வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்

               மதுரையில் நடைபெற்ற “புவி வெப்பமயமாதலுக்கு எதிரான மூன்று நாள் மாநாட்டில் “ நொய்யல்  ஆறு-வளர்ச்சியின் வன்முறை : பின்னலாடைத்தொழிலும் அதன் பாதிப்பும் “ என்ற தலைப்பில் .திருப்பூர்  மக்கள் அமைப்பு ஒரு  கருத்தரங்கை நடத்தியது. ஒரே சமயத்தில் 15 அரங்குகளில் பல்வேறு சுற்றுச்சூழல் தலைப்புகளில் தேசிய அளவில் கவனிப்பு பெற்றவர்களின் குறிப்பிடத்தக்க உரைகள் இடம் பெற்றன.  அந்த மாநாடு பற்றியச் செய்திகள் வெகுஜன ஊடகங்களில் ஏகதேசம் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தது.

“ இன்றைய உலகில் அனைவருக்கும் பயங்கர அச்சுறுத்தலாக இருப்பது புவி சூடாக்கப்படுதல் மற்றும் காலநிலை சீர்கேடு அடைதலேயாகும். புவியின் சராசரி வெப்ப நிலை 13.74 டிகிரி செல்சியஸ் ஆக உள்ள இன்றைய நிலையில் இருந்து 15 டிகிரி செல்சியஸ் ஆக மாறும் போது இன்று அழிவைச் சந்திக்கும் மனித சமூகம் பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நிலையை அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் அடைந்து விடக்கூடிய வகையிலேயே உலகளாவிய செயல்பாடுகள் உள்ளன. இயற்கைக்கும், மக்களுக்கும் பிற ஜீவராசிகளுக்கும் விரோதமான இன்றைய நாசகார, பொருளாதார போக்குகளுக்கெதிரான காலநிலை மாற்றம் தொடர்பான தமிழக மக்களின்  உண்மையான குரல் வெளிப்பட அரசுக்கு பொருளாதாரத்தில் போதிய மாற்றங்களை உருவாக்கக் கூடிய  பலமான அழுத்தங்கள் கொடுக்க வெகுஜன மத்தியில் விழிப்புணர்வை         ஏற்படுத்த உரத்தச் சத்தத்தோடு பலமாகக் குரல் கொடுக்க இம்மாநாடு அமைக்கப்பட்டிருந்தது. ஒரே சமயத்தில் 15 அரங்குகளில் கட்டுரைகள் வாசிப்பு, உரைகள் என்று அமைந்திருந்தன. அதில் ஒன்று நான் கலந்து கொண்டது.

“ ஜன சத்தியாக்கிரகா 2012: விளிம்பு நிலை  மக்களின் நில உரிமைக்கான போராட்டத் திட்டமிடல் “ பற்றிய   ஒரு அமர்வும் இருந்த்து.ஜன சத்தியாக்கிரகா பற்றி சென்றாண்டு  மதுரையில் அமுதன் நடத்திய குறும்பட திரைஇடல் ஒன்றின்

ஆவணப்படம் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது

“Bend it like becKam”  படத்தைப் பார்த்தபோதுதான் பெக்காம் என்ற விளையாட்டு வீரர் பற்றி அறிந்து கொண்டது குறித்து வெட்கமாய்ப் போயிற்று. எல்லாத்துறைகள் பற்றியும் அறிந்து கொள்ள இயலாது என்றாலும், அவற்றிலும், அறிமுக அளவிலாவது அக்கறை இருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போது அவரின் தலை அலங்காரம், பெண் நண்பிகள் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். Non violent Action  என்ற தலைப்பில் ஜெர்மனியில் வெளியான ஒரு விவரணப்படத்தின் மூலந்தான் ஜனசத்தியாக்கிரகாவின் பி.வி. ராஜகோபால் பற்றி அறிந்து கொண்டேன்.

 

        புத்தன் வீட்டில் ராஜகோபால் என்றப் பெயரே அவர் கேரளாவைச் சார்ந்தவர் என்பதை வெளிப்படுத்தும். காந்திய வழியிலான தந்தை என்பதால் அவர் பாதிப்பில் வார்தாவில் விவசாயப்படிப்பு முடித்தபின்பு காந்திய வழிகளில் அக்கறை கொள்ளவைத்து கிராமங்களிலும், ஆதிவாசிகள் மத்தியில் அவரின் நடவடிக்கைகளை மாற்றியிருக்கிறது.  ஏக்த பரிஷாத் என்ற அமைப்பை 1991ல் ஆரம்பித்திருக்கிறார். எழுபதுகளில் சம்பல் பள்ளத்தாக்கில் தங்களின் கொள்ளை குணத்தை விடுத்துத் திரும்பிய ‘கொள்ளையர்கள்’ மத்தியில்  அவர்களின் மறுவாழ்வுக்காகப் பணிபுரிந்திருக்கிறார்.

