வட்டத்தில் புள்ளி

வட்டத்தில் சுற்றி வரும்

புள்ளி போல-

நம் வாழ்க்கை,

மேல் போகும் கீழிறங்கும்-

அழியாதிருக்கும்!

கீழிறிந்து மேல் போகும்

சுழற்சியிலே,

விடாது உந்தப் பட்டால்

மேலே போகும்!

அது,

அங்கேயே நிலைத்திருக்கும்

சூக்குமம் தெரிந்தால்

கீழிறிரங்கும் புள்ளிகள்

இல்லாமல் போகும்!

பழையப் புள்ளி பழையனவா, அன்றி

புதிதான புள்ளித் தொடரா?

புரிய வேண்டும்!

அதில்

புதிதாக தோன்றும் புள்ளி

புதியது அல்ல!

இருந்தவையே சுழற்சியிலே

புதியனவாகும்!

இங்கு இல்லாது ஒன்று தோன்றுவதில்லை!

இருப்பதையே அறியாது நாம் தெளிவதுமில்லை!

இது

புரிந்தால் எல்லாமே புரிந்தது போன்று!

நீயே ‘அவனெ’ன்று அறிந்தது போன்று!

ஆக புள்ளியில் துவங்குது

வாழ்க்கை இங்கே!

 

Series Navigationஅடங்கிய எழுத்துக்கள்வேரற்ற மரம்