வரவேற்போம் தீபாவளியை!

Spread the love

தீய எண்ணங்களை
தொலைத்துவிட…
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த…
வரவேற்போம் தீபாவளியை!

உணர்வுகளைத் தொலைத்துவிட்ட
தீவுகளாகிப் போன
நம் வாழ்வில்
வசந்தம் வீச…
வரவேற்போம் தீபாவளியை!

மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே
உறுதியான நட்பில்
தற்காலிகமாய்
மறந்துபோன முகங்களை
தேடும் முயற்சியாய்…
வரவேற்போம் தீபாவளியை!

நேற்றுவரை
காதலர்களாய்…
இன்றுமுதல்
கணவன் மனைவியாய்…
இல்லற பந்தத்தில்
இணைத்த பூரிப்பில்
வரவேற்போம் தீபாவளியை!

உண்மையான அன்பு
நம் குடும்பத்தினரிடம் மட்டுமே
கிடைக்கும் என்று
உணரவைக்கும்
திருவிழா ஆதலால்
வரவேற்போம் தீபாவளியை!

புத்தாடை அணிந்து
பட்டாசு வெடித்து
வாழ்வை இரசித்திட…
வரவேற்போம் தீபாவளியை!

தீய எண்ணங்களை
தொலைத்துவிட…
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த…
வரவேற்போம் தீபாவளியை!

Series Navigationமந்திரப்பூனை. நூல் பார்வை.Murugan Temple Maryland Upcoming Events