 

            இந்தியாவில் பத்து லட்சம் மக்கள் தினசரி குடிநீருக்காக நிறைய தூரம் பயணப்படுகிறார்கள். சத்துக் குறைபாடு காரணமாக 4 நொடிக்கு ஒரு மரணம் நிகழ்கிறது. உலகம் முழுவதிலும் 25,000 பேர் ஒரு நாளில் சத்துக்குறைபாடு காரணமாக இறக்கிறார்கள். உலகின் பாதித் தொகையில் பாதியினர் விவசாயிகளாய் இருந்தது இன்றைக்கு குறைந்து கொண்டிருக்கிறது. அவர்களின் 25%தான் இயந்திர உதவியால் விவசாயம் செய்கிறார்கள். மற்றவர்களுக்கு கைகள்தான் மூலதனம், இவர்களின் மத்தியிலான இவர்களில் பணியில் ராஜகோபால் அக்கறை  கொண்டிருக்கிறார். அவர்களின் வாழ்நிலை குறித்து அக்கறை கொண்டு அவர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக அவர்களை ஒருங்கிணைக்கிறார்.

 

        மத்தியபிரதேசம், பீகார், ஓரிஸ்ஸா மாநில ஆதிவாசிகளின் மேம்பாட்டிற்காக உழைத்திருக்கிறார். ஜனதேஷ் 2007 என்ற பாதயாத்திரை இவரை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது. இரண்டு லட்சம் பேர் அந்தப் பாதயாத்திரையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலும் பெண்கள் . 6 மாநிலங்களிச் சேர்ந்தவர்கள். அவர்கள் 2007 அக்டோபரில் தில்லியை நோக்கி சாதாரண வண்டிகளிலும், வாகனங்களிலும் புறப்பட்டு பின் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்கள். செல்லும் வழியிலேயே உணவு தயாரித்தலும், ஓய்வும் தூக்கமும் என்று கழிகிறது. வழியில் தொடர்ந்த பிரச்சாரங்கள் பிற மக்களையும் ஏக்தா பரிசாத் பற்றி அறிந்து கொள்ள வைக்கிறது. மார்ச்சில் குவாலியரில் இருந்து தில்லிக்கும் இன்னொரு பாதயாத்திரை  நடத்திருக்கிறது.

 

        இந்த பாதயாத்திரையால் ராஜகோபால் நிலசீர்திருத்தம், நிலம் சரியாகப் பயன்படுத்தப்படுதல், நில சம்பந்தமான ஒற்றை சாளரை முறையில் வழக்குகள் தீர்க்கப்படுதல் ஆகியவை இந்தப் பாதயாத்திரையின் நோக்கப் பிரச்சாரங்களாக இருந்திருக்கிறது. ராமலீலா மைதானத்தில் ஒருவகையில் பாதயாத்திரை வந்த இரண்டு லட்சம் பேர் ‘சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்’. மன்மோகன் சிங் அவர்கள் மத்தியில் உரையாற்றி ’’வெற்று உறுதிகளைத்” தந்திருக்கிறார்கள்.

 

        இந்தப் பேரணியில் இடம் பெற்ற ஜரோப்பிய நாட்டை சார்ந்தவர்களின் கருத்துக்கள் ராஜகோபால் மீதான நம்பிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியது. ஏக்தா ஜரோப்பா என்ற ஜரோப்பிய நாடுகளிலான ராஜகோபாலின் அமைப்பு விரிவாக்கம் அவர்களின் பேச்சில் தொனித்தது.

 

        உலகமயமாக்கலில் ஆதிவாசிகளின் வெளியேற்றம், வன்முறை, உலக விளிம்புநிலை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் ராஜகோபால் 2012ல் ஜனசத்தியகிரகா என்ற காந்தீய பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

“ குலோபலய்ஸ்டு சாலிடரிட்டி”  இதன் பிரதான் முழக்கம். விளிம்பு நிலை மக்களை மனதில் கொண்டு இயங்கும் ராஜகோபால் அவர்களின் செயல்பாடுகளின் ஆத்மார்த்தனத்தை இவரைச் சுற்றி உள்ள குரல்கள் அந்த விவரணப்படத்தில் வெளிப்படுத்தின.   அன்னாஹசரேயைக் கூட சமீப ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம்தான் விரிவாய் விரிவாய் அறிந்து கொள்ளமுடிந்திருக்கிறது.

                                        – சுப்ரபாரதிமணியன்

Series Navigationகொடுக்கப்பட பலிஅமேசான் கதை காட்டில் சூரிய ஒளி