This entry is part 2 of 43 in the series 29 மே 2011

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு
இன்னொருத்திக்கு கரும்புவில்
மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள்
சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி.

நான் சமையலறைக் கரண்டியுடன்
சிலசமயம் லாப்டாப்புடன்
எதுவும் சுமக்கா மோனநிலையில்
ஏன் எவருமே இல்லை..

Series Navigationகோமாளி ராஜாக்கள்பலூன்