்ஸ்
மின்சாரம்
பாய்ந்தது போல் அல்லவா
இருக்கிறது.
கற்பு எனும் நெருப்பு
இது தானோ..
அய்யய்யோ
தாங்க முடியவில்லையே!!
என்ன‌ கூத்து இது?

மெஹ‌ந்தி ப‌ட‌ர்ந்த‌து
அவ‌ளுக்கு அல்ல‌.
அவ‌ள‌து தோழிக்கு!

அவள் வரவில்லை.
அவள் தோழி..
அதான்..அந்த‌
நெட்டக்கொக்கு
கழுத்தாள் தான்
வந்திருக்கிறாள்..
அய்யகோ என் செய்வேன்..

அட! சட்!
நிறுத்து!
ஏன் இந்த புலம்பல்?
இது கொலவெரி யுகம்.
21.. 22 …23..ஆம் நூற்றாண்டுன்னு
போய்க்கினே இருக்கணும்.
இப்ப‌
என்னாண்ற?
சும்மா..ஜாலியாய்
டைம் பாஸ்ஸுக்கு
தோழி மேல் தான்
படர்ந்தால் என்ன?

வண்ண வண்ண பூங்கொடியாய்
அவள் கைகளில் இறங்கினேன்.
என் தாவு தீர்க்க‌
தோள் கொடுத்த‌
தோளி அவ‌ள்!

“அய்யோ! அய்யோ!
உட‌ம்பெல்லாம் எரிகிற‌தே!
யாராவ‌து காப்பாத்துங்க‌..
ஆயிர‌ம் ஆயிர‌ம் க‌ம்ப‌ளிப்பூச்சிக‌ளாய்
கையெல்லாம் ஒரே கொப்ப‌ள‌ம்..
சீக்கிர‌ம் காப்பாத்துங்க‌…”

இப்போ..
அந்த‌ தோழி தான்
அல‌றினாள்! அர‌ற்றினாள்!
ம‌ய‌ங்கிச்சாய்ந்தாள்.

Series Navigationஅகர முதல “எழுத்தெல்லாம்”….(ரஜினி விருது விழா)அதோ ஒரு புயல் மையம்