வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

 

சுப்ரபாரதிமணியன்

 

ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும்  போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.

 சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.  வசந்தக்காலம் தொடங்குவதற்கான அடையாளமாக அது இருக்குமாம்..

இந்தியா மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேகாலாயாவின் அழகை காண வர வேண்டும். செர்ரி பூக்களை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் ஜப்பான், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.  இந்தியாவிலே செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா ஷில்லாங்கில் நடைபெறுகிறது.
சமீபமாய் சில ஆண்டுகளாய் இந்தியாவில் செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது

ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் செர்ரி பூக்கள் அபரிமிதமாய் பூத்து அழகு தருமாம்..வழக்கமாய் செர்ரி மரங்களைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது.

 

ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெறும் சமயத்தில்  மேகாலயாவின் விசேசமான உணவு வகைகள் கிடைக்கும்

அவற்றில் அரிசி உணவு ஜடோ, நகாம் பிச்சு சூப், அசைவ சாலட் டோலி, அசைவ உணவு துங்கிரிம்பை   ஆகியவை முக்கியமானவை

மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள்சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், “காசி”கள், “சைந்தியா”க்கள், “காரோ”க்கள் என்னும் இனத்தவர்களாவர்.

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை (74.59 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் (0.32 %) ஆகவும் உள்ளது.

இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர்.

இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழிவங்காள மொழிஅசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான காசி மொழி மற்றும் கரோ மொழி கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது.வட்டார மொழிகளோடு வட்டார உணவுகளும் முக்கியம்

\வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம் மட்டுமல்லாமல் உணவு வகைகளும் உணவு முறைகளும்கூட இந்திய பெருநிலத்திலிருந்து வேறுபட்டவை. மேகாலயா மாநிலம் அளவில் சிறியது என்றாலும் தனக்கென தனித்த உணவு முறைகளைக் கொண்டது.

மேகாலயா மக்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தவர்களாகவே உள்ளனர். மலை மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள மேகாலயாவில் வேளாண்மையே பிரதான தொழிலாக உள்ளது. அரிசி, சணல், இஞ்சி, மஞ்சள், வெற்றிலை, மிளகு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றன. பழத்தோட்டங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் மேகாலயாவில் அதிகம் காணப்படுகின்றன.

அரிசிமீன் மற்றும் இறைச்சிகள் மேகாலயா மக்களின் முதன்மையான உணவுகள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். இவை இல்லாமல் சோளம்கிழங்கு மற்றும் சிறுதானியங்களையும் விரும்பி உண்கின்றனர். மேகாலயாவில் உள்ள வெவ்வேறு இன மக்களின் உணவு முறைகளின் அடிப்படையில்அவர்களின் உணவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை கரோகாசி மற்றும் ஜெயின்டியா. கரோ வகை உணவுகள் சமைப்பதற்கு மிகவும் எளிமையானவை. காய்ந்த மீன் கொண்டு தயாரிக்கப்படும் நகாம் பிட்சி மிகவும் புகழ்பெற்ற கரோ வகை உணவாகும். அரிசியினால் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான உணவுகள் காசி என அழைக்கப்படுகின்றன. ஜடோஜஸ்டெம் ஆகியவை பிரபலமான காசி உணவுகள். காளானில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்ஜெயின்டியா எனப்படுகின்றன. டிட் துங்’ மேகாலயாவில் விரும்பி உண்ணப்படும் ஜெயின்டியா வகை உணவு. சாதத்தை புளிக்கவைத்து தயாரிக்கப்படும்கியாத் எனும் பானம் மேகாலயாவில் மிகவும் பிரபலம்.

மேகாலயாவில் உள்ள காசி எனும் குறிப்பிட்ட சமூகத்து மக்களால் தயாரிக்கப்படும் அரிசி உணவு ஜடோ. அரிசிஇறைச்சிபச்சை மிளகாய் சேர்த்து மிகுந்த காரத்துடன் ஜடோ உணவு சமைக்கப்படுகிறது. மேகாலயா செல்பவர்கள் ஜடோ உணவை சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள். இந்த உணவு பிரியாணியின் சுவைச் சாயலைக் கொண்டது. ஆனால் பார்ப்பதற்கு பிரியாணியைவிட ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும்.

மேகாலயா மக்களின் விசேஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களை கியாத் பானம் இல்லாமல் பார்க்க முடியாதுமுழுமையும் பெறாது. அந்த அளவுக்கு அவர்களின் வாழ்வோடு ஒன்றியது மேகாலயா கியாத். சோற்றைப் புளிக்கச் செய்து அதிலிருந்து கியாத் பானம் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு சுவைகள் மற்றும் பிளேவர்களில் தயாரிக்கப்படும் இந்தப் பானத்தைவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகள் விரும்பி அருந்துகின்றனர்.

 

மற்ற மேகாலயா உணவு வகைகளைவிட நகாம் பிட்சி சூப்பை தயாரிப்பது மிகவும் எளிதானது. மேகாலயாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த சூப்நன்றாக சாப்பிட்ட பின்பு அருந்த வேண்டியது. நகாம் பிட்சி சூப்காய்ந்த மீன் (கருவாடு) கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூப் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக மீன்களைத் தேர்ந்தெடுத்து காய வைக்கின்றனர். அதிக அளவு காரம் சேர்த்து மிகவும் சுவையாக இந்த சூப் தயார் செய்யப்படுகிறது.

மிகவும் புகழ்பெற்ற அசைவ சாலட் டோக்லி. இறைச்சிவெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து இந்த சாலட் தயார் செய்யப்படுகிறது. சருமத்துக்கு நன்மை தரக்கூடியது என நம்பப்படுவதால்டோக்லி மீது ஈர்ப்பு அதிகம். பீன்ஸ்தக்காளிகேரட் ஆகியவற்றையும் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்து பதமாகத் தயாரிக்கப்படும் உணவு என்பதால்உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.

மேகாலயாவில் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் புகழ்பெற்ற அசைவ உணவு, துங்கிரிம்பை. இறைச்சி, பீன்ஸ் மற்றும் எள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு, உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. இறைச்சி, பீன்ஸ் இரண்டையும் வேக வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து, அதை அரைத்து எடுத்துக்கொண்டு, வேக வைத்துள்ள பீன்ஸ் உடன் சேர்த்து, கடைசியாக இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இஞ்சி சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.            ( விக்கிபீடியா/ இணைய தள  தகவல்கள்)

எங்கள் குழுவில் மூன்று சமையல் பணியாளர்கள்  கோவையிலிருந்து கூட வந்திருந்தனர். ( அதில் ஒருவர் முதல் விமானப் பயணம் என்பதால் கையில் வைத்திருந்த பையில் கரண்டி, கத்தி உட்பட பல சமையல் சாமான்கள் இருக்க ஸ்கேனரில் சோதித்த விமான நிலைய அதிகாரிகள் அலறி விட்டனர். விமானத்திற்குள் நுழைய அதனால் தாமதமாகி விட்டது)

 அவர்கள் சமைக்கும் சமையலில்  வீட்டுச்சமையல்  தன்மை இருக்கும்.வயிறு கெடாமல் இருக்கும். காலையில் பேருந்து கிளம்பும்போதே மதியம் உணவும் தயாரிக்கப்பட்டு நாங்கள் செல்லும் வாகனத்திலேயே வந்து விடும். சில இடங்களுக்குச் செல்லும் போது சமையல் பொருட்கள், பாத்திரங்கள் என்று சகலத்தையும் கொண்டு செல்வோம் .சமைப்போம். அப்படி நோகலிகை நீர்வீழ்ச்சிக்கு சென்று போது அங்கு சமைத்து உண்ணலாம் என்றத்திட்டம்  சாலை சிரம காலதாமதத்தால் சாம்பார், ரசம்,  கூட்டு, பொறியல்  என்ற திட்டத்திலிருந்து நழுவி வெறும் ரசம், கத்திரிக்காய் பொறியல் . அப்பளம் என்ற அளவில் சுருங்கி பசிக்கு அமிர்தமாக இருந்தது.

அதனால் மேகாலயாவின் உணவுகளை  ஆசைக்குத் தேடிப் போய் உண்ண வேண்டியிருந்தது. கண்ட இடத்தில் மேய வேண்டியிருந்தது. அப்படி கொஞ்சம் மீனும், துங்கிரிம்பையும் எனக்குச்  சுவைக்கக் கிடைத்தன.

Series Navigationபயணம் – 3தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